Friday, September 13, 2013

ஷீரடி பாபா வழிபாட்டு முறைகள்


சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விதங்களும் உள்ளன. அவற்றில் ஒரு சில இங்கு உங்கள் கவனத்திற்க்கு

சாய் சத்யவிரத பூஜை

                சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம். பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று,  சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும். 21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.
டெண்டுல்கர் அத்தியாயம் படித்தல்
                பாபா சத்சரித்திரத்தில்,  டெண்டுல்கர் அத்தியாயம்என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.

11 மட்டைத்தேங்காய் பிரார்த்தனை

                கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் 11 மட்டைத் தேங்காய்களை எடுத்துக் கொண்டு பாபா ஆலயத்திற்குச் சென்று,  அவற்றில் 10 தேங்காய்களை துனி’ (அணையா நெருப்பு) முன் வைத்துப் பிரார்த்திக்க வேண்டும். மீதி ஒரு தேங்காயை வீட்டிற்கு எடுத்துச் சென்று, அதிலிருந்து தமக்குத் தெரிந்த ஏதேனும் இனிப்பைச் செய்து பாபாவிற்கு நிவேதிக்க வேண்டும். பிறகு அதிலிருந்து சிறிதளவு பிரசாதமாக உண்டு, மீதியை தானம் செய்தால் அந்த நோயின் கடுமை நிச்சயம் குறைந்து விடும்.

துனி விரத பூஜை

                 நரம்பு, எலும்பு சம்பந்தமான நோய் உடையவர்கள் ஒரு வியாழக்கிழமையன்று துனி விரத பூஜையை ஆரம்பிக்கலாம்.     அதாவது தன்னிடமிருந்த சட்கா எனும் குச்சியால் பாபா உருவாக்கிய அணையா துனி நெருப்பை 21,  48,  54 அல்லது 108 முறை என அவரவர் சௌகரியம் போல் செய்யலாம். பூஜையறையை துடைத்து கோலம் போட்டு மஞ்சள் துணியை பலகையில் விரித்து பாபா படத்தை அதன்மீது வைத்து ஊதுவத்தி ஏற்றி, ஒரு மட்டைத் தேங்காயை வைத்து கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் அவர் முன் வைக்க வேண்டும். புக்கேஎனும் (தேங்காய் துருவல், அவல், சர்க்கரை) கலந்த இனிப்பை நிவேதிக்க வேண்டும். 9 வாரம் இந்த பூஜையை தொடர்ந்து செய்யவேண்டும். முதல் வாரம் மட்டைத் தேங்காயை துனியில் போடவேண்டும். அந்த ஒன்பது வியாழக்கிழமைகளும் அரிசி உணவை தவிர்த்தல் நலம். 9ம் வாரம் மஞ்சள் நிற இனிப்பைத் தயாரித்து எளியோர்க்கு விநியோகம் செய்யவேண்டும்.

                மேற்காணும் வழிபாட்டு முறைகளில் அவரவர் விருப்பப்படி முடிந்த பூஜையினை செய்து சகல வளங்களும் பெறலாம். நாம் தினமும் பார்த்து அதன்படி திட்டமிட உதவும் காலண்டர் வேறு; பாபா வைத்திருக்கும் காலண்டர் வேறு. நம் பிரார்த்தனைகள் நம் காலண்டர்படி இன்ன தேதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்காமல் அவர் மீது நம்பிக்கை வைத்து செயலாற்ற வேண்டும். ஏனென்றால் நமக்கு எதை எப்போது தரவேண்டும் என்பதை அவர் தன் காலண்டர்படி தீர்மானித்து அப்படித்தான் நமக்கு அருள்வார்.


ஜெய் சாய்ராம்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...