லாலா லக்மிசந்த், ஒரு கிழவர்,
தனது பக்தர்கள் புடை சூழ நின்று
கொண்டிருப்பதாக கனவு கண்டார். தாசகணு மகராஜ் கீர்த்தனை செய்யும்போது வைத்திருந்த
படத்தைப் பார்த்துவிட்டு, அதில்
இருப்பவரே தான் கண்ட கிழவர் என்பதை உறுதி செய்து கொண்டார்.
சீரடிக்கு அவர் ரயிலில் வரும் போது,
சீரடியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த
இரண்டு முகமதியர்களிடம் பாபாவைப் பற்றி விசாரித்தார். அவர்கள், “பாபா ஒரு மாபெரும் ஞானி” என்று சொன்னார்கள்.
லக்மிசந்த் சீரடிக்கு வந்த போது,
அவரைப் பார்த்த பாபா, ‘வஞ்சகமான ஆசாமி. வழியில் பஜனை செய்கிறான்,
மற்றவர்களை விசாரிக்கிறான். ஏன் மற்றவர்களைக்
கேட்கவேண்டும்? நமது கண்களாலே
எல்லாவற்றையும் நாம் காணவேண்டும். மற்றவர்களை கேட்க வேண்டிய அவசியம் என்ன? உனது கனவு மெய்யா? பொய்யா என்று நீயே எண்ணிப் பார்.” என்று கேட்டார்.
No comments:
Post a Comment