சாயி பிரேரணா – பாகம் 7
(Translated into Tamil by Santhipriya)
• காகாட் ஆரத்தியில் நீ கலந்து கொண்டால், அங்கு உனக்கு என் தரிசனத்தைத் தருவேன்
• நீ அங்கு வந்து எனக்கு தேங்காயைத் தந்தால், உன்னை ஒரு யோகி போல மாற்றுவேன்
• என்னுடைய ஆரத்தியில் கலந்துகொள்ள உன் நேரத்தை ஒதுக்கினால், உனக்கு வரும் அனைத்து தடைகளையும் விலக்குவேன்
• என் ஆலயத்தில் உள்ள கொடியை நீ பக்திபூர்வமாகப் பார்த்தால், என்னுடைய சச்சிதானந்த ஸ்வரூபத்தைக் அதில் காண முடியும்
• சீரடி மண்ணின் தூசியை உன் நெற்றியில் இட்டுக் கொண்டால், உன் அனைத்து வேலைகளிலும் நான் உதவுவேன்
• நீ ஆரத்தியில் ஏழும் மணி ஓசையைக் கேட்கும்போது, அந்த ஓளி உன் காதில் சாயி , சாயி என ஒலிப்பதைக் காணமுடியும்
• என்னை நீ ஒரு வெள்ளி இருக்கை மீது அமர வைத்திருந்தால் , உனக்கு அளவற்ற செல்வம் கிடைக்கும்
• இந்த பிரேரணாவை ( மன நிலையை ) என் ஆலயத்தில் வைக்கும் பொழுது, உன்னை நான் என்றும் பாதுகாத்து நிற்பேன்
• இந்த பிரேரணாவை நீ தினமும் காலையிலும் மாலையிலும் படிக்கும்போது, என்னை பற்றி எழுதும் எழுத்தாளனாக உன்னை மாற்றுவேன்
• இந்த பிரேரணாவில் நீ என்னுடைய உணர்வுகளை உணர முடிந்தால், உன்னை நான் ஆத்ம உணர்வு கொண்ட மனிதனக்குவேன் .
• இந்த பிரேரணாவின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்டால், உன்னை தினமும் என்னை வணங்க வழி செய்வேன்
• என்னுடைய இந்த புனித இடத்தில், தூய்மையுடன் நீ இருந்தால் உன்னையும் கங்கையைப் போல தூய்மையானவனாக ஆக்குவேன் .
No comments:
Post a Comment