Monday, June 24, 2013

குடையாக வந்தார் நிழல் கூட தந்தார்




கடந்த புரட்டாசி மாதம் இறுதியில் நான் 18 கிலோ எடையுள்ள புத்தகங்களை இடது தோள் பட்டையில் ஒரு பையும், வலது தோள் பட்டையில் ஒரு பையுமாக இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு சோழிங்கநல்லூர் அருகில் செம்மஞ்சேரி பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒன்னரை கி.மீ. தொலைவில் உள்ள கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்தேன்.
எனக்கு வயது 73 ஆகிறது. பளுவைத் தூக்கிக் கொண்டு போகமுடியவில்லை. அன்று கடுமையான வெயில் வேறு.. என்னால் இதையும் தாங்கமுடியவில்லை.
கருணா்ர்த்தியான பாபாவை நோக்கி வேண்டுதல் செய்தேன்.. பாபா இந்தச்சுமையை என்னால் சுமக்கமுடியவில்லை, வெயிலின் தாக்கம் என்னை வாட்டுகிறது..என்னை இதிலிருந்து காப்பாற்று என்று, என் இதயத்திலிருந்து வந்த அந்தப்பிரார்த்தனையை பாபா கேட்டார்.
செம்மஞ்சேரி பேருந்து நிலையத்தில் நான் இறங்கியதும், என் தலைக்கு மேல் மேகமூட்டம் தோன்றியது. இதனால் எனக்கு வெயில் படவே இல்லை. சுமார் அரை மணி நேரம் நடந்தேன். அவ்வளவு தூரமும் அந்த மேகமூட்டம் என்னைத்தொடர்ந்து வந்தது. பளுவும் சுலபமாக இருந்தது.
சாயி பாபாவின் அருளாலும் கருணையாலும் பிரச்சினை இல்லாமல் என் வேலையை செய்து முடித்தேன்.
எவன் ஒருவன் பூரணமாக என்னை நம்பி சரணாகதி அடைகிறானோ, அவனது பளுவை வாங்கிச் சுமந்து அவனைக் காக்கிறார் என்ற வாக்கு என் விஷயத்தில் உண்மையானது. அவரைப் பூரணமாக நம்பிச் சரணடைந்தால் நிச்சயமாக அவர் நமக்கு உதவி செய்வார்.
                                       சு.ஜெகதீசன், பம்மல், சென்னை -  75

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...