Saturday, February 15, 2014

நான் உங்கள் கூடவே இருக்கிறேன்

நான் சாயி பக்தன். அவரிடம், “நீங்கள் என்ன செய்தாலும், எப்படிச் செய்தாலும், அதையே சிறந்த ஆசீர்வாதமாக ஏற்றுக்கொள்கிறேன்என்ற மன உறுதியுடன் இருப்பவன்.
     18-7-13 முதல் மூன்று தினங்கள் குற்றாலம் மற்றும் சபரி மலை முதலிய இடங்களுக்குச் சென்று திரும்பிய எனக்கு 26-7-13 முதல் காய்ச்சல் வந்து வலது கால் முற்றிலும் பெரிதாக வீங்கி வலியும் காய்ச்சலும் குறையாத நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
     மனதிற்குள் சமர்த்த சத்குருவான பாபாவை மனதார வேண்டிக் கொண்டேன். ஒரு பக்தன் எந்த நிலையில் எங்கு இருந்தாலும் அவனது வேண்டுகோளை ஏற்று, ஆசீர்வதிப்பவரான பாபா,எனக்கும் என் பிரார்த்தனையைக்கேட்டு எனது உடல் நிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.
     ஆனால், என் காலை மட்டும் கீழே ஊன்ற முடியாத அளவுக்கு வலி எடுக்க ஆரம்பித்துவிட்டது. வலி குறைந்தால் தான் மருத்துவமனையிலிருந்து அனுப்ப முடியும் என மருத்துவர்கள் கூறினர். அந்நிலையில் பாபாவை மீண்டும் பிரார்த்தித்தேன்.
     2-8-13 அன்று காலை சுமார் ஏழரை மணி அளவில் பெருங்களத்தூர் பிரார்த்தனை மையத்திற்குப் போன் செய்து எனக்காகப் பிரார்த்திக்குமாறு சாயி வரதராஜனிடம் வேண்டினேன்.
     அவரும் எனக்காக உடனே பிரார்த்தனை செய்வதாகக் கூறினார். எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் பாபா என மீண்டும் மீண்டும் வேண்டினேன்.
     எங்கள் பிரார்த்தனை வீணாகிவிடவில்லை பாபாவின் அருளினாலும் சாயி வரதராஜன் பிரார்த்தனையாலும் அடுத்த சில நிமிட நேரத்திற்குள், எனது காலை நன்றாகவே ஊன்றி நடக்க முடிந்தது.
     எனவே, வரும் ரூhயிற்றுக்கிழமை பெருங்களத்தூர் சென்று அங்கு சாயி வரதராஜனுடன் கூட்டுப் பிரார்த்தனை செய்ய முடிவு செய்துவிட்டேன்.
     நீங்கள் எங்கு வேண்டு மானாலும் செல்லுங்கள், என்னையே நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள் நான் உங்கள் கூடவே இருக்கிறேன் என்று சத்சரித்திரம் கூறுவது என் மனதில் நிரந்தரமாகிவிட்டது.
     என் நண்பர் ஒருவர் 3-8-13 அன்று சீரடிக்குச் செல்வதற்காக எனக்கும் அவருக்கும் விமானத்தில் டிக்கெட் புக் செய்திருந்தார். என் பெயர் மற்றும் விபரங்களை முற்றிலும் தெரிந்த அவர், என் பெயரை மாற்றி டிக்கெட் வாங்கிவிட்டார்.
     பயணத்திற்கு இரண்டு நாட்கள் முன்னதாக எனக்கு டிக்கெட்டை அனுப்பினார். அதில் என் பெயர் தவறாக பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கவனித்து அவருக்குப் போன் செய்தேன். தவறுக்காக என் நண்பர் வருந்தினார். முடிவில் என் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிவிட்டது.
     இதில் நான் தெரிந்துகொண்ட உண்மை என்ன வெனில், என் உடல் நிலை சரியாகப் போவது இல்லை, என்னால் பயணம் செய்யமுடியாது என்கிற உண்மையை முன்கூட்டியே அறிந்த சர்வமும் அறிந்த சாயி பாபா, நண்பரின் வற்புறுத்தலை மீற முடியாத என் பெயரை மாற்றச் செய்து, பயணத்தை ரத்து செய்ய வைத்தார் என்பது. இதையே நான் உண்மை என நம்புகிறேன்.
     நடந்தது, நடப்பது, நடக்கப் போவது போன்று அனைத்தையும் அறிந்த பாபாவின் செயலை நான் நன்றியுடன் ஏற்றுக்கொண்டேன். பாபாவின் அருளின்றி நாம் சீரடிக்குப் போக முடியாது, அவர் நினைத்தால்தான் நம்மால் அந்த மண்ணில் கால் வைக்க முடியும் என்பது தத்ரூபமான உண்மையேயாகும்.
     எல்லாம் வல்லவரான சாயி நாதர் என்னுடைய மற்ற உடல் உபாதைகளை எல்லாம் நீக்கி அருள் செய்வார் அவர் அருள் நோக்கினால் என்னுடைய துன்பங்கள் எல்லாம் நீக்கி என் பிரார்த்தனையை நிறைவேற்றுவார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். நான் அவரது பாதங்களை அண்டியுள்ளேன். என்னை எக்காரணம் கொண்டும் நிராகரிக்க வேண்டாம் என்று அவரை வேண்டுகிறேன்.

ஆர் நாகசுந்தரம்
110 பிரம்மபுத்திரா தெரு,

பழனியப்பா நகர்
வளசரவாக்கம்
சென்னை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...