நேற்றைய தொடர்ச்சி......
ஒரு கதை சொல்கிறேன்.
சின்ன வயது முதல் பிரிவு என்பதை அறியாத பாசக்கார
அண்ணனும் தம்பியும் காட்டு வழியே சென்று கொண்டிருந் தார்கள். அங்கே ஒரு விறகு வெட்டியும்
அவனது மனைவியும் அலறிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்து, என்ன விஷயம் என்று கேட்டார்கள்..
’அங்கே
ஆள் கொல்லி கிடக்கிறது. அதைப்பார்த்து பதறி ஓடிவருகிறேhம். நீங்களும் அந்தப்பக்கம் போகாதீர்கள்!’ என்று எச்சரித்து விட்டுச்சென்றார்கள்.
என்னதான் இருக்கிறது பார்த்துவிடுவோமே என்ற எண்ணத்தில்
அண்ணனும் தம்பியும் அந்தப்பக்கம் போய்ப் பார்த்தார்கள். ஒரு மூட்டையில் கட்டுக்
கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அண்ணனும் தம்பியும் சிரித்தார்கள்.
அன்றாடம் கஷ;டப்பட்டு பிழைக்கும் இவர்கள், கஷ்டம் தீர கடவுள் வழிகாட்டியிருக் கிறான் என்று சந்தோஷப் படாமல், இதைப் போய் ஆள் கொல்லி என்று சொல்லிவிட்டு
ஓடுகிறார்களே- என சொல்லிக் கொண்டு அதை எடுத்தார்கள்.
சொந்த ஊருக்குப் போனதும் ஆளுக்குப்பாதியாகப்
பிரித்துக்கொள்ளலாம் என பேசி முடிவு செய்தார்கள். அதுவரை இந்தப் பணத்தை இந்தக் காட்டுப்
பகுதியில் பாதுகாப்பது என்றும் தீர்மானம் செய்தார்கள்.
அண்ணனுக்கு பசித்தது. ’தம்பி,
நீ ஊருக்குள் போய் ஏதாவது சாப்பிட வாங்கிக்
கொண்டு வா.. அதுவரை இங்கே காத்திருக்கிறேன்’ என்றான்.
தம்பி ஊருக்குள் சென்ற பிறகு அண்ணன் மூட்டையைப்
பார்த்தான். இவ்வளவு நிறைய பணத்தையும் வைத்து பெரிய செல்வந்தனாகலாம். தம்பிக்குக்
கொடுத்தால் பாதி செல்வந்தனாக மட்டுமே ஆக முடியும்- என்ற எண்ணம் அவனுள் தோன்றியது..
இதை முற்றிலும் அனுபவிக்க வேண்டும் என்றால் தம்பியைக்
கொன்றுவிடுவதுதான் ஒரே வழி.. என நினைத்தான். விறகு வெட்டி விட்டுச் சென்ற கத்தியை
எடுத்து பத்திரப்படுத்தினான்.
ஊருக்குள் சென்ற தம்பி யோசித்தான். அண்ணனுக்கு பங்கு
கொடுத்தால் பாதி சொத்து போய்விடும்.. அதைவிட உணவில் விஷத்தை
வைத்துக்கொன்றுவிட்டால் மொத்த சொத்துமே நமதாகுமே என நினைத்தான். உணவை வாங்கி கூடவே
நஞ்சையும் வாங்கிக் கலந்து எடுத்துக்கொண்டு அண்ணனிடம் வந்தான்.
‘அண்ணா நான் சாப்பிட்டுவந்து விட்டேன்.. நீ சாப்பிடு..
என்றான்.
’சரி,
அதைப் பரிமாறு’ என்றான் அண்ணன்.
தம்பி குனிந்து சாதத்தை எடுப்பதற்குள் மறைத்து வைத்திருந்த
கத்தியால் அவனை ஒரே வெட்டாக வெட்டிக் கொன்றான். அண்ணனுக்குப் பசித்தது.
சாப்பிட்டு தெம்பாக பணத்துடன் போகலாம் என நினைத்து
சாப்பிட்டான். உயிரை விட்டான்.
உழைக்காமல் பணம் வந்தால் இப்படித்தான் போய்விடும்..
நம்மையும் போக வைத்துவிடும்.
ஆகவே, மேலுக்கு
வர ஆசைப்பட்டால் பாபா அதற்கான தகுதியை வளர்த்துத் தருவார். உன் தேவையைப் பூர்த்தி
செய்து அனைவரை விடவும் செல்வந்தனாக மாற்றுவார்.
நீ விரும்பியவனைத் தருவார், விரும்பிய பெண் கிடைக்கும்.. விரும்பிய வேலையும் கிடைக்கும்..
ஆசைப்பட்ட எல்லாமும் காசில்லாமலேயே கிடைக்கும்.
உனக்குத் தகுதியென்றால்-
நியாயமான ஆசை என்றால்-
பாபா இதை ஆய்வு செய்து உனக்குத் தருவதற்காகவே அவதாரம் செய்தவர்
அல்லவா?
பக்தர்களை தரிசனத்திற்கு அழைக்கிறவர், பொதுவாக நமக்கு ஒரு தேவை என்றால் நாம்தான் ஓடுவோம். சாமியிடம் கூட, நாம் தான் ஓடிப்போய் வேண்டுதல் வைப்போம்.
மாறாக, ‘நான் உனக்கு மாடி வீடு வாங்கித் தருகிறேன். என்
கோயிலுக்கு வந்து நீ மொட்டை போடு’ என்று சாமி சொல்லமாட்டார்.
நாம்தான் ’எனக்கு மாடி வீடு வாங்கித்
தந்தால் கோயிலுக்கு வந்து மொட்டைப் போடுகிறேன்’
என வேண்டுவோம்.
ஆனால் பாபா வித்தியாசமானவர். உனக்குத் தர வேண்டும் எனத்
தீர்மானம் செய்துவிட்டால் உன்னை எப்படியேனும், எங்கிருந்தாலும் உடனடியாக அழைத்து வந்துவிடுவார்.
என் பக்தன் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும்,
சிட்டுக் குருவியின் கால்களில் நு}லைக் கட்டி இழுப்பதைப் போல அவனை என்னிடம்
இழுத்துக் கொள்வேன்.. என்பது இதனால்தான்.
உலகியல் தேவைகளைத் தருகிறவர் ---என்னிடம் உலகியல்
தேவைகளுக்காக வருகிற பக்தர்களை தடை செய்யாதீர்கள். அவர்கள் கேட்பதைப் போல நூறு மடங்கு
ஆயிரம் மடங்கு நான் தரவேண்டியுள்ளது என்பார் பாபா.
அம்மணி என்ற பெண் குழந்தை பாபாவிடம் தினம் பிச்சை கேட்கும்போது,
நான் என்ன உன் அப்பனுக்குக் கடன்
பட்டிருக்கிறேனா, என்ன? என்று திட்டுவார்.
ஆனால் அவளுக்கு தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு ரூபாய்
தருவார்..
இப்படித்தான்.. பாபா நமக்குக் கடன் பட்டவர் போல,
’தரவேண்டியிருக்கிறது’ எனத் தருவார்.
உலகியல் தேவைகளைத் தந்துகொண்டே, நமது மனதை சிறிது சிறிதாக ஆன்மீகத்தின் பக்கமாக
திருப்புவார். நம்மை பக்தி மார்க்கத்தில் வழி நடத்திவிடுவார்.
மாறாக, உலகியல்
தேவை மீது ஆசை வைத்துக்கொண்டு, ஆன்ம
ஞானம் கேட்டால், அப்படிப்பட்டவரை
கிண்டலடித்து அனுப்பி விடுவார். இதைப் பற்றியும் சத்சரித்திரம் கூறுகிறது.
இதன் கடைசி பகுதி நாளை.......
No comments:
Post a Comment