நேற்றைய தொடர்ச்சி.......
என் மகள் எப்போதும் ஆனந்தமாக இருக்க வேண்டும்
என்பதற்காகச் செய்தேன். ஆனந்தமே பிரம்மம் என்பதை நீ உணர்ந்து கொள்வதற்காகச் செய்தேன்.
ஆனந்தம்.. மன மகிழ்ச்சியாக இருக்கும்போது அல்லவா
வருகிறது? மன மகிழ்ச்சி எப்போது வருகிறது?
உன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறிய
பிறகுதானே வருகிறது?
இதையெல்லாம் நான் செய்து நான் உன்னை ஆனந்தமாக
வைத்துக்கொள்ளவே இவ்வளவு நேரமும் முயன்று கொண்டிருக்கிறேன். நீயோ, நான் முடித்துவிட்ட பிரச்சினைகள் இன்னும் முடியவில்லை
என தவறுதலாகப் புரிந்து கொண்டு, இன்னும்
துக்கத்தில் இருக்கிறாய்..
இது கிடக்கிறது கர்மம்.. என அதைத் தூக்கி உன்
மனதிலிருந்து எரிந்து விடு. அப்போது நீ கலக்கம் அடையமாட்டாய்.. மனிதனாகப் பிறந்தால்
எல்லாவற்றையும் அனுபவித்துதான் தீரவேண்டியிருக்கிறது. கிரகக் கோளாறுகள்
உச்சத்திலிருக்கும்போது அழுது லாபமென்ன? என நினைத்துக்கொண்டு, பேசாமல்
இருந்துவிடு
அப்போது உன்னை எதுவும் பாதிக்காது.
நீ ஆனந்தமாக இருக்கும்போது உனக்குள் தைரியம் பிறக்கும்,
தன்னம்பிக்கைப் பிறக்கும். எதையும்
சாதிக்கலாம் என்ற உற்சாகம் பிறக்கும்.. உன் வேண்டுதல்கள் எல்லாம் பலிக்கும். உனக்கும்
எனக்கும் அவ்வப்போது சண்டை வருவது சகஜம்தானே-
பூஜையறையில் இருக்க வேண்டிய நான் குழந்தைகளின்
விளையாட்டுப் பொருளாக மாறுவதும், நீ
செய்யவேண்டிய பூஜையை குழந்தைகள் செய்யட்டும், அல்லது வேறு யாராவது செய்யட்டும் என விடுவதும் வாடிக்கையாக
நீ செய்கிறாய்.. என்னை இப்படி தவிக்கவிடும் உனக்கு விளையாட்டுக் காட்டலாம் என
எதையேனும் நான் செய்கிறேன்..
இனி நீயும் அப்படியிருக்காதே, நானும் அப்படி நடந்து கொள்ளமாட்டேன்.
ஒரு வீட்டில் மிகவும் கஷ்டத்திற்கு ஆளாகிக்கொண்டிருந்தார்கள்.
சாப்பாட்டிற்குக் கூட கஷ்டம். அந்த நிலையில் அவர்கள் வீட்டிற்குப் போய்
உட்கார்ந்தேன்.. எல்லாம் கொடுத்தேன்..
நாட்கள் நகர நகர செல்வமும் செல்வாக்கும் அவர்களுக்கு
வந்துகொண்டிருக்கிறது.. அவர்கள் என்னை நினைப்பதும் குறைந்துகொண்டு வருகிறது.
தினமும் என்னருகில்தான் இருக்கிறார்கள், ஆனால் என்னை நினைப்பது குறைவு. எனக்கு வேளா
வேளைக்கு சாப்பாடு தருவதில்லை.. அந்த வீட்டம்மாவுக்கு வேலைக்காரர்கள் தேவை.. பண்டை
வீட்டில் யாராவது எடுப்பு சாப்பாடு எடுத்துப் போக ஆட்கள் இருந்தால்தான் எனக்கு சாப்பாடு
அனுப்புவார்.. இல்லாவிட்டால் நான் அன்றைய தினம் பட்டினிதான். யாராவது எதையாவது
கொடுத்தால் கொறித்துக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டும். சில வேளைகளில் இதை
வெறுத்து நான் பட்டினி கிடந்திருக்கிறேன், தெரியுமா உனக்கு?
சம்பாதித்துத் தருவது நான், சாப்பிடுவது அவர்கள்.. பெற்ற பிள்ளைகள் நன்றாக
சாப்பிடவேண்டும், தத்துப்பிள்ளையான
நான் பட்டினி கிடக்கவேண்டும்.. முன்பு என் பெயரை அவர்கள் உச்சரித்ததற்கும்,
இன்று அவர்கள் உச்சரித்து சொல்வதற்கும்
எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன.
இன்னும் பல விஷயங்களை வெளியில் சொல்ல முடியாமல் மென்று
விழுங்கிக்கொண்டு இருக்கிறேன்.. மனசு இருந்தால் உணர்வு வரும்.. அந்தத் தவறை
செய்யாதிருப்பார்கள்..செய்வது தொடர்ந்தால் நானும் அவர்களோடு இருக்க முடியாமல்
வெளியேறிப் போவேன்.
பிள்ளைகள் நன்றி கெட்டுப் போகும்போது பெற்றவர்கள்
நாசுக்காக விலகிப்போவதுதானே முறை?
இந்த விஷயங்கள் போன்று உன்னிடம் நடக்க வேண்டாம் என
எதிர்பார்க்கிறேன்.. நான் மாயை வசப்பட்டுள்ள காரணத்தால் உங்களிடம் வலிய வந்து சேவை
செய்கிறேன். இதைத் தவறாகப் புரிந்து கொள்வதும், என்னைத் தவறாகப் பயன்படுத்திக்கொள்வதும் பாவத்தைச்
சேர்க்கும் செயல்கள்.
என்னை நிந்திப்பதால் உனக்குப் பாவம் வரும். என்னை குறை
கூறாதே.. நீ எனக்கு ஒன்றும் செய்யவில்லை என என்னிடம் குறையாக சொன்னால், உன்னைச் சுற்றியுள்ள அஷ்ட திக்குப்பாலகர்கள்,
உனக்காக அளிக்கப்பட்ட காவல் தெய்வங்கள்
என அனைவரும் ததாஸ்து எனச் சொல்வார்கள். அந்த வார்த்தைகளை நான் நிறைவேற்ற வேண்டிய
நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடும்..
எனவே இனி அப்படி சொல்வதை விட்டு விடு. எனக்கு
செய்தீர்கள்.. செய்கிறீர்கள் என்று சொல்..அப்போது நான் செய்வது உனக்கு சுலபமாகக்கிடைக்கும்.
அதுவரை எதையும் தாங்கும் இதயத்தோடு செயல்படு.. எல்லாம் சரியாகிவிடும்.
எனக்காக அல்லாமல் இந்த உலகத்திற்காக அழுபவர்களிடம்
எனக்கென்ன வேலை என நான் ஒதுங்கிய நாட்கள் முடிவுக்கு வந்து, இனி என் மகளுக்காக.. என் மகளின் சந்தோஷத்திற்காக என்னை
நான் தேய்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் எண்ணமிடுகிற நாட்கள் வரும்.
உனக்காக அழுவதற்காகவே நான் இருக்கும்போது நீ எதற்காக
அழுகிறாய் மகளே- உனக்கு நன்மைகளை வாடிக்கையாகவே நான் செய்து தரும்போது துன்பத்தை
நினைத்து நீ புலம்புவது வேடிக்கையாக அல்லவா தெரிகிறது..-
இமைப்பொழுது உன்னை கைவிட்டேன்.. நீ பெருந்துன்பத்தில்
சிக்கிக்கொண்டாய்.. இனி ஒரு பொழுதும் உன்னை விட்டு விலகமாட்டேன்.. எனவே, இன்று முதல் உனக்கு சோதனை விலக்கம் என்பதை
உணர்ந்து ஆறுதல் கொள்..இழந்தது இழந்ததாகவே இருக்கட்டும். நான் இனி தரும் ஆசீர்வாதங்களை
எண்ணிப் பார்..
உனக்கு சொத்து சுகங்கள் மிக வேகமாக வளரும்.. மக்களும்
உறவுகளும் அதிகமாவார்கள்.. உன்னை நம்பி உன் உதவிக்காகக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும்
அதிகமாகும்.
நீ நினைத்ததெல்லாம் நடக்கும். தொட்டது எல்லாம் துலங்கும்.
ஏனெனில் உன்னைக் கைப்பிடித்து நடத்திக்கொண்டு போகிறவர் உன் தந்தையாகிய இந்த சாயி
அல்லவா? அவரால் உன்னை மறந்திருக்க
முடியுமா, அல்லது மறந்து விடத்தான்
முடியுமா?
இதோ நீ பெருங்களத்தூருக்கு எப்போது வருவாய் என
எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். நிறைய பேசலாம்-
அன்புடன் அப்பா
No comments:
Post a Comment