சாயி
பிரேரணா – பாகம் 6
(Translated into Tamil by Santhipriya)
• என்னுடைய பாதயாத்திரையின்போது என் பக்கத்திலேயே நீ நடந்து வந்தால், அனைத்து பாதயாத்திரையிலும் உன்னை நான் அழைத்துக் கொள்வேன்
• என் பாதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு நீ சேவை செய்தால், உன்னுடைய அனைத்து சேவையிலும் நானும் பங்கேற்பேன்
• சீரடிக்கு நடைப் பயணமாக நீ வந்தால், அனைத்து புண்ணிய இடங்களுக்கும் செல்ல உதவுவேன்
• ஒருமுறை என் பாதயாத்திரையில் நீ கலந்து கொண்டால், உன்னுடன் எழுபத்தி ஓர் ஜென்மம் நான் பயணிப்பேன்
• என் பாதயாத்திரையில் ஒன்பது நாள் பயணத்தில் நீ பங்கேற்றால், உன் உயிர் மூச்சாக நான் இருப்பேன்
• என் சமாதியில் நீ துணியை போட்டு வணங்கினால், ஒவ்வொரு இழையின் அளவுக்கு நான் உனக்கு நன்மையை திருப்பித் தருவேன்
• பாதயாத்திரையில் என் பல்லக்கை நீ சுமந்து கொண்டு சென்றால், அதன் சுமையை பூப்போல மாற்றுவேன் .
• பாதயாத்திரையில் என் பாடத்தை மனதில் நினைத்திருந்தபடி ஸ்ரீ சாயி ஸ்ரீ சாயி என கூவிக்கொண்டே சென்றால், நடக்கும் வலியை உன் கால்கள் உணரவே உணராதது
• எனக்காக நீ சுயநலம் இன்றி வேலை செய்தால், உன் கைகள் நல்லவற்றையே செய்யும்
• என்னுடைய சமாதியில் மிகுந்த பணிவோடு முன் தலையால் தொட்டு வணங்கினால், அங்கு என்னையே நீ காணலாம்
• என் சமாதிக்கு முன் வேண்டுவது கிடைக்கும்
• என் சமாதி முன் உன் இரு கைகளையும் நீட்டியபடி வேண்டும் பொழுது, அந்த கைககள் நிறையும் அளவு அனைத்தும் நான் தருவேன்
• என்னை உன்னால் பார்க்க முடியாத பொழுது அழுதால், அந்த கண்ணீரிலேயே இறைவனின் ஓளி கிடைக்கும்
நன்றி: http://forum.spiritualindia.org
No comments:
Post a Comment