யாரையும் வெறுக்காதவன், அனைவரிடமும் நட்பு
பூண்டவன், எல்லாவற்றிடமும் கருணை உடையவன், அகங்காரம்
விட்டவன், இன்பத்தையும் துன்பத்தையும் சமமாகக் கருதுபவன், பொறுமை உடையவன், எப்போதும்
திருப்தியுற்றவன், எப்போதும் யோகத்தில் நிலை பெற்றவனாய் செயல்
புரிபவன், தன்னைக்
கட்டுப்படுத்தியவன், திட சங்கல்பம்
உடையவன், மனத்தையும் புத்தியையும் என்னிடம் அர்ப்பணம்
செய்தவன் - இத்தகையவனே எனது பக்தன்.
யார் பிறரைத் துன்புறுத்துவது இல்லையோ, யாரைப் பிறரால் துன்புறுத்த முடியாதோ, யார் மகிழ்ச்சி, கோபம், பயம்,
மனக்கிளர்ச்சி இவற்றிலிருந்து
விடுபட்டவனோ, - இத்தகையவனே எனக்குப்
பிரியமானவன்.
எதையும் சார்ந்திருக்காதவன், தூயவன்,
சுறுசுறுப்பு உடையவன், துன்பமோ
இன்பமோ எது வந்தாலும் பொருட்படுத்தாதவன், ஒரு போதும் துயரப்படாதவன், தனக்கான
எல்லா முயற்சிகளையும் விட்டவன், புகழ்ச்சியையும்
இகழ்ச்சியையும் சமமாகக் கொள்பவன், அமைதியாக
இருப்பவன், ஆழ்ந்த
சிந்தனையுடையவன், சிறிதே
கிடைத்தாலும் அதில் திருப்தி கொள்பவன், உலகே தன் வீடாக இருப்பதால் தனக்கென்று வீடு இல்லாதவன், தனது கொள்கையில் உறுதி படைத்தவன்- இத்தகையவனே
எனது பக்தன்.
சாயி பக்தர்கள் எப்படியிருக்கவேண்டும் - இருக்கிறார்கள்
என்பதற்கான அடையாளமே மேற்சொல்லப்பட்டவை.
பொதுவாகவே சாயி பக்தர்கள் அமைதியானவர்களாகவே
காணப்படுவர். அதுவும் நமது குரு சாயிவரதராஜனின் சத்சங்கத்தை கேட்பவர்கள், எப்படிப்பட்ட மனநிலையில் அவரைச் சந்திப்பதற்கு
முன்பு இருந்தாலும், அவரைச்
சந்தித்த பின் சத்சங்கம் கேட்டபின், அவர் கையால் உதி பூசப்பட்டு, உதி வாங்கியபின் பெரும் மாற்றத்திற்கு உள்ளாவார்கள். ஒவ்வொருவர்
உள்ளத்திலும் பெரும் மாற்றம் ஏற்படுவது நிதர்சனம்.
அவருடைய சத்சங்கத்தை ஒரு முறை கேட்டாலே அவர்கள் பெரும்
மாற்றத்திற்கு உள்ளாகிறார்கள். தொடர்ந்து அவரது சத்சங்கம் கேட்டு வருகிறவர்கள்
நிச்சயமாக, ஒரு புது மனிதராக
நடைபோட்டு வருகிறார்கள் என்பதும் மறுக்க இயலாத உண்மை.
எளிமைக்கும் அன்புக்கும் எடுத்துக்காட்டாய் அவர் விளங்கும்போது
நாளுக்கு நாள் சாயி அடியார்கள் பெருகி வருவதும், அவரது போதனைகளை பின்பற்றி மாற்றத்தை தன்னுள்ளே கொண்டு
புது அவதாரமாக சாயி பக்தர்கள் பொங்கி வழிவதும் பெருங்களத்தூழ் பாபா பிரார்த்தனை
மையத்தின் பெருமையன்றோ!
எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், சோதனைகள் வந்தாலும் சாயி பக்தர்கள் ஒரு போதும்
மனம் தளர்வதி;லை. ஏனெனில்
இயக்குவதும், இயங்க வைப்பதும்
சாயி அன்றோ பிரச்சினைகளுக்குப் பின் தீர்வு, சோதனைகளுக்குப் பின் சாதனை- இதுதான் சாயி பக்தர்களின்
அனுபவம்.
பகவத் கீதையின் போதனைகளே சாயிபக்தனின் அடையாளங்கள்.
சாயியைப் பணிவோம், சகல
நலன்களையும் பெறுவோம்.
சாயி
கலியன், நங்கநல்லூர்.
No comments:
Post a Comment