உலகம் மாறிவருகிறது. எதிர்கால சந்ததிகள் என்னவாகப் போகிறார்களோ என்ற பயம் எல்லோருக்கும் இருக்கிறது. பந்த பாசங்களும், அன்பும் அரவணைப்பும் குறைந்து வரும் நிலையில், நமது சந்ததியினர் வேலையையும், பணத்தையும் கட்டிக்கொண்டு, படாடோபம் என்ற பெயரில் வாழ்க்கையைத் தொலைத்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு நமது மூதாதையர் குழுவாக வாழ்ந்தார்கள். நம் பெற்றோர் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். நாம் தனிக் குடும்பமானோம். நம் பிள்ளைகள் தனித்தனியாக வாழ்கிறார்கள். வேலை நிமித்தமாக மகன் ஒரு இடத்திலும், மருமகள் ஓரிடத்திலும், பேரப்பிள்ளை விடுதியிலும், பெரியவர்கள் முதியோர் இல்லத்திலும் வாழ்கிறார்கள். சமூகம் தனி மனிதன் என்ற பிரிவு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
எவ்வளவு சொத்து சேர்த்தாலும், பணமிருந்தாலும் மனதில் நிம்மதியில்லாத நிலை வந்துவிட்டது. இவர்கள் இப்போது மதுபானக் கடைகளுக்கும், கேளிக்கை விடுதிகளுக்கும் செல்லலாம். மனம் போன போக்கிலும் நடக்கலாம். கடைசியில் ஒரு காலம் இருக்கிறது. அது கடவுளைத் தேடி வரும் காலம்
எங்கும் கிடைக்காத நிம்மதியை பெறுவதற்காக கடவுளைத் தேடி ஆலயத்திற்க்கு வருவார்கள். இப்போது எல்லா இடமும் அடுக்கு மாடி வீடுகளாவதால் ஆலயம் அமைக்கமாட்டார்கள். அவர்களால் முடியாது. ஆனால், நாம் நமது பிள்ளைகளுக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் நன்மை செய்யவே வாழ்கிறோம். இவர்கள் செம்மையாக வாழ, ஆலயம் செய்வோம். ஆளுக்கொரு ஆலயம் செய்ய முடியாது. ஊருக்கு ஒரு ஆலயம் செய்யலாம். ஊருக்கு ஒரு ஆலயம் அமைக்க முடியாவிட்டாலும், நகருக்கு ஒரு ஆலயமாவது அமைக்க நம்மால் முடியும்.
இந்த சேவையை எல்லோரும் சேர்ந்து செய்யலாம். வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கு அருகே கீரப்பாக்கம் என்ற கிராமத்தில் மலைப்பகுதியில் பாபாவிற்க்கு மட்டுமன்றி, பக்தர்கள் வணங்குகின்ற மூர்த்திகளுக்கும் ஆலயம் அமைகிறது.
முதன்முதலாக விநாயகர் ஆலயம் மலையின் மலையின் கீழ்ப்பகுதியில் அமைகிறது.
ஆலயம் அமைக்க விருப்பம் உள்ளவர்கள், எங்களை தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் திருக்கரங்களால் ஆலயம் அமைத்து மக்களுக்கு சேவை செய்யுங்கள்.
இது எதிர்காலத்திற்க்கு நாம் செய்கிற உண்மையான தொண்டு. ஒரு செங்கல் துண்டு, ஒரு இரும்புத்துண்டு என துண்டு துண்டுகளாக இணைத்து தூண்களையும், கோயிலையும் உருவாக்கலாம். வாருங்கள்! உங்கள் கைங்கர்யத்தோடு நாங்கள் பொறுப்பெடுத்து ஆலயம் அமைக்க முயற்சித்து வருகிறோம். முழு மனதோடு இந்தக்கோயில் திருப்பணிக்கு அழைக்கிறோம். முடிந்தவர்கள் உதவலாம். முடியாதவர்கள் பிரார்த்திக்கலாம்
விவரங்களுக்கும் நன்கொடைகள் அனுப்பவும்
SHIRDI SAI SAMADARMA SAMAJ, 3E/A, SECOND STREET, BUDDHAR NAGAR, NEWPERUNGALATHUR, CHENNAI - 600 063. Phone No. 9841203311
மேலதிக விபரங்களுக்கும், சாயி பேராலயம் பற்றி அறியவும்
No comments:
Post a Comment