ஒருமுறை நெவாஸ்கர் வீட்டு அருகில் இருந்த கொட்டகைக்குள் ஒரு நல்ல பாம்பு
புகுந்து சீறியது. எல்லோரும் பதறிப் போனார்கள். மாடுகள் மிரண்டன. ஆனால் நெவாஸ்கர்
மட்டும் வந்திருப்பது சாயி என்று நம்பினார். அவருக்கு சந்தோக்ஷம் தாங்க
முடியவில்லை.
கைகளை கூப்பி பாம்பை வணங்கினார்.
பாம்பு வடிவத்தில் பாபா வந்திருப்பது நாம் செய்த பாக்கியம் என்று சொல்லி பாம்புக்கு
பால் கொண்டு வந்து வைத்து உபசரித்தார். கிண்ணம் பால் போதாது என்று நினைத்த அவர்,
பெரிய பாத்திரத்தில் பால் கொண்டுவந்து
வைத்தார்.
“பாபா புஸ் புஸ் என்று சீறாமல், உங்களுக்கு தேவையானதை எடுத்துக் கொள்ளுங்கள்,
நிம்மதியாக சாப்பிடுங்கள்!” என்றார்.
பாம்பு திருப்தியடைந்தது. யார் கண்ணிலும்
படாமல் எங்கோ போய் ஒளிந்தது. இப்படிப்பட்ட தூய பக்தரான நெவாஸ்கர் காலமான பிறகு, அவரது மகன் தன் தந்தையின் பணியைச் செய்தான்.
ஒருமுறை நெவாஸ்கரின் வருடாந்திர
ஈமச்சடங்கு நாள் வந்தது. சிரார்த்தத்திற்கு உணவு தயாரிக்கப் பட்டது. ஆனால் எதிர்பார்த்ததற்கும்
மேலாக அதாவது மூன்று மடங்கு அதிகமாக விருந்தினர் வந்து விட்டார்கள்.
நெவாஸ்கரின் மருமகள் விக்ஷயத்தை
தனது மாமியாரிடம் சொன்னபோது, பாபா
மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்த மாமியார், ‘சமர்த்த சாயி பாபா நமக்குப் பின்னால் உறுதியாக
நிற்கும்போது நமக்கு என்ன கவலை? பயப்படாதே!’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.
ஒரு பிடி உதியை எடுத்து உணவு
சமைத்து வைத்திருந்த எல்லா பாத்திரங்களிலும் சிறிதளவு தூவிவிட்டு, அவை அனைத்தையும் துணியால் மூடிவிட்டார்.
மருமகளை அழைத்து, ‘போய் குஷியாக உணவு பரிமாறு. எந்த பாத்திரத்தையும்
முழுமையாகத் திறக்காதே. உணவை அள்ளுவதற்கு தேவையான அளவுக்கு திறந்தால்போதும்.
திறந்து விட்டு உடனே மூடிவிடு. இந்த ஒரு விக்ஷயத்தில் மட்டும் நீ உஷாராகச் செயல்பட
வேண்டும். இந்த சாப்பாடு, சாயி
பாபாவினுடைய வீட்டுக்குச் சொந்தமான சாப்பாடு. ஒரு பருக்கை கூட நமது கிடையாது.
அவமானம் வராமல் காப்பவர் அவரே! பற்றாக்குறை ஏதும் ஏற்பட்டால் அதுவும் அவருடையதே!
நம்முடையதன்று!” என்று சொல்லி அனுப்பினார்.
மாமியாரின் நம்பிக்கை ஜெயித்தது.
வந்த அனைவரும் திருப்தியாக சாப்பிட்டு முடித்த பிறகும் பாத்திரத்தில் இருந்த
சாப்பாடு சிறிதும் குறையவில்லை. இதுதான் உதியின் பெருமை. அனைத்தையும் அவருக்கு
அர்ப்பணிப்பதால் கிடைக்கிற நன்மை.
பாலாஜி நெவாஸ்கர் மாதிரி தூய பக்தியுடையவராக
இருந்தாலும், அவரது மனைவி மாதிரி
அனைத்தையும் அர்ப்பணிக்கிறவர்களாக இருந்தாலும், பிரச்சினை என்று வந்துவிட்டால் கலங்கி விடுகிறோம்.
சத்சரித்திரம் என்ன சொல்கிறது் ‘அவருடைய
பாதங்களில் நம்பிக்கை வைத்து நித்திய நியமமாக உதீயைப் பூசி, நீருடன் கலந்து அருந்துபவர்களுடைய மனோரதங்கள் அனைத்தும்
நிறைவேறும். அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு புருஷார்த்தங்களையும் அடைவர்.
வாழ்வில் நிறைவு பெறுவர். உலகியல் விக்ஷயங்களிலும் ஆன்மிக விக்ஷயங்களிலும் குஹ்யமாக
மறைந்திருக்கும் அர்த்தங்கள் அவர்களுக்கு வெளிப்பாடாகும்.
உதீயின் சம்பந்தம் அவர்களுடைய பஞ்ச
மஹா பாவங்களையும்
அவற்றைச் சார்ந்த கிளைப் பாவங்களையும் ஒட்டு மொத்தமாக நிர்மூலமாக்கி விடும்.
உள்ளும் புறமும் தூய்மையடையும்!’
பாபாவின் உதியை வைத்துக் கொள்ளுங்கள்.
பிரச்சினை வரும்போது அதைப் பயன்படுத்திப் பாருங்கள், பலன் கிடைக்கும். கவலைப் படுவதை நிறுத்துங்கள். கவலைப்படும்
நிகழ்ச்சியை தவிர்த்து விட்டாலே பல பிரார்த்தனைகள் பலன் தருபவனவாக ஆகிவிடும்
என்பது பலரது அனுபவப்பூர்வமான உண்மையாகும்.
No comments:
Post a Comment