சாயி பக்தரான புரந்தரே, சில
பக்தர்களுடன் சேர்ந்து ஒரு பல்லக்கு வாங்கினார். அதில் வெள்ளியினால் பல
வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பாபா அதில் உட்கார விரும்பாததால், பாபாவின் படத்தை அதில் வைத்து ஊர்வலமாக
எடுத்துச்செல்லத் தீர்மானித்தனர்.
பல்லக்கை மசூதிக்குள் கொண்டு வர
பாபா அனுமதிக்கவில்லை. அது வெளியிலேயே கிடக்கட்டும் என்று கூறிவிட்டார். ஒரு இரவு
முழுவதும் வெளியிலேயே கிடந்த பல்லக்கிலிருந்து, குதிரைகள் போன்ற சிறு பாகங்கள் திருட்டுப் போய்விட்டன.
அதனால் மனம் நொந்த பக்தர்கள், காலையில் பாபாவிடம் ஓடிச் சென்று முறை
யிட்டனர். “சில பாகங்கள் மட்டும்தானா திருடப்பட்டன? பல்லக்கு முழுதுமே போகவில்லையா?” என்று கேட்டார் பாபா.
தேவையற்ற ஆடம்பரங்களோடு அவரை வழிபடவேண்டாம்.
அதை அவர் விரும்பமாட்டார். இதய சுத்தியே போதும்!
No comments:
Post a Comment