சாயி
பிரேரணா – பாகம் 9
(Translated into Tamil by Santhipriya)
• என்னுடைய சிலை உனக்கு ஆறுதலைத் தருவதுபோல நீ உணர்ந்தால், உனக்கு முடிவில்லா ஆனந்தத்தையும் அமைதியையும் நான் தருவேன்
• என்னை நீ தொடர்ந்து வணங்கி வந்தால், ஒழுக்கமான முறையில் வணங்குவதை உனக்கு நான் கற்றுத் தருவேன்
• உன்னைக் காப்பவனாக என்னை நினைத்து, நீ அபிஷேகம் செய்தால், ஒவ்வொரு அபிஷேகத்தின் பொழுதும் உன்னுடைய பாதுகாவலனாக நான் மாறுவேன்
• என்னையே நீ அனைத்து கடவுளாக எண்ணிப் பார்த்தால், நான் உனக்கு அனைத்துக் கடவுளுமான ஒரே கடவுளாக நான் மாறுவேன்
• சாயி மந்திரத்தை சிரத்தையாக செய்தால், மந்திரத்தின் பொருளை உனக்கு உணர்த்துவேன்
• நீ என்னை பற்றிய அனைத்து விஷயங்களையும் படித்து தெரிந்து கொண்டால், உன்னை ஞானம் உள்ளவனாக்குவேன்
• நீ என்னிடம் அன்பு செலுத்தினால், உன்னை என் நிழலில் வைத்திருந்து பாதுகாப்பேன்
• என்னை உன் குருவாகக் கருதினால், உனக்கு குரு மந்திரத்தை உபதேசிப்பேன்
• என்னை ஒரு யோகியாகப் பார்த்தால், உன்னால் இந்த அழிவற்ற உலகின் தெய்வீகத்தை பார்க்க முடியும்
• உதி எனும் விபூதியை நீ மருந்தாகப் பார்த்தால் , உன்னுடைய அனைத்து நோய்களையும் விலக்குவேன்
• என்னை ஜோதியாகப் பார்த்தால் , எந்த ஒரு எரியும் விளக்கின் ஒளியிலும் என்னைப் பார்க்க முடியும் .
நன்றி: http://forum.spiritualindia.org
No comments:
Post a Comment