.சாயி
பிரேரணா – பாகம் 8
(Translated into Tamil by Santhipriya)
• நீ என் வேலைகளை செய்து வந்தால், நான் உன் வேலைகளை செய்வேன்
• நீ என்னை பகவான் ராமராகப் பார்த்தால், உன்னால் மாயையை வெல்ல முடியும்
• நீ எனக்கு அணிகலன்களை அணிவித்தால், உன்னை மிக அழகுள்ளவனாக மாற்றுவேன்
• என்னையே நீ உன்னுடைய பாதுகாவலனாக நினைத்தால் , உன்னை நான் நிச்சயமாகப் பாதுகாப்பேன்
• என் முன் அமர்ந்துகொண்டு ராம நாமம் ஜெபித்தாயானால் , தர்மம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்ள வழி செய்வேன்
• என்னை நீ ராமனாகவும் , ரஹீமாகவும் பார்த்தால், உனக்கு தர்மம் என்ன என்பதை புரிய வைப்பேன்
• என்னை இந்த உலகைக் காப்பவனாகவும் , அனைத்தையும் கொடுப்பவனாகவும் எண்ணிப் பார்த்தால், உனக்கும் அனைத்தையும் தந்து உன்னை காப்பேன்
• என்னை சீரடியின் மகானாகப் பார்த்தால், என்னிடம் நீ அடைக்கலம் ஆகிவிட்டவனாகக் கருதுவேன்
• என்னிடம் எப்போதும் பக்திபூர்வமாக இருந்தால், உனக்கு பிறப்பில் இருந்தும் மரணத்தில் இருந்தும் விடுதலைத் தருவேன்
• ஷீரடியை நீ புனிதத் தலமாகக் கருதினால், நீயே என்னுடைய பக்தனாவாய்
நன்றி: http://forum.spiritualindia.org
No comments:
Post a Comment