நேற்றைய தொடர்ச்சி
பாபா எதற்காக அழைப்பார்? உங்களுக்கு
தரவேண்டிய அருளைத் தருவதற்காகத்தான் அவர் அழைப்பார். அவரது அழைப்பு என்றைக்கும்
வீண் போகாது.. எனவே, நம்பிக்கையோடு
நீங்கள் அவரிடம் பிரச்சினைகளை முறையிட்டுப்பிரார்த்தனை செய்யலாம்.. அது நிச்சயம்
நடக்கும்..
உங்கள் பிரார்த்தனை தள்ளிப் போகிறது என்றால், இதை ஒரு பொருட்டாக நினைக்காதே! அல்லது நீ தவறுதலாக
வேண்டுகிறாய் என்று பொருள்..
கண்டிப்பான ஒரு ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.
அப்போது மாணவர்களிடம், ’தூங்கும் முன்பு நீங்கள் மனதார வேண்டிக்கொண்டால் இறைவன் நிச்சயம் உங்கள் வேண்டுதலை
நிறைவேற்றுவார். நீங்கள் தினமும் அப்படியே வேண்டிக் கொள்ளுங்கள்’ என்றார்.
ஒரு மாணவன் சொன்னான், ‘ஐயா, நான் தினமும் அப்படித்தான் வேண்டிக் கொள்கிறேன்.. ஆனால்
கடவுள் என் பிரார்த்தனையை கேட்பதேயில்லை’
’என்ன
வேண்டிக்கொண்டாய்?’
’பிரார்த்தனையை
வெளியே சொன்னால் பலிக்காது என்கிறார்களே’
’பரவாயில்லை சொல்’
’சொன்னால் நீங்கள்
வருத்தப்படுவீர்கள்’
’வருத்தப்படமாட்டேன்...
சொல்’
’நீங்கள் இந்தப்
பள்ளியை விட்டு மாற்றலாகிப்போகவேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்கிறேன்.. இதுவரை
நடக்கவில்லையே’ என்றான் மாணவன்.
’ஓ! அது உன்
பிரார்த்தனையில்லை.. என் பிரார்த்தனை’ என்றார் ஆசிரியர்.
இந்த இருவரது பிரார்த்தனையையும் பாபா கேட்கவில்லை
என்றால் அதற்கு காரணம் உள்ளது. கண்டிப்பான ஆசிரியராக இருக்கிறார் என்றால், அவர் எல்லாவற்றிலும் சரியாக இருக்கிறார் என்று
அல்லவா பொருள்- அத்தகைய ஆசிரியர் அறிவாளி மாணவர்களுக்கு மட்டும் நெருக்கமானவராக இல்லாமல்
பின் தங்கிய மாணவர்களையும் முன்னேற்றும் விதத்தில் குறிப்பாக தன்னை வெறுக்கும்
மாணவன் விரும்பும் விதத்தில் அவனை மாற்றுவதற்காக அவர் அங்கேயே இருந்தாக வேண்டும்
என்பதால் அந்தப் பிரார்த்தனையை பாபா கேட்கவில்லை...
ஆனால் நாம் அப்படி வேண்டிக் கொள்ளப் போவதில்லை.. நமது
பிரச்சினைகள் தீரவேண்டும்.. நாம் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் வேண்டிக்கொள்ளப்
போகிறோம்.. அதை நிச்சயம் பாபா கேட்பார்..
சரி, பாவத்தைப்
போக்க நாம ஜெபம், பிரார்த்தனை
என்று சொன்னீர்கள்.. புண்ணியத்தைச்சேர்க்க எதையும் சொல்லவில்லையே என்று கேட்கிறீர்களா? பசித்த உயிரினங்களுக்கு, அதாவது விலங்குகளுக்கு வயிறார உணவு கொடுங்கள்..
பசித்தவர் முகம் பார்த்து ஒரு தம்ளர் தண்ணீரையோ, மோரையோ கொடுங்கள்... சுருக்கமாக அன்னதானம் செய்யுங்கள்..
எப்படிப்பட்ட பாவமாக இருந்தாலும் கரைந்து புண்ணியம் உங்கள் கணக்கில் ஏறும்.பாவம்
கரைந்தாலும் புண்ணியம் சேர்ந்தாலும் நன்மை உங்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்று
பொருள்..
இதோ அவர் உங்கள் இதயவாசல் அருகே நிற்கிறார். அவரை நாம
ஜெபத்தோடும், பிரார்த்தனையோடும்
அழைத்துவந்து நம் கோரிக்கைகளை கேட்கவைப்போம்.. வேண்டியதை விரைந்து பெறுவோம்..
கருணையே உருவான நம் சாயி மாதா, நாம்
வேண்டியதை வேண்டியபடி நிச்சயமாகத் தருவார். நம்மை அவர் ஆசீர்வதிப்பார்.
சாயி வரதராஜன் சத்சங்கத்தில் கேட்டது.
சாயி வீரமணி
No comments:
Post a Comment