நேற்றைய தொடர்ச்சி
சொல்
இன்றைக்கு வருகிற நிறைய பிரச்சினைகள், அவர் சொன்னார், இவர் சொன்னார் என்பதில்தான் ஆரம்பித்து பரவுகிறது.
நின்று நிதானித்து பிறர் கூற வருவதை கவனித்து உணர்ந்துகொண்டால் நாம் எப்படி பதில்
பேசலாம் என்பதையும் அறியலாம்.
நாம் சொல்லுகிற வார்த்தைக்கு பதில் சொல் சொல்ல
முடியாதவாறு நிதானித்து வார்த்தைகளை உருவாக்கிப் பார்க்க வேண்டும்.
உன் போன்ற பெண்களோ, உன் பெண்ணோ கூட இன்றைக்கு தவறான பாதைக்குப் போவதற்கு முக்கியக்
காரணம், அவர்கள் நிறைய நேரம் போன்
மூலம் பேசிக்கொண்டிருப்பதுதான்.. இத்தகைய பேச்சுக்கள் மூலம் ஏமாந்து போவதும் உன்
போன்ற பெண் பிள்ளைகள்தான். எனவே, தேவையற்ற
விதத்தில் எதையேனும் சொல்வதற்காக அடிக்கடி போன் போட்டுப் பேசுவதைத் தவிர்த்துவிடு.
கூடிய வரையில் தகவலை நேரில் சொல்லி அனுப்பு..அல்லது பிறர் மூலம் கூறு.
உன்னோடு அடத்திற்குப் பேசுபவர்கள், அதிக அளவில் நெருங்கி வர நினைத்துப்
பேசுபவர்கள் ஆகியோரிடம் நறுக் என ஒரு வார்த்தையில் பதில் சொல்.. நானும் கொஞ்சம்
பேசிப் பார்க்கலாமே என்று பேச ஆரம்பித்தால் சிக்கல் வந்துவிடும்.
இன்றைக்கு கோர்ட் படிகளில் ஏறிக்கொண்டு இருக்கும்
தம்பதிகளைப் பாரேன்.. அவர்களில் பலர் காதலித்துத் திருமணம் செய்துகொண்டவர்களாக இருப்பார்கள்.
திருமணத்திற்கு முன்பு அவனோ, அவளோ
பேசிய பேச்சில் மயங்கி, தனது பெற்றோர்
சொற்களை மீறி திருமணம் செய்துகொண்டிருப்பர். கடைசியில் உண்மை சொரூபத்தை அறிய வரும்
போது, அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல்
வாழ்க்கையையே இழந்துவிடுவார்கள்.
இந்த நாக்கு இருக்கிறதே அது நரகத்தையும் உருவாக்கும்,
சுவர்க்கத்தையும் உருவாக்கும். உனது நாக்கு
உன் குடும்பத்தாருக்கு சொர்க்கத்தை உண்டாக்கினால் போதும். மற்ற நேரத்தில் அதில் இருந்து
ஒரு வார்த்தையும் பிறக்காமல் பார்த்துக்கொள்வதுதான் நலம்.
மகளே! உன் வாயிலிருந்து புறப்படுகிற சொல் எப்போதும்
குறைந்த ஸ்ருதியில் இருக்கவேண்டும். உச்சஸ்தாயியில் சொல்வது பிரச்சினையை உண்டாக்குவதால்,
சத்தத்தைக் குறைத்துப் பணிவோடும்,
கனிவோடும் பேசவேண்டும். நமது தகுதிக்கு
சமமானவர்கள், நம் வயதுக்கும், தகுதிக்கும் கீழானவர், நம்மோடு மணிக்கணக்கில் அமர்ந்து பேசுகிறவர்கள், அலப்புகிற புத்தியுள்ள மக்கள், குழந்தைகள் ஆகியோருடன் எதையும் சொல்வது
உசிதமானது அல்ல. உனக்கு மேல் தகுதியுள்ளவர்களிடத்தில் அவர்களைப் பற்றியோ, உன்னைப் பற்றியோ மிகைப்படுத்தி, அல்லது எதையேனும் சொல்லி வைப்பதும் ஆபத்து. அதாவது
உன் வாயைத் திறந்து எதையும் நீ சொல்ல வேண்டாம் என்பதே என் கருத்து.
ஏற்ற நேரத்தில் ஏற்ற வார்த்தைகளை சொல். அதிலும் பிறர்
நலம் சார்ந்த வார்த்தைகளைச்சொல்வது மிகவும் நல்லது. அதைத்தான் வெள்ளித் தட்டில்
வைக்கப்பட்ட தங்கப் பழம் என்பார்கள்.
உனது சொல் ஒன்றிரண்டாக இருக்கட்டும். அதற்கு மேல்
வந்தால் அதில் பாவங்கள் சேர்ந்து விடும்.. பிரச்சினைக்கு வித்திடும்.
என்ன மகளே! அப்பா இந்தக் கடிதத்தில் எனக்கு தேவையில்லாத
விஷயத்தைப் பற்றி சொல்லி வீணடித்துவிட்டார் என்று நினைக்கிறாயா? என் வார்த்தைகளை
நின்று நிதானித்து உணர்ந்து பார். நான் சொல்வதில்தான் வாழ்க்கையே அடங்கி இருக்கிறது
என்பதை அறிவாய்.
அடுத்த முறை சந்திக்கலாம் குழந்தாய்!
அன்புடன் அப்பா
சாயி பாபா

No comments:
Post a Comment