நேற்றைய தொடர்ச்சி
இப்படிப்பட்ட குரு போல உனது சத்குரு இருக்க வேண்டும்..
அந்த குரு யார் என்பதைத் தீர்மானம் செய்.. அவருக்கு பரீட்சை வை.. தேறினால் அவர் பின்னால்
போ.. இல்லாவிட்டால் அவரை கண்டு கொள்ளாதே.
சத்குரு உனக்கு இன்முகம் காட்டிவிட்டால் போதும்..
உனக்கு நன்மைகள் வந்துவிடும்..சத்குருவானவர் எல்லாரையும் ஏற்கமாட்டார்.. அவர் சில
தகுதிகளை உன்னிடம் எதிர்பார்ப்பார்..அந்தத் தகுதிகள் இருந்தால்தான் உன்னை ஏற்பார்.
வழிகாட்டுவார்.. தேவைப்பட்டால் உனக்காக அவர் யுத்தமே செய்வார்.. உனக்காக இந்த
உலகத்தையே அழிக்கவும் துணிவார்..
இவ்வளவு மேன்மையுள்ள அவரை எப்படி பிடிக்க வேண்டும்?
என்னென்ன தட்சணை தர வேண்டும்? என்று கணக்குப் போட வேண்டும்.
உலகத்தையே கொடுத்தாலும் அவருக்குத் திருப்தியிருக்காது...
பிறகு.. எதைக் கொடுப்பது? சத்சரிதத்தில்
சொல்லப்படும் சோல்கரைப் போல தேநீருக்குப் போடும் சர்க்கரையை குறைத்து அவருக்கு அதை
காணிக்கையாக்கு..அதாவது.. ஒரு கப் தேநீருக்கு எவ்வளவு சர்க்கரை போடுவாய்? அதற்கு எவ்வளவு செலவாகும். தினமும் ஒரு பத்து
பைசா அல்லது ஐம்பது பைசா செலவாகும். இது நமக்குப் பெரிய விஷயமாகத் தெரியாது.. அதே
சமயம் நல்லதும் நடக்கும்.
கிருஷ்ண பரமாத்மா கூட, ஒரு இலை,பூ,
ஒரு காய் என எதைக் கொடுத்தாலும் அதை
அப்படியே ஏற்பதாகச் சொன்னாரே... அப்படியானால் தினமும் ஒரு பதார்த்தத்தை
காணிக்கையாக வைத்து விடலாமா? என
யோசிக்காதே..
பொருட்களின் மதிப்பு குறைவுதான். அதை வைத்துக்
கொடுக்கும் தங்கத் தட்டின் விலை மிக அதிகமல்லவா? பகவான் நீ தரும் இலையை, பூவை வைத்து என்ன செய்வார்? அது வைக்கப்பட்ட தங்கத்தட்டைத்தான் எதிர்பார்ப்பார்.. அந்தத்
தங்கத்தட்டு எது? உன் மனது.. எதையும் உள்ளன்போடு தந்தால் அதை அவர்
ஏற்றுக் கொள்வார். ஆகவே, உள்ளன்போடு
ஒரு நமஸ்காரம் செய், போதும். உன்
அன்பை அவருக்குக் காணிக்கையாகக் கொடுத்துவிடு.. அன்பை உருவாக்கும் உள்ளத்தை
அவருக்கு தந்துவிடு..
அதன்பிறகு நீ ராஜ்ஜியத்தைக் கேட்கவேண்டாம், பதவியைக் கேட்கவேண்டாம்.. ஆயுசைக் கேட்க வேண்டாம்..
வேறு எதையும் கேட்கவேண்டாம்.. அவரே உனக்கு அனைத்தையும் கொடுத்துவிடுவார்.
விபீஷணன் ராமரை சரணடைந்து விட வரும் போது, அவருக்கு என்ன பிடிக்கும்? எதைத் தந்தால் அவரை அணுகலாம்? என அனுமனிடம் கேட்டாராம்.
’ஐயா, நான் ஒரு விலங்கினம். அவருக்கு என்ன தர என்னால்
முடியும்? அவர் எதற்கும்
மசியமாட்டார்..ஒருவரது மேன்மை, தகுதி,
செய்துவரும் சடங்கு, தருகிற பரிசுகள், பின்பற்றுகிற ஒழுங்குமுறைகள், குலப்பெருமை போன்ற எதனாலும் அவரைக்கவரமுடியாது... அவரைக்
கவர்வதற்கு, மனதை சுத்தமாக்கி, அதில் இயல்பாகப் பெருகுகிற அன்பை அவருக்குக் காணிக்கையாக்கினேன்.
அவர் எனக்கு வயப்பட்டார். அன்பினால் மட்டுமே அவரைக் கவரமுடியும்.எனவே, இதயத்தை சுத்தமாக்கிக் கொண்டு அன்பினால் அவரை அணுகு..
அப்போது அவர் உன் வசப்படுவார்’ என்று சொல்லி அனுப்பினார்.
அப்படித்தான் இறைவனை அன்பால் கட்டிப்போட வேண்டும்.
இதற்கு எந்த செலவும் கிடையாது. இறைவனை எங்கு பார்ப்பது, எப்படி நான் அன்பு செலுத்துவது? என்று கேட்கலாம்.
கண்ணில் தெரிந்த உயிரினங்களிடம் செலுத்தும் அன்பு
கடவுளுக்குச் செலுத்தும் அன்பாகும். அதை உணர்ந்து உயிரினங்களை நேசி.. அவைகளுக்கு உரியதை
அவை அனுபவிக்க அனுமதி கொடு..உன்னை பிறருக்காக விட்டுக்கொடு.. அப்போது கடவுள் உன்
மீது சந்தோஷப்படுவார். உனக்கு நல்ல சத்குரு அமைவார்.
நான் சுத்தமில்லாமல், பக்தியில்லாதவன் என உன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே!
பாவிகள் மீதுதான் பகவான் பச்சாதாபப்படுவார்.
எனவே, இந்த
நிலையிலேயே அவரை சரணடைந்துவிடு. உன் உள்ளத்தை அவருக்குச் சமர்ப்பித்துவிடு.. அதை
அவர் எடுத்து துலக்கி சுத்தம்
செய்துகொள்வார்..
இந்த அன்பால் சத்குரு வசப்பட்டு உன் வாழ்க்கைப் படகை
செலுத்தும்
பொறுப்பை ஏற்றுக்கொண்டு, உனக்குக்கட்டுப்பட்டு உன்னிடம் தஞ்சமாக
இருப்பார்..
ஜெய் சாய் ராம்..
No comments:
Post a Comment