சாயி பிரேரணா – பாகம் 4
(Translated into Tamil by Santhipriya)
பாகம் - 4
• நீ என்னுடைய கல்போன்ற கிரீடத்தின் முன் தலை குனிந்து நின்றால், உன்னுடைய பல்லாயிரக்கணக்கான பாபங்களை விலக்குவேன்
• நீ சாயி பக்தன் ஆனால், பக்தி மார்கத்தின் பல வெள்ளங்களில் உன்னை மூழ்கடிப்பேன்
• நீ என்னுடைய படத்தை உன் உடலில் அணிந்து இருந்தால் உன் உடல் முழுவதும் நான் வியாபித்து இருப்பேன்
• நீ என்னைப்பற்றி புத்தகம் எழுதினால் அதை பிரபலமானதாக ஆக்குவேன்
• சீரடியில் வந்து நின்று என் புகழ் பாடினால் உனக்கு அனைத்து நற்குணங்களும் நிறையும்
• நீ பலமணி நேரம் நின்றுகொண்டு இருந்தபடி என்னை தரிசித்தால் , உன்னை அனைத்து புண்ணிய தீர்த்தங்களுக்கும் செல்ல வழி வகுப்பேன் அல்லது அனைத்து புண்ணிய தீர்த்த மகிமைகளை உனக்கு நான் அளிப்பேன்
• நீ என் பாதுகைகளை வணங்கினால், உன்னை என்னுடைய முழு பக்தனாக ஏற்றுக்கொள்வேன்
• நீ எனக்கு முன்னால் விளக்கு ஏற்றினால், உன் வாழ்வும் ஓளி மிக்கதாக ஆகும்
• நீ என்னுடைய வழிபாட்டு தலத்திற்கு வந்து என்னை வணங்கினால், பல பக்தர்கள் அங்கு வந்து வணங்கியதற்கு சமம் ஆக்குவேன்
• என்னை உன் வீட்டில் வைத்து வழிபட்டால் , உன்னுடைய அனைத்து வழிபாட்டிலும் என்னை நீ காணலாம் .
• உனக்கு சீரடிக்கு வர மனது இருந்தால், மீண்டும் மீண்டும் ஷீரடிக்கு வர வழிப்பேன்
• நீ என்மீது தூய பக்தி கொண்டு அன்பு செலுத்தினால், என்னுடைய முழு அன்பும் உனக்கு கிடைக்கும்
• நீ என்னை உன்னுடையவனாக நினைத்தால் , என்னை உன்னுள் நீயே காண முடியும்
No comments:
Post a Comment