Tuesday, June 11, 2013

பிரார்த்தனை செய்.. வேண்டுதல் பலிக்கும்.





நமக்கு எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன. வேலைகள் உள்ளன. அத்தனையையும் ஒதுக்கி வைத்து விட்டு இவ்வளவு தூரம் பிரார்த்தனைக்கு வருவதோ, பத்திரிகையைப் படிப்பதோ, பாபா பற்றிய செய்திஜளை இணையத்தில் தேடி பிடித்து படிக்கிறோம் என்றால், எதன் மூலமாவது நமக்கு விடிவு வந்து விடாதா என்ற எண்ணத்தில்தான்.
பிரார்த்தனைக்கு வருதல் அல்லது சாயி தரிசனம் புத்தகத்தை படித்தல் மூலமாக, ஒருவேளை பாபா நன்மை செய்தாலும் செய்வார் என்ற எண்ணத்தில், இங்கு வருவதும், புத்தகம் படிப்பதுமாக இருந்தால் தயவு செய்து அதை மாற்றிக்கொள்ளுங்கள்.
ஒருவேளை என்ற வார்த்தையை எடுத்து விட்டு,  ‘நிச்சயமாக இதன் மூலம் பாபா எனக்கு நன்மையைச் செய்வார் என்ற உறுதி உங்கள் மனதில் ஏற்பட வேண்டும். அப்போதுதான் பிரார்த்தனைக்குப் பலன் கிடைக்கும். இதன் வாயிலாக பாபா நம்மோடு பேசுவதை உணரமுடியும்.
நம்பிக்கையின்றி இறைவனிடம் எதையாவது பெற்றுவிடலாம் என நினைப்பது வீண்.  பிரார்த்தனை செய்கிறவர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது பிரார்த்தனை என்பது இறைவனுக்கு நாம் வழக்கமாக செய்கிற பூசை புனஸ்காரம் போன்ற சடங்கு அல்ல.
நாம் அவரோடு ஏற்படுத்திக் கொள்கிற தொடர்பு. பாபாவுக்குச் செய்கிற அபிஷேகம் எப்படி அவருடைய விக்ரகத்தைத் தூய்மை செய்கிறதோ அப்படித்தான் அவரிடம் நாம் செய்கிற பிரார்த்தனை நமது மனத்தைத் தூய்மை செய்கிறது.
ஒவ்வொரு நாளும் நம்மையறியாமல் அல்லது தேவைக்காக தவறுகளைச் செய்கிறோம்.. அது நமது பாவக்கணக்கில் சேர்கிறது. இந்தப் பாவத்தைப் போக்குவதற்க்கு சுலபமான இரண்டு வழிகள் உண்டு.
ஒன்று பிரார்த்தனை
இன்னொன்று நாம ஜெபம்.
நாம ஜெபம் மலை போன்ற பாவங்களையும் அழிக்க வல்லது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே! எனவே, மலை போன்ற நமது தவறுகள், பாவங்கள் அனைத்தும் கழிவதற்கு முதலாவது நாம் ஜெபம் செய்துவிட்டுத்தான் பிரார்த்தனை செய்வதற்குச் செல்ல வேண்டும்.
அடுத்து, மலையை உடைத்து எறிந்துவிட்டாலும் அதில் தூசு தும்புக்கள்
இருக்கும் அல்லவா? அதைத் துடைப்பது போன்றதுதான் பிரார்த்தனை. சுருக்கமாக விளங்கும் வகையில் சொல்லவேண்டும் என்றால், தினமும் வீட்டைப் பெருக்கி சுத்தப்படுத்துவது போல, மனதை பெருக்கி சுத்தப்படுத்துவது தினமும் நாம் செய்கிற பிரார்த்தனையின் அர்த்தம்..
பிரார்த்தனை செய்வதற்கு முன்னால் சில விஷயங்களை நாம் நிச்சயம் செய்தாக வேண்டும்..அது, நமது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொண்டு மானசீகமாக கடவுளிடம் மன்னிப்புக்கேட்டல். தெரியாமல் செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு அப்பா... என்றோ, ஏதோ என் நேரம்.. உன்னிடம் தவறாகவும், உனக்கு எதிராகவும், என் மனசாட்சிக்கு விரோதமாகவும் நடந்து கொண்டு விட்டேன்.. இனி அப்படி செய்யமாட்டேன்.. முடிந்தவரை நான் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.. நீயும் என்னை அந்த வழிக்கு கொண்டு செல்லாதே.. என்று நமது தவறுகளை ஒப்புக்கொண்டு, அவருடன் ஒப்புறவாக வேண்டும்.. அதன் பிறகு பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும்.
பிரார்த்தனை பலிக்குமா? பலிக்காதா என்று சந்தேகப்படக்கூடாது. பாபாவின் அனுமதியில்லாமல் யாரும் அவரது இடத்தில் கால் வைக்கமுடியாது. அவர் சார்ந்த விஷயங்களை கேள்விப்படவோ, அவரைப் பற்றி படிக்க வேண்டுமானாலும் கூட நமக்கு நல்லகாலம் பிறக்காமல் வாய்ப்பு அமையாது..
எனவே, நீங்கள் சாயி பற்றி படிக்கவோ, அவரது ஆலயத்திற்குச் செல்லவோ நேர்கிறது என்றாலே உங்களுக்கு நல்ல காலம் பிறந்துவிட்டது, பாபா உங்களை அழைத்தார் என்பதுதான் பொருள்.
பாபா எதற்காக அழைப்பார்?
இதன் தொடர்ச்சி நாளை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...