Thursday, February 20, 2014

தெரிந்துகொள்ளுங்கள்





பஞ்ச பூதங்கள் என நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் ஆகியவற்றைக் கூறுகிறோம். உடல் மண்ணுக்கு உரியது. இந்த பஞ்ச பூதத்தில் ஐந்து விஷயங்கள் அடங்கியுள்ளன. அவை் வாசனை, சுவை, ஒளி, ஊறு ( உடலால் உணர்தல்), மற்றும் ஓசை ஆகியவை. நீருக்கு நான்கு விஷயங்கள் உள்ளன. அவை சுவை, ஒளி, ஊறு, ஓசை ஆகியவை. நெருப்புக்கு ஒளி, ஊறு, ஓசை என்ற மூன்று மாத்திரைகள்.
     காற்றுக்கு ஊறு, ஓசை என்ற இரண்டு மாத்திரைகள். ஆகாயத்திற்கு ஒரே ஒரு விஷயம்தான் மாத்திரையாக உண்டு. அது ஓசை.. அதாவது ஓங்காரம். அடுத்து, இந்த விஷயங்கள் இல்லாத பொருள் ஒன்றும் நம்முள் உள்ளது, அது ஆத்மா. இது எந்த தன்மையும் இல்லாதது. இந்த ஆன்மாவை அக்னியாக பாவித்து சிந்திக்க வேண்டும்.

     இவ்வாறு சிந்தித்து வரும்போது, சிரசில் துவாதசந்தம் என்ற இடத்தில் நாம் ஆன்மாவை குவிக்க முடியும். இதை இறைவனை தரிசிக்கும் இடம் என்கிறார்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...