‘என்னை நம்பி என்பால்
லயமாகிற என்
பக்தனின் எல்லாப் பொறுப்புகளையும்
நான் ஏற்கிறேன்.’ பாபா
என்னிடம் கூட்டுப்பிரார்த்தனைக்காக வரும் பெரும்பாலான
சாயி பக்தர்கள் கடன் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதாகவும், அதிலிருந்து மீள வழி தெரியாமல் தற்கொலை செய்துகொள்ளும்
முடிவுக்கே வந்துவிடுவதாவும் சொல்வார்கள்.
தற்கொலை எதையும் சாதித்துத் தராது என்பதை எடுத்துச்
சொல்லி அவர்களை பாபாவின் பக்கம் திருப்பிவிடுவேன். அவ்வப்போது எதை எப்படிச்
செய்தால் கடன் அடையும், வருமானம்
எப்படி வரும் என்றெல்லாம் கேட்பார்கள்.
நான் சொன்னால் நம்பமாட்டீர்கள்..
பாபாவை நம்பி அவரிடம் தன்னை ஒப்படைத்துவிடுகிறவனின்
கடனை அவர் அடைத்துவிடுகிறார். இதை நான் அனுபவமாகவே உணர்ந்திருக்கிறேன்.
என்னுடைய ஹரிபாலாஜி புக்ஸ் என்ற புத்தக வெளியீட்டகம்,
முருகானந்தம் புத்தக வெளியீட்டகம், குளோபல் ஹெல்த் போன்ற புத்தக நிறுவனங்கள் மூலம்
நாங்கள் வெளியிட்ட புத்தகங்கள் மற்றும் பிற பதிப்பகங்களுக்காக நான் எழுதிய புத்தகங்களின்
விற்பனை உரிமை போன்ற அனைத்தும் கைவசம் வைத்திருந்த நிலையில், தொழில் நன்றாக நடந்துகொண்டிருந்தது. அவற்றை கண்டுகொள்ள
நேரம் இல்லாமல் போய்விட்டதால், ஒரே
ஆண்டில் அனைத்தையும் இழந்து கடனில் தவிக்கவேண்டியதாகி விட்டது.
எல்லாம் போன பிறகு நண்பர்கள் ஒதுங்கினர். ஏஜென்சிகள் கைவிட்டன. உறவுகள் நீங்கினார்கள். உதவி
பெற்றவர்கள், உயர்ந்த அனைவரும் புறக்கணித்துவிட்ட
நிலை ஏற்பட்டுப்போனது.
அந்த நேரத்தில் டாக்டர் அருண் சின்னையா என்ற சித்த
மருத்துவர், நீங்கள் பாபாவை
பிடித்துக்கொள்ளுங்கள் என்றார். பிடித்துக்கொண்டேன்..
பாபா சிறிது நம்பிக்கைத் தருவதுபோல தந்து திடீரென
கவிழ்த்துவிட்டார்.
திக்குத் தெரியாத நிலையில் நின்றிருந்த நிலையிலும் நான்
பாபாவின்திருநாமத்தை சொல்லிக் கொண்டேயிருந்தேன். ’பாபா
எல்லா இடங்களிலும் போய் வந்துவிட்டேன், இனி போகும் இடமில்லை. என்ன செய்தாலும் உன் பாதங்களே கதி!’ என்று அவரது திருவடியில் வீழ்ந்துவிட்டேன். அதன் பிறகு நடந்த, நடந்துவரும் அனைத்திற்கும் நீங்களே சாட்சி...
பாபாவை சரணடைந்து இப்படி நிறைய செல்வத்தை அடைந்த ஒரு
பக்தரைப் பற்றி கூறுகிறேன் கேளுங்கள்.
இதன் தொடர்ச்சி நாளை.........
No comments:
Post a Comment