நான் சிறுவயது முதல் பக்தி
இல்லாதவன், கடவுளை நம்பாதவன். ஒரு நாத்திகன் என்றே சொல்லலாம். என்னுடைய எல்லா
வளர்ச்சிக்கும் என்னுடைய கடின உழைப்பே காரணம் என்று நம்புகிறவன். 2-11- 1998 ல்
நடந்த ஒரு சம்பவம் என்னை பாபாவின் மேல் நம்பிக்கை வைக்கும்படியாக்கி விட்டது.
உண்மையில் பாபா சர்வ வியாபி.
நான் திருமணங்களுக்கு குதிரை வாடகைக்கு தருபவன். மேற்குறிப்பிட்ட
நாளன்று வேலைகளை முடித்துக் கொண்டு இரவு பதினொன்னரை மணிக்கு வீடு திரும்பினேன்.
சாப்பிட்டு முடித்ததும் மனைவி மகன்களுடன் பேசிவிட்டு படுக்கப் போனேன். இரவு 12 மணி
அளவில் எனது குதிரை கயிறை அறுத்துக்கொண்டு கொட்டைகையிலிருந்து ஓடிவிட்டதாக எனது
காவலாளி சொன்னான்.
உடனே பைக் எடுத்துக்கொண்டு இரவு மூன்று மணி வரை
தேடினேன். எங்கும் கிடைக்கவில்லை. பலரிடம் விசாரித்தேன், பயனில்லை. வேதனைப் பட்டேன். உடனே, என்னை அறியாமலேயே, பாபாவிடம் பிரார்த்தனை செய்தேன். பிரார்த்தனை முடிந்த
சில மணித்துளிகளில் வெள்ளை வேட்டி அணிந்த ஒரு நபரைக் கண்டேன். அவரிடம் என் குதிரையைப்
பற்றி விசாரித்தேன். அதற்கு அவர்,
’சிறிது தூரத்தில் உள்ள கம்பத்தில் ஒரு குதிரை கட்டப்பட்டுள்ளது. போய் பார்’ எனக் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்.
இந்த மூன்று மணி ராத்திரியில் எனக்கு அவர் கடவுள் போலத்
தோன்றினார். அவர் காட்டிய இடத்துக்கு இதயப் படபடப்போடு சென்று பார்த்தபோது என்
கண்களில் என்னையறியாமல் ஆனந்தக்கண்ணீர் வந்தது. உண்மையில் என் குதிரைதான் அந்தக்
கம்பத்தில் கட்டப்பட்டிருந்தது.
என் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அப்பொழுது தான்
தெரியவந்தது, நாத்திகருக்கும்
பாபா அருள் புரிவார் என்பது. அதுமட்டுமல்ல, அவரது சக்தியை, சர்வ வியாபகத் தன்மையைக் குறைகூறும் எந்த பக்தனையும் அவர்
பொருட்படுத்தமாட்டார் என்ற உண்மையையும் விளங்கிக் கொண்டேன்.
இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக
அமைந்துவிட்டது. வியாழன் தோறும் பாபா கோயிலுக்குப் போய் வருகிறேன். ஒவ்வொரு மாதமும்
சீரடி சென்று வருகிறேன். வாழ்க்கையில் எல்லா வளத்துக்கும், மகிழ்ச்சிக்கும் காரணம் பாபாவே என்பது எனது திடமான
நம்பிக்கை.
-
வீரு
சிந்தி, புதுடெல்லி - 6
நன்றி் சாயிலீலா,
தமிழாக்கம்: வி. வெங்கட்ராயலு, ஊத்துக்கோட்டை
No comments:
Post a Comment