Sunday, June 23, 2013

தரிசனம் தருவார் சாயி பாபா




2004 - ல் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். தினமும் மாலை பாபாவின் போட்டோ முன் ஆரத்தி பாடுவேன். அது பாபாவின் முழங்கால் வரை தெரியக்கூடிய சிறிய போட்டோ. ஒருநாள் ஆரத்தி பாடிக்கொண்டிருந்த போது சீரடியில் உள்ள பாபாவின் சமாதி மந்திரை பார்க்க வேண்டும் போலிருந்தது. பாபாவிடம் பிரார்த்தனை செய்தபிறகு அதை முற்றிலும் மறந்துவிட்டேன்.
எனது உடைமைகள் சிலவற்றை, இதற்கு முன்பு வசித்து வந்த அறையில் வைத்திருந்தேன். அவற்றை எடுப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அந்த அறையில் நிறைய தூசி தும்புகள் இருந்தன. ஒட்டடை படிந்திருந்தது. அதில் நுழைந்து எனது பொருட்களை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். பக்கத்து அறையில் எனது நண்பர் ஒருவர் தங்கியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக அந்த அறைக்குள் நுழைந்த போது அதிர்ச்சியாக இருந்தது. நண்பனின் மேஜை மீது சாயி பாபாவின் முழு உருவப்படம், அதில் பாபா சிரித்துக்கொண்டிருந்தார்.
அவர் சமாதி மந்திரில் அமர்ந்திருந்தார்..காலணிகளை கழற்றிவிட்டு அவரை வணங்கினேன்.அதை உடனே எடுத்துக்கொள்ள வேண்டும் போலிருந்தது. நண்பனிடம் கேட்காமல் எடுப்பது தவறு என்பதால், அவனிடம் கேட்டுவிட்டு எடுத்துக்கொள்ளலாம் என வைத்துவிட்டு வந்தேன்.
இந்த விஷயத்தைப் பற்றி நண்பனிடம் சொன்ன போது, அப்படியொரு போட்டோவா? அதை நான் பார்த்ததேயில்லையே! அறைக்குப் போய் பார்க்கிறேன். அப்படியிருந்தால் அதை உனக்குத் தருகிறேன் என்று கூறினான்.
ஒரு வியாழக்கிழமையன்று என்னை சந்தித்து, ‘யார் இதை வைத்தார்கள் என்று எனக்கு நிச்சயமாகத்தெரியாது.. அப்படி வைக்கிற ஆட்களும் யாரும் கிடையாது?  பிறகு எப்படி வந்தது?  என்று குழப்பமாக இருக்கிறது என்று கூறியபடி, நான் விரும்பிய போட்டோவைக் கொடுத்தான்.
எனக்காக தானே வந்து அங்கு சமாதிமந்திருடன் பாபா காத்திருந்ததாக எண்ணி மகிழ்ச்சியோடு அந்த போட்டோவை கைகளில் ஏந்திக்கொண்டேன்.
-          மிதுன், ஹாப்கின்ஸ்
நன்றி சாயி லீலா
தமிழில்: வி.வெங்கட்ராயலு, ஊத்துக்கோட்டை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...