Tuesday, June 18, 2013

பாபா இருக்க பயம் எதற்கு





ஒரு குடும்பத்தாருடன் என்னை சந்திக்க அவர்கள் பையனும் வந்திருந்தார். பிரார்த்தனை செய்து அவர்களுக்கு உதி வைத்தபோது அந்தப்பையன் என்னை ஒரு மாதிரியாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. அவனது பார்வை அந்நியன் படத்தில் விக்ரம் பார்ப்பது போல அடிக்கடி கோபமாகவும் புன்சிரிப்பாகவும் மாறுவதை கவனித்தேன். அவனை அருகில் அழைத்து என் பக்கத்தில் உட்கார வைத்தேன். எனது உடலின் முடிகள் உயர்ந்து சிலிர்த்துக் கொள்வதையும் உணர்ந்தபோது, அவனை ஏதோ ஒரு சக்தி ஆட்கொண்டிருப்பது தெரிந்தது.
அவனிடம், என்ன? என்னை அடிக்க வேண்டும் போலிருக்கிறதா? என்றேன்.
ஆமாம் என்றார்.
எப்போதிலிருந்து?
என் தலை மீது கை வைத்து ஆசீர்வதித்த போதிலிருந்து
நல்லது. நீ யார்? எதற்காக இந்த இடத்திற்கு வந்தாய்? என்றேன்.
நான் கருப்பண்ண சுவாமி வந்திருக்கிறேன்
சாய் ராம்! சாய்ராம்! நல்லது. என்ன சத்தமிட்டு கத்த வேண்டும் போலிருந்தால் கத்தலாமே! எதற்காக அடக்கி வைக்கிறhய்? என்றேன்.
அடி வயிற்றிலிருந்து இடி போன்ற முழக்கத்துடன் அவன் சத்தமிட்டான். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த, வினோத் போன்ற பக்தர்கள் பயந்தார்கள்.
நீ என்ன எப்போது பார்த்தாலும் சாயி ராம், சாயிராம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாய்..? ஏன் என் பெயரைச் சொல்லவில்லை? நான் வந்தபோது என்னை ஏன் கும்பிடவில்லை? என்றான்.
நீ நிஜமாகவே கருப்பண்ண சுவாமியா?’ என்றேன்.
ஏய்! என்றான் அலட்டலும் ஆக்ரோஷமுமாக.
சீ.... இங்கே சத்தமெல்லாம் போடக்கூடாது. இது குரு ஸ்தலம். நீ நிஜமாக கருப்பண்ண சுவாமியாக இருந்திருந்தால், நான் யார் என்பதை அறிந்திருப்பாய். குரு ஸ்தானத்தில் உட்கார்ந்துள்ள என்னைத்தான் நீ நமஸ்கரித்திருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை. அடுத்து, சாயியும் கருப்பண்ணசுவாமியும் வேறு வேறு இல்லை, எல்லா பெயர்களிலும், வடிவங்களிலும் இருக்கிற அனைத்தும் ஒரே கடவுள் என்பதை நானே உணர்ந்திருக்கும்போது, கடவுள் என்கிற உனக்கு இது தெரிந்திருக்க வேண்டும். நீ கடவுளாக இருந்திருந்தால் யார் மீது இப்போது ஆரோகணித்திருக்கிறhயோ அவர்களது குடும்பத்தை பாதுகாத்திருக்க வேண்டும். எதையும் செய்யாமல் அவர்களை தவிக்கவிட்டு என்னிடம் அனுப்பியதிலிருந்தே தெரியவில்லையா நீ யார் என்று?என்றேன்.
நான் ஏன் செய்ய வேண்டும்? ஏன் காப்பாற்ற வேண்டும்? அவர்கள் என்னைக் கண்டு கொள்ளவே இல்லை. குல தெய்வமான எனக்கு வழிபாடு செய்யவில்லை’ ‘ என்றான்..
யாரும் கண்டுகொள்ளவில்லை என்பதற்காக சந்திர சூரியன் தராமல் போகின்றனவா? மழை தரம் பார்த்து, தீயோரைத் தவிர்த்து நல்லோர்க்கு மட்டும் பெய்கிறதா? பாலானது நல்லோர்க்கு, அமிர்தமாகவும் தீயோருக்கு நஞ்சாகவும் மாறுகிறதா? இல்லையே அப்படியே, தாயும் நல்ல மகனையும் தீய மகனையும் தரம் பிரித்துப் பார்க்கிறாளா? அப்படியே கடவுளும் நல்லோரையும் தீயோரையும் கைவிடாமல் காப்பாற்றுகிறது. அவரவர் செய்கைக்கு ஏற்பவே பலன் விளைகிறது! அவ்வளவே! இவையெல்லாம் உன் போன்ற காவல் தெய்வங்களுக்குத் தெரிவதில்லை. முதலில் உங்களுக்கு ஆத்ம ஞானம் பற்றிய பாடம் எடுக்க வேண்டும்..
போ. போய் அமைதியாக உட்கார். மக்களை அழிவிலிருந்தும் தீமையிலிருக்கும் காப்பாற்றி சனாதன மதம் அழியாமல் செய்என்றேன்.. அந்தப் பையன் அமைதியானார். அவர் மீது இருந்த கருப்பண்ண சுவாமி மறைந்துபோனார்.
குல தெய்வ வழிபாடு கட்டாயமாக்கப்பட்டுள்ள நமது பாரம்பரியத்தைப் பின்பற்றுங்கள். அதை தவிக்கவிடாதீர்கள் என பையனுடன் வந்தவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பினேன்.
மறுவாரப் பிரார்த்தனையின்போது கருப்பண்ண சுவாமியின் படம் போட்ட ஒரு மஞ்சள் பையை எடுத்துவந்த ஒருவர் என் எதிரில் அமர்ந்திருந்தார்.
அப்போது நான் சொன்னேன்.  பாபா ஒவ்வொரு போட்டோவிலும் நான் உயிரோடு இருக்கிறேன்என்றார். இதோ கடந்த முறை என்னோடு வாதம் செய்த கருப்பண்ண சுவாமி, இன்று பிரார்த்தனைக்கு முதல் ஆளாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார் என அந்தப் பையை பிறருக்குக் காண்பித்தேன்.
கிராம தெய்வம், குல தெய்வம், இஷ்ட தெய்வம் என எந்தப் பெயரிலிருந்தாலும் இறைவன் ஒருவனே,  அவனை நாம்,  நமக்காக விண்ணிலிருந்து மண்ணில் இறங்கிவந்த சாயியாகப் பார்த்துவணங்குகிறோம். பாபாவும் தானே சகல தெய்வமாகவும், ஆவியாகவும்கூட இருப்பதாகச் சொல்கிறார். இதைப் பற்றிய ஒரு நிகழ்வினை நாம் பார்க்கலாம்.
அது ஒரு பவுர்ணமி தினம். நள்ளிரவு நேரத்தில் எல்லா இடங்களிலும் முழு நிலவு தன் ஒளியைப்பாய்ச்சிக்கொண்டிருந்தது. குண்டூசி விழுந்தாலும் தெரியக்கூடிய அளவு ஒளிப்பிரகாசமாக அந்த வெளிச்சத்தில், தீட்சித் வாடாவுக்குப் பக்கத்திலிருந்த ஆல மரத்தின் அடியில் மலஜலம் கழிப்பதற்காக ஒரு பக்தர் வந்தமர்ந்தார். அவர் வேறு யாருமல்ல, திருமதி தர்கட் அவர்களின் மகன்தான்.
அப்போது சருகுகளில் இருந்து ஒரு சலசலப்புச்சத்தம் கேட்டது. ஏதேனும் பாம்பாக இருக்கக் கூடும் என்று நினைத்து பக்தர் உஷாரானார். அந்த இடத்தைக் கூர்ந்து பார்த்தபோது, வெள்ளை உடை உடுத்திய ஓர் ஆவி நின்றிருப்பது தெரிந்தது.
இது என்னுடைய பகுதி.. இங்கிருந்து போய்விடுஎன்று அது சத்தம் போட்டது. இதைக் கேட்டதும் பக்தருக்கு உடல் நடுங்கத் தொடங்கியது. அந்த ஆவி மீண்டும் பேசத் தொடங்கியது.
‘ நீ அந்தக் கிழவனின் பாதுகாப்பில் இருப்பதாக நினைக்கிறாயா?’, என்றது. பக்தர் எழுந்து நின்றார். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேசினார்.
ஆமாம்.. தைரியமிருந்தால் பக்கத்தில் வந்து நீ யார் என்று காட்டு என்று கூறினார்.
அந்த ஆவியும் அவரை நோக்கி நகர்ந்தது. இரண்டு மூன்று அடி தூரத்திற்குள் வந்தபோது, அவர்,  ‘அங்கேயே நில்.. பாபாவைக் கூப்பிட்டால் அவர் வந்து உன்னை சாம்பலாக்கி விடுவார்’ ,  என்று எச்சரித்தார். இதைக் கேட்டவுடனே அந்த ஆவி உயரக் கிளம்பி மரத்தில் மறைந்துபோனது. வாடாவுக்குத் திரும்பிய பக்தர், இதைப் பற்றி தனது தாயாரிடம் கூறவேண்டும் என நினைத்தார்.
இதைக் கேட்டு அவர் பயப்படுவார் என்பதால், சொல்லாமல் விட்டுவிட்டார். மறுநாள் காலையில் குளித்துவிட்டு, துவாரகாமாயி வந்து பாபாவின் முன்னால் அமைதியாக அமர்ந்தார்.
பாபா அவரிடம்,  ‘பாவு, நேற்றிரவு எதைக் கண்டாய்?’, என்று கேட்டார்.
பாபா..நான் ஒரு பேயைக் கண்டேன்’ ,
ஹரே பாவு.. அது நான்தான் என்றார் பாபா.
பக்தர் குழம்பியவராக,  ‘இல்லை பாபா.. அது ஒரு பேய். அதனுடன் நான் பேசினேன் என்றார்.
அது நான்தான்.. சந்தேகமிருந்தால் உன் தாயாரிடம் கேள்’ , என்றார் பாபா.
ஆமாம் மகனே! அது பாபாதான். அவர் மனிதர், பறவை, விலங்குகளாக மட்டுமல்ல. ஆவியாகவும் இருப்பவர்... எல்லா ஆவிகளும் பாபாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன’, என்றாள்.
பார்த்தீர்களா? இப்படித்தான் என் முன் எந்த ஆவி வந்தாலும் சாயி, பேசாமல் போங்கள் என்பேன். அது எப்படிப்பட்ட ஆவியாக இருந்தாலும் போய்விடும். சாயியின் பக்தர்கள் நலமடைவார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...