Saturday, June 15, 2013

கும்பிடுவது ஏன்?




சாய் ராம், வணங்குவதற்காக இரண்டு கைகளையும் குவிப்பது ஏன்?
(கே. ஐஸ்வர்யா, கோடம்பாக்கம், சென்னை - 24)
உண்மையான அர்த்தம் எனக்கு விளங்கவில்லை. பகவானே, வலக்கையானது நீ, இடக்கையானது நான். நாம் இருவரும் ஒருவர் தொடர்பில் ஒருவர் இருக்கும் போதுதான் சோஹம் எனப்படுகிற நீ வேறு நான் வேறு அல்ல என்ற உணர்வு வரும். நாம் இருவரும் தொடர்பில் இருக்கும்போதுதான் நமஸ்காரம் என்ற சம்ஸ்காரமே பிறக்கிறது. நாம் இணைந்திருக்கும்போது எல்லாமே ஒன்றாகவும், பூரணமாகவும் ஆகிறது. நான் பணிவையும் குனிவையும் உணர்கிறேன் என்று சொல்லத் தோன்றும்.
ஜீவாத்மான என்னை, பரமாத்மாவான உன்னுடன் ஒன்றாக்கிக் கொள் என்று குறிப்பால் நான் சொல்வது போலவும், இதைப் பார்க்கிற பகவான், தன் கரத்தை அபயம் தரும் விதத்தில் உயர்த்தி, கொஞ்சம் பொறு.. என்று சொல்வது போலவும், இப்படி என்னோடு எப்போதும் தொடர்பில் அதாவது ஐக்கியமாக இரு..அப்போது நான் உனக்கு அருள் செய்வேன் என்று கூறுவது போலவும் தோன்றும். சுருக்கமாகச் சொன்னால் ஜீவ பிரம்ம ஐக்கியத்தின் அடையாளமாகத் தவிர வேறு எதையும் சிந்திக்கத் தெரியவில்லை.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...