என் பெயர் மோகனா ரவிக்குமார், சென்னை வேளச்சேரியில் குடும்பத்தோடு வசிக்கிறேன். என் பிள்ளைகள் சந்தீப்
மற்றும் பவித்ரா இருவரும் படு சுட்டிகள். மகன் பொறியியல் கல்லு}ரியில் முதலாம் ஆண்டும், மகள் பத்தாம் வகுப்பும் படிக்கின்றனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்
என் இரண்டு பிள்ளைகளும் சண்டை போட்டுக்கொண்டனர். நான் விலக்கிவிட்டேன். அப்போது
என் மகன், கோபத்துடன், “இனி அவளிடம் பேசமாட்டேன்” என்றான். கோபம் வந்தால் எல்லாப் பிள்ளைகளும் இப்படித்தான்
பேசுவார்கள் என்பதால் அதை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம் ஆன பிறகும் என் பிள்ளைகள் இருவரும் ஒரே வீட்டில்
இருந்தபடியும் பேசிக்கொள்ளவில்லை. நானும் என் கணவரும் இருவரையும் அழைத்து எவ்வளவோ அறிவுரை
கூறினோம். தாத்தா, பாட்டி, ஆசிரியர்கள் என யார் கூறியும் என் மகன்
பிடிவாதத்துடன் பேசவே மறுத்துவிட்டான். என் மகள் அண்ணனிடம் நீ என்னிடம் பேச
வேண்டும் என அழுதாள். அப்போதும் அவன் மறுத்துவிட்டான்.
இதை
கவனித்த நான் மிகவும் வேதனைப்பட்டேன். இந்தப் பிரச்சினையை எங்களில் ஒருவரான
சாயியிடம் சொல்லாமல் மறந்து விட்டோமே எனத் துடித்தேன்.
மூன்று வருடங்களாக என் வீடு
வறண்ட வீடாக இருந்தது. பெருங்களத்தூருக்கு வரும்போது, பாபாவிடம் என் மன வருத்தத்தைச் சொன்னேன்.
இரண்டு மாதம் கழித்து என் மகனே,
தன் தங்கையிட்ம் பேசினான். பிறகு சிறிது
நாட்கள் கழித்து நண்பர்களிடம் பேசுவதுபோல பேசினான். இப்போது பாசத்தைப் பொழிகிறான்.
அப்போதுதான் நான் உணர்ந்தேன்,
விளையாட்டான பிரச்சினையாக இருந்தால்கூட
அதை நம் குடும்பத்தில் ஒருவரான சாயி அப்பாவிடம் கூற வேண்டும் என்பதை. அன்று முதல்
எந்த சிறு பிரச்சினையாக இருந்தாலும் சரி, அப்பாவிடம் முதல் வேலையாகச் சொல்லிவிடுவேன். அவர் தீர்த்துவிடுவார்.
மோகனா ரவிக்குமார்,
சென்னை
- 42
No comments:
Post a Comment