Friday, July 11, 2014

கோவை நாகசாயி ஆலயம்!

nagasai



கோவை, மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் அருகாமையிலுள்ள சாயி கோயிலின் பின்னணி இந்திய சுதந்திரத்துக்கு முன்பிருந்தே ஆரம்பிக்கிறது. நரசிம்மசுவாமி ஜி, ஏ.வி.கே சாரி, வரதராஜ ஐயா என்ற மூவர் இணைந்து கோவையில் 1939ம் ஆண்டில் சாயி இயக்கத்தை உருவாக்கி, கோவையில் சாயியின் உன்னதத்தை மக்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். வரதராஜ ஐயா தன்னுடைய நிலத்தைக் கோயில் கட்டுவதற்காக வழங்கினார். ஆரம்பத்தில் சிறிய ஷெட் போட்டு, பாபாவின் படத்தை மட்டுமே வைத்து வணங்கி வந்தனர். பக்தர்கள் ஒரு நாள் பஜனையோடு வணங்கிய போது, பாபாவின் படம்அருகே வந்த ஒரு நாகப்பாம்பு, பஜனைப்பாடலில் மெய்மறந்து ஆடியது. கிட்டத்தட்ட 36 மணி நேரம் அவர் பாதங்களில் ஏறியபடி படமெடுத்து நின்றதாம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து அதிசயித்த இந்த சம்பவம் மட்டுமே, இந்தக் கோயிலை இன்று ஒரு ஆச்சரியக் கோயிலாக மாற்றியிருக்கிறது.



இப்போது அழகிய மார்பிள் பாபா, கான்க்ரீட் கோயில், பிராகாரம் என்று விரிந்திருக்கும் கோயிலில் கல்யாண மண்டபம், பள்ளிக்கூடம், இலவச ஹோமியோபதி சிகிச்சை மையம் என்று எல்லாம் இருக்கிறது. ஷீரடியில் பாபா பயன்படுத்திய சிறு கொம்பு ஒன்றும், இங்கே பக்தர்களை ஆசீர்வதித்து வளம் சேர்க்கிறது. காலை 8 முதல் மதியம் 1 மணி வரையும், மாலை நான்கு முதல் ஒன்பது மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.
 ஆலயத்தொடர்புக்கு: 04222440688, 97906 74601

இக்கோயிலைப்பற்றி மேலும் விபரமறிய கீழ்க்காணும் இணைப்புகளில் கிளிக் செய்யவும்

 

http://jaghamani.blogspot.com/2011/08/blog-post_18.html

http://www.srinagasai.com/

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...