Thursday, September 12, 2013

பிரார்த்தனை செய்யலாம் வாருங்கள்!


பிரார்த்தனைகளில் சிறந்ததாக சோல்கர் செய்த பிரார்த்தனையைக் கூறுவார்கள். பிறர் சாயியைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் வந்து வேண்டுதல் வைத்து கோரிக்கை நிறைவேறப்பெற்றவர்கள். ஆனால் சோல்கர், சாயியை நேரடியாக தரிசிக்காமலேயே அவரிடம் வேண்டுதல் வைத்து நிறைவேறிய பிறகு, சீரடி சென்று சாயியை தரிசித்து கற்கண்டு விநியோகம் செய்யப்பட்டு, பாபாவால் உயர்த்தப்பட்டவர்.
சாயி தரிசனம் இதழில் பக்தர்கள் அனுபவங்கள் நிறைய வெளியிடப் படுகின்றன. இதன் நோக்கம், சாயியை அறியாதவர்கள் அவரைப் பற்றி கேள்விப் பட்டு, அவரிடம் வேண்டுதல் வைக்க வேண்டும், வேண்டுதல் நிறைவேறி நன்றாக வாழ வேண்டும் என்பதுதான்.
பிரார்த்தனை செய்வது கடினமல்ல. சாயியிடம் பக்தர்கள் எப்படி பிரார்த்தனைகளை வைத்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் இங்கே தரப்பட்டுள்ளன. இவை சத்சரிதத்தில் இடம்பெற்றவை. இவற்றைப் பார்த்து நீங்களும் பிரார்த்தனைகளை வைத்துப்பயன்பெறலாம்.
கவி தாசகணு ரத்தன் ஜி  சேட்டிடம் கூறியது்:
சீரடிக்குப் போய் வாருங்கள், உங்களுடைய மனோரதம் நிறைவேறும்- பாபாவை தரிசனம் செய்யுங்கள், அவருடைய பாதங்களில் வந்தனம் செய்யுங்கள், உம்முடைய உள்ளத்து ஆசையை அவரிடம் விளக்கமாகச் சொல்லுங்கள்.. அவர் உங்களை ஆசீர்வாதம் செய்வார். போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும். பாபாவின் வழி முறைகள் கற்பனைக்கு எட்டாதவை. நீரே கதி என்று அவரை சரணம் அடையுங்கள், நீங்கள் மங்களம் நிறைந்தவராக ஆகிவிடுவீர்கள்.  (அத் -14)
ரத்தன் ஜி செய்த பிரார்த்தனை் மக்கள் பெரிய சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும்போது பாபாவின் பாதங்களை நாடுகிறார்கள். பாபா உடனே அவர்களை ரஷிக்கிறார். இதுவே நான் கேள்விப்பட்டது. ஆகவே, உங்களை தரிசனம் செய்து ஒரு வேண்டுகோள் விடுக்கவே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய பாதங்களில் என் வேண்டுகோளை வைக்கிறேன். மகராஜ், என்னை புறக்கணிப்பு செய்துவிடாதீர்கள்..
                                                  (அத்–14–87-88)
***

லார்டு ரே என்பவர் மும்பை மாகாண கவர்னராக இருந்த காலத்தில், மும்பை முனிசிபாலிடி கமிஷனராக கிராபோர்டு என்பவர் இருந்தார். இவரது நிர்வாகத்தின் மீது அரசாங்கம் விசாரணை நடத்தியது. அந்த சமயத்தில் புகழ்பெற்று விளங்கிய செல்வந்த் ஸாடே. இவர் தனது சொத்துக்களை எல்லாம் இழந்து தவித்தார்.
தனது வாழ்க்கையை வெறுத்து, துறவு பூண்டு ஒரு லோட்டாவை கையில் பிடித்துக்கொண்டு வெளியே கிளம்பிவிட்டார். அவரது நிலையைக் கண்ட நண்பர்கள் அவருக்கு ஆலோசனை சொன்னார்கள்.
சீரடிக்குச் சென்று சமர்த்த ஸhயீயை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயா சாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள். ஞானிகளுடைய ஸந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலை பாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரி பாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனத்தைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது.
பல தேசங்களில் இருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். ஸாயீயின் பாத தூளியில் புரளுகின்றனர். மகராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப்படிகின்றனர். அவருக்கு சேவை செய்து, விரும்பியவற்றைப் பெறுகின்றனர். இதுவே அவருடைய பிரசித்தியான கீர்த்தி.
குழந்தைகளில் இருந்து கிழவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணை வைத்தால் உம்முடைய துக்கம் நிவர்த்தியாகிவிடும். இக்காலத்தில் சீரடி ஒரு ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவு பகலாக யாத்ரீகர்கள் வந்து கொண்டேயிருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம். பாபா குரு சரித்திரத்தைப் படிக்கச் சொல்லி சாடேவுக்கு அறிவுரை வழங்கி அவரது கஷ்டத்தை தீர்த்தார். (அத் - 18)
***

புணே நகரில் அனந்த ராவ் பாடண்கர் என்ற பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வேத வேதாந்தங்கள், உபநிஷத்துக்கள் அனைத்தையும் கற்றவர். அப்படியிருந்தும் அவரது மனத்தில் நிம்மதியில்லை. அவர் சாயி தரிசனம் செய்ய வந்து பாபாவிடம் சொன்னார், ‘சாயி தரிசனம் மனக்கவலைகளை அகற்றி விடுகிறது என்றும், சாந்தியை அளிக்கிறது என்றும், ஈதனைத்தும் உல்லாசமான தமாஷ்  பேச்சிலேயே நடந்து விடுகிறது என்றும், ஸாயீ மிக சுலபமாக பக்தருக்கு நல்வழி காட்டுகிறார் என்றும் செவி வழிச் செய்தியாக அறிந்தேன். ஆகவே, தவக் கடலான மகராஜரே- உம்முடைய பாதங்களை நாடிப் பணிவுடன் வந்திருக்கிறேன். என்னுடைய மனம் சஞ்சலம் அடையாது நிலையான சாந்தி பெற ஆசீர்வாதம் செய்யுங்கள்..என்றார்.
பாபா இவருக்கு ஒன்பது லத்தி உருண்டைக்கதை சொல்லி

தெளியவைத்தார். இப்படி சிறியதாக பிரார்த்தனை செய்தால் போதும், பிரச்சினைகள் தீரும்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...