Sunday, February 2, 2014

வெறுங்கையாய் வந்தாலும் பிரார்த்தனையை கேட்பேன்

உதகையைப் பூர்வீகமாகக் கொண்ட நான் தற்போது கோவையில் வசிக்கிறேன். என் கணவர் முத்து, கோவை பெரியநாயக்கன் பாளையத்தில் ராமகிருஷ்ணா மேனிலைப் பள்ளியில் கைத்தொழில் (கார்பெண்டரி) பயிற்றுவிக்கும் ஆசிரியராக இருக்கிறhர். என் மகன் கமல் ராஜ், கல்லூரிப் படிப்பை முடித்து பணியில் உள்ளார். மகள் ஆஷா தற்போது கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.
எனக்கு பாபாவைப் பற்றி எதுவும் தெரியாது. பல ஆண்டுகளுக்கு முன்பே என் மகன் ஒரு சிறிய பாபா விக்கிரகத்தை வாங்கி வந்திருந்தான். அதை நாங்கள் ஷோ கேசில் மற்ற பொம்மைகளோடு அழகுக்காக வைத்திருந்தோம். காலம் மாறிய பிறகு இப்போது அதே பொம்மையைக் கடவுளாகக் கும்பிடுகிறோம்.
எப்படி என்பதை சுருக்கமாகச்சொல்லிவிடுகிறேனே! கடந்த பத்தாண்டுகளாக, எதைச் சாப்பிட்டாலும் ஜீரணம் ஆகாது. இதனால் காய்கறிகளையோ, பழங்களையோ சாப்பிட முடியாத நிலை. வெள்ளைச்சாதத்தையும்,  முருங்கைக் கீரை மற்றும் சுக்கடி கீரையை (தமிழகத்தின் வட மாவட்டங்களில் இக்கீரையின் பெயர் மணத்தக்காளிக் கீரை) மட்டுமே சாப்பிட முடியும். வேறு எதையும் சாப்பிட முடியாது. சாப்பிட்டால் ஜீரணம் ஆகாது,  வயிறு உப்பும், வேறு பல பிரச்சினைகளும் வரும். நான் எதையும் சாப்பிட முடியாததால்,  எனக்காக என் குடும்பத்தார் தங்கள் இயல்பான உணவை தியாகம் செய்ய வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது.
மருத்துவர்களிடம் சிகிச்சைக்குச் சென்று பரிசோதித்தால் அனைத்தும் நார்மல் என்று வரும். இதனால் என்ன சிகிச்சை செய்வது அவர்கள் குழம்பிவிடுவார்கள்.  சாதாரண மருந்து மாத்திரை தருவார்கள். எனக்குத் தீர்வு கிடைக்காமல் போய்விடும்.
இப்படிப்பட்ட சூழலுக்கு என்னைப் பழக்கப்படுத்திக் கொண்டு, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினேன். இருந்தாலும் மனதிற்குள், இப்படியொரு நிலை ஏற்பட்டு விட்டதே என்ற வேதனை இல்லாமலில்லை. இந்த நிலையில் ஒரு நாள் ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவர் என எங்கள் பகுதியில் நம்பப்பட்டு வந்த ஒருவரை அணுகி தீர்வு வேண்டினோம். அவர் அரிசி கஞ்சி, கோதுமை உணவு, மணத் தக்காளி, முருங்கை, பாதாம், முந்திரி, நெய் போன்றவற்றை சாப்பிடலாம் என்றார்.
இதைத் தவிர வேறு எதை சாப்பிட்டாலும் வயிறு உப்புசமாகிவிடும். உதிரப் போக்கு வரும், எப்போதும் மோஷன் போகும். இப்படி கஷ்டப்பட்ட நான், ஒருவர் மூலமாக சாயி பாபாவின் விரத மகிமை பற்றி அறிந்து, வேண்டிக்கொண்டு வியாழக்கிழமை விரதமிருந்தேன்.
விரதம் முடிந்த ஒன்பதாவது வாரத்திற்குப் பிறகு எனது உடல் நிலைமையை பரிசோதிக்க நினைத்தேன். உணவுகள் இப்போது ஒத்துக்கொள்ள ஆரம்பித்தன. அதன் பிறகு எனக்கு பாபா மீது நம்பிக்கை வந்தது. என் கணவருக்கு பாபா மீது அந்தளவு நம்பிக்கைக் கிடையாது. நாங்கள் ஊட்டியிலிருந்து கோவைக்கு வந்த போது வெறுங்கையாய் வந்தோம். எங்களது பிரார்த்தனையைக் கேட்ட பாபா, எங்கள் நிலையை மாற்றினார். பிள்ளைகள் விரும்பிய படிப்பைப்படித்தார்கள். தேவையான அளவு வசதிகளைக் கொடுத்து முன்னேற்றினார்.
என் கணவர் அன்பானவர், குழந்தைகளும் நல்ல குழந்தைள். பிரச்சினையில்லா வாழ்க்கையை பாபா தந்திருக்கிறார். தேவையானதைத் தருகிறார்.  எந்த நிலையிலும் நான் அவரை அப்பா என்றே அழைப்பேன். என்னை குழந்தையாக ஏற்று அருள்பாலிக்கிறhர். குடும்பத்தோடு சாயி சேவை செய்கிறோம்.
 தற்போது கோவையில் ஒரு மகளிர் விடுதியை கூட்டாக நண்பர்களுடன் இணைந்து நடத்தி வருகிறோம். இந்தத் தொழில் நன்றாக நடக்கவும், நோய் குணமானதற்கு நன்றி கூறவும் சீரடிக்குச் சென்று வந்தோம்.

-          ராணி முத்து,  பெரிய நாயக்கன் பாளையம், கோவை


No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...