Tuesday, March 4, 2014

என் பிள்ளையாயிரு! உரிமையை பெறு!



தாமியா என்ற பக்தரிடம் ஒரு மாமரத்தைக் காட்டி, “அதோ பார் மாமரத்தை! எவ்வளவு பூக்கள்! அப்பூக்கள் யாவும் பழங்களாகி விட்டால் எத்தகைய விளைச்சலாகும்! ஆனால் அந்தோ! அப்படியாகிறதா? பல புஷ்பங்கள் காற்றில் கீழே விழுந்துவிடுகின்றன, சில புஷ்பங்களே காய்க்கின்றன! என்றார் பாபா.
     அவரது திருமுன் வருவோர் எதையாவது பெற்றுக்கொள்ளும் என்ற நோக்கத்தில் வருகிறார்களே தவிர, பாபா மீது பக்தி செலுத்தும் நோக்கில் வருவதில்லை. கடைக்காரனிடம் காசு தந்து பொருள் கேட்பது போல நேர்த்திக் கடனுக்காக பூஜைகளைச் செய்கிறார்கள்.
     சிலர் வழிப்போக்கர் போல பாபாவிடம் வருகிறார்கள். சிலர் அயலார் பிள்ளை போல அணுகுகிறார்கள். சிலர், அவரை அறியாமலே சென்றுவிடுகிறார்கள். இன்னும் சிலர், பாபாவை தவறாக அடையாளம் கண்டு கொண்டு வேண்டுதல்களை வைக்கிறார்கள்..
     அண்டை வீட்டுப் பிள்ளைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், ஊராருக்கும் நீங்கள் என்ன செய்வீர்களோ அப்படியே பாபாவும் செய்வார். வேறு எப்படி பாபாவை அணுக வேண்டும்?
     அவருக்கு உரிமையான பிள்ளைகளாக நீங்கள் மாறவேண்டும். பெற்றோரிடம் பிள்ளை எப்படி உண்மையாக நடந்துகொள்கிறதோ அப்படியே எல்லாவற்றிலும் உண்மையோடும், சுத்த மனதோடும் நடந்துகொள்ள வேண்டும். பெற்றோர் மீது பிள்ளை எந்தளவு பாசம் வைக்கிறதோ அப்படிப்பட்ட பாசத்தை உங்கள் தந்தையாகிய ஸாயியிடம் வைக்கவேண்டும். உங்கள் பிள்ளைக்கு எந்த அளவில் நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்களோ, அப்படியே பாபாவும் அவரது பிள்ளைகளாகிய உங்களுக்கு முன்னுரிமை கொடுப்பார். அவரிட மிருந்து உரிமையோடு எதையும் எடுத்துக் கொள்ள இயலும். இல்லாவிட்டால், அவ்வப்போதைக்கு கேட்டதைப் பெற்றுக்கொண்டு செல்லும் வழிப்போக்கரைப் போலத்தான் இருக்க நேரிடும்.
     பாலாஜி பாட்டீல் நெவாஸ்கர் தீவிர சாயி பக்தர். அதிகாலையில் எழுந்து, லெண்டி தோட்டத்திற்கு பாபா நடந்து செல்லும் சாலையையும், சீரடியின் முகப்பு சாலைகளையும் பெருக்கி சுத்தம் செய்வார்.
     பாபாவின் கை கால்கள் கழுவியதும், குளித்ததுமான அந்த நீரை மட்டுமே பருகுவார். வேறு நீரை அருந்த மாட்டார். தனது வயலில் அறுவடை முடிந்தவுடன், மொத்த தானியக் குவியலையும் மசூதிக்குக் கொண்டு வந்து வெளி முற்றத்தில் அம்பாரமாகக் குவித்து, பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்து விடுவார்.
     பாலாஜிக்கு எவ்வளவு தேவை என்பதை பாபா தீர்மானம் செய்து, கொடுத்தனுப்புவதை மட்டுமே ஏற்றுக்கொண்டார். பாலாஜி நெவாஸ்கர் காலமாகும் வரை இந்த வழக்கம் தொடர்ந்தது. இவர் வீட்டிலிருந்து வரும் தானியத்தில் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் பாபா சமாதியாகும் வரை சாப்பிட்டார். அந்தளவுக்கு நெவாஸ்கர் பாபாவையும், பாபா நெவாஸ்கரையும் நேசித்தார்கள்.

     ‘அவருடைய பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும் நிறைவேறும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர். வாழ்க்கையில் நிறைவு பெறுவர். ‘

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...