சாயி
பிரேரணா – பாகம் 10
(Translated into Tamil by Santhipriya)
• விளக்குகள் அனைத்தையும் நான் என் கைகளால் எற்றுவதாக நீ கருதினால் , அனைத்து விளக்கிலும் கடவுளைக் காணலாம்
• மற்ற மதத்தினருடன் நீ ஒற்றுமையாக வாழ்ந்தால் , அனைவரையும் உன்னுடைய நெருக்கமானவர்களாக மாற்றுவேன்
• சாயிராம் என்பதையே நினைத்திருந்தால், நீ செய்யும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
• நீ எனக்காக அன்னதானம் செய்தால், நீ தந்த ஒவ்வொரு பருக்கைக்கும் உனக்கு நல்லதை தருவேன்
• என்னுடைய சமாதியை உன் கரங்களினால் தொட்டு வணங்கினால், உனது விதி ரேகைகளை மாற்றி அமைப்பேன்
• என் சமாதியில் சாயி ராம் சாயி ராம் என நீ குரல் எழுப்பினால், என்னுடைய ஆலயத்தின் அனைத்து சுவர்களிலும் சாயி ராம் என்ற உணர்வு ஒலிப்பதை நீ காணலாம்
• என்னுடைய சமாதியில் நீ சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினால், நீ என்னால் முழுமையாக ஏற்கப்பட்டு விட்டதாகக் கருதுவேன்
• என்னுடைய புனித இடங்களில் நீ தாராளமாகத் தானம் செய்தால், அதை மிகவும் நல்ல செயலாகவே கருதுவேன்
• என்னுடைய ஆரத்தியின் பொழுது நீ கைகளை தட்டிக் கொண்டு இருந்தால் , அந்த கைகளின் உள்ளே தெய்வீகத்தை தருவேன்
• எனக்கு முன்னால் நீ நடனமாடினால் , அந்த நடனத்தின் இசை கருவிகளின் கீதமாக நான் இருப்பேன்
• என்னிடம் முழுமையாக சரண் அடைந்து விட்டால், உன்னுடைய இதயத்திற்கு வலிமை சேர்ப்பேன்
• ராமநவமி பண்டிகையை நீ கொண்டாடினால் நீ கொண்டாடும் அனைத்து பண்டிகைகளிலும் நான் இருப்பேன்
• என் ஆலயத்தை சுற்றி நீ நடந்து வந்து வணங்கினால், அது உன்னுடைய அனைத்து கடவுள்களையும் வணங்கியதற்கு சமமாகிவிடும் .
நன்றி: http://forum.spiritualindia.org
No comments:
Post a Comment