பிரார்த்தனை என்பதை எப்படிச் சொல்லலாம்? வேண்டியதை எப்படிப் பெறலாம்?
( கே.ஆர். ஸ்ரீதரன், காஞ்சீபுரம்)
2013 மார்ச் 9. அதிகாலை பிரார்த்திக்கும் போது ஒரு
வாசகம் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.
நாளைக்கு என்ன தேவையோ அதை இன்றைக்கு இறைவனிடம் கேட்பது பிரார்த்தனை.
நாளைக்கு பக்தனுக்கு என்ன தேவையோ அதை தயார் செய்து வைத்துவிட்டு, இன்றைக்கு தன்னிடம் கேட்க வைப்பது இறைவனின்
தனிப்பெரும் கருணை என்பது அந்த வாசகம்.
ஒன்றுக்காகப் பிரார்த்தனை செய்யும்போதே, அந்த எண்ணத்தைத் தருகிறவர் இறைவன், நான் கேட்பது நியாயமானது என்ற தெளிவுடன்
கேட்டால் வேண்டியதை வேண்டியவாறு பெறலாம்.
வயது முதிர்ந்த தாயாரை சந்திக்கச் சென்றிருந்தபோது,
மகனே, இல்லத்தில் கடவுளை வந்து அமரச்சொல்லும் முன்பு
உள்ளத்தில் வந்து அமர்ந்து கொள் என அவரை வேண்டிக்கொள்வதற்கு பிறருக்கு
கற்றுக்கொடு.. உள்ளம் நன்றானால் இல்லம் நன்றாகும். இந்தத் தெளிவு எல்லோருக்கும் வரட்டும் என்றார்.
பாபாவிடம் வேண்டும்போது முதலில் மனதை வெறுமையாக்கி
அவரிடம் தந்துவிடு. அவரை செயல்பட வைத்தால் நமது பிரார்த்தனை பலிக்கும். வேண்டியது
அப்படியே நிறைவேறும்.
No comments:
Post a Comment