சாயி பிரேரணா – பாகம் 2
(Translated into Tamil by Santhipriya)
• ஒரு கோவிலிற்க்கோ , குருத்வாராவிற்க்கோ அல்லது
மசூதிக்கோ செல்லும்போது அங்கெல்லாம் என்னையே நீ
நினைத்து கொண்டு இருந்தால், உனக்கு அனைத்து
இடத்திலும்
தரிசனம் தருவேன்
• ஒவ்வொரு கணமும் நீ என்னையே நினைத்துக் கொண்டு
இருந்தால், அந்த ஒவ்வொரு கணமும் நான் உன்னை
காப்பாற்றுவேன்
• எனக்காக சிறிது கஷ்டத்தை நீ ஏற்றுக் கொண்டால், உனக்கு
வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டத்தையும் விலக்குவேன்
.
• என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால், நீ
• என்னுடைய புனிதத்தலத்திற்கு (ஷீரடி ) வந்து நீ நடந்தால், நீ
செய்த அனைத்து பாபங்களையும் ஒழிப்பேன்
• உன் கையால் நீ எனக்கு பிரசாதம் படைத்தால், உன் வீட்டிலே
உணவுப் பொருட்கள் நிறைந்தே
இருக்கும்
• என்னுடைய புனிதப் புத்தகத்தை படித்தால், நீ வாழ்வில் பெரும்
வெற்றி அடைவாய்
• என்னுடைய பக்தர்களைக் காணும்பொழுது அவர்களில் நீ
என்னையே
பார்த்தால், உன்னை ஜொலிக்க வைப்பேன்
• என் நாமத்தை ஒரு மணி மாலை அளவில் உருட்டி ஜபித்தால்,
உன்னை சாதுக்களைப்
போன்ற ஞானம் உள்ளவனாக்குவேன் .
• இதயப் பூர்வமாக ஓம் சாயிராம் என ஜபித்தால், உன்னுடைய
அனைத்து வேண்டுகோளையும் நான் கேட்பேன்
• என் மீதே தியானம் வைத்திருந்தால், நீ கவர்ச்சி உள்ளவனாக
மாறிவிடுவாய்
• எனக்காக நீ மௌனம் காத்தால், உனக்கு அமைதி கிடைக்கும்
• நீ என் எதிரிலேயே அமர்ந்து இருந்தால், நான் எப்போதும்
உன்னுடனேயே இருப்பேன்
• சாந்திலால், நீ என்னுடைய துதியை தூய மனதுடன்
செய்ததினால் , உன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக
மாற்றுவேன்
No comments:
Post a Comment