சாயி பிரேரணா – பாகம் 3
(Translated into Tamil by Santhipriya)
• நீ என்னிடம் வந்தால் உன் துயர் நீக்குவேன் , துன்பத்தைக் களைவேன்
• நீ என்னுடைய புனித பூமியான ஷீரடியில் வாழ்ந்தால் , உன் வீட்டையும் புனித இடமாக்குவேன்
• என் பிரசாதங்களை நீ பக்தியுடன் ஏற்றால், உன் நினைவுகளைத் தூய்மை ஆக்குவேன்
• நீ என்னை பக்திபூர்வமாக வணங்கிவந்தால், உன்னை கர்மயோகியாக மாற்றுவேன்
• எனக்கு நடக்கும் ஆரத்தியில் நீ சேர்ந்து பாடினால், உன் நாவில் சரஸ்வதியை வாசம் செய்ய வைப்பேன் .
• என் வழியில் நீ நடந்தால் உனக்கு முன் நடந்து வழி காட்டுவேன்
• எனக்காக நீ துன்பமுற்றோர்க்கு உதவினால், உன் இதயத்தில் ஆனந்தத்தையும், அமைதியையும் தருவேன்
• என்னை உன் வீட்டில் நீ வைத்திருந்தால், உன் வீடு சொர்க்கம் போல ஆகும்
• என்னுடைய உதி எனும் விபூதியை நீ நெற்றியில் தடவிக்கொண்டால், உன் முகமே தெய்வீகக் களை பெறும்
• என்மீது நீ பூக்கள் பொழிந்தால், உன்னுள் நல்ல நினைவுகள் தோன்ற அருள் புரிவேன்
• என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், உன்னை அனைவரும் விரும்புவனாக ஆக்குவேன்
• என் பாதங்களைத் தொட்டு வணங்கினால், நான் உன்னுள் முழுமையாக வியாபித்து இருப்பேன்
• சந்தனத்தை என் நெற்றியில் பொட்டாக வைத்தால், உன்னை அதிர்ஷ்டசாலியாக்குவேன்
No comments:
Post a Comment