சிலர் தங்களை பாபா போல நினைத்துக் கொள்கிறார்களே, இது தவறு இல்லையா?
( ஆர். சுந்தரராஜன், பாண்டிச்சேரி)
எல்லோரும் பாபாவாக தம்மை நினைத்துக்கொள்வதில்லை. அவர் மீது பக்தி செலுத்தி, அவரது தன்மையைப் பெற்றவர்கள் மட்டும் அப்படி
நினைத்துக் கொள்வது உண்டு.
எப்படியெனில், கடலில்
கற்களும், சிப்பிகளும் உள்ளன.
அவற்றை மீண்டும் தூக்கி கடலில் போட்டால், அப்படியே இருக்கும். ஆனால், கடல்
நீரைக் காய்ச்சி ஆவியாக்கினால் கிடைக்கிற உப்புக்கல்லை, மீண்டும் கடலில் போட்டுப் பாருங்கள்.
உப்புக் கல் என்ற ஒன்று இருக்கவே இருக்காது. உப்புக்கல்லும் கடல் நீரும்
ஒன்றாக இருக்கும். கடவுள் கடல் - உப்புக்
கல் அவரது பக்தன்.
எல்லோரும் பக்தராவது இல்லை. பக்தர் ஆகிறவர்கள், பலவித இன்னல்களைக் கடந்து, அவரோடு ஒன்றிப் போனவர்கள். தான் என தனித்தவர்கள்
நாமில்லை என்பதைப் புரிந்துகொண்டவர்கள். அவர்கள் பாபாவாக இருப்பதை உணராமல்,
அப்படி நினைப்பது அவர்களின் அறியாமை.
No comments:
Post a Comment