என் பெயர் தென்னரசு. சைதாப்பேட்டையில் உள்ள தி பாத்திமா மேல் நிலைப்
பள்ளியில் பணிபுரிகிறேன். நானும் என் மனைவி விமலாவும் சாயிபாபாவிடம் அசைக்க
முடியாத நம்பிக்கையும், பக்தியும்
கொண்டவர்கள். எது நடந்தாலும் அது பாபாவின் விருப்பமே என நினைத்துக்கொள்வோம்.
வியாழன் தோறும் சைதா சாயிபாயா அல்லது
புதுப்பெருங்களத்தூர் அல்லது தி.நகர் அல்லது கூடுவாஞ்சேரி பாபா கோயிலுக்குச்
செல்வோம்.
கடந்த ஏப்ரல் இறுதியில் என்
இடது கண் பார்வை மங்கலாகவும் ஏதோ கருப்பு நிற நிழல் தடுப்பது போல் தோன்றி மாற்றுச்
சான்றிதழ் எழுத முடியாமல் தவித்து, ஒரு வழியாக எழுதியும் முடித்து விட்டேன்.
ஆறு மாதங்களுக்கு முன் கண்புரை உள்ளதாக
சென்னை மருத்துவமனை ஒன்றில் கூறினார்கள். எனவே, இரு கண்களிலுள்ள புரையை மே மாத விடுப்பின் போது நீக்க
முடிவு செய்தேன்.
பாண்டி அரவிந்தர் கண் மருத்துவமனையில்
பரிசோதித்து பார்த்ததில் கண்புரையோடு இடது கண்ணில் பார்வை நரம்புகள் துண்டிக்கப்பட்டு
சிதறியும், இரத்தம் உறைந்தும்
இருப்பது தெரிய வந்தது.
முதலில் கண் பார்வை ஏற்பட,
பார்வை நரம்புகளை சரிசெய்ய இரண்டு முறை
அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என மருத்துவர்கள் கூறினார்கள். செலவு
முப்பதாயிரமாகும் என்றனர். மனம் வருந்தினேன். மே ஐந்தாம் நாள் புதுப்பெருங்களத்தூர்
சாயி பாபா கோயிலுக்கு வந்து உதி பெற்றுக்கொண்டு, எனக்கு அறுவை சிகிச்சை ஒரே முறையில் நடக்கவேண்டும்,
நல்லபடியாக முடியவேண்டும் என
பிரார்த்தித்தேன். என் பிரச்சினை நல்லபடியாக முடிந்தால் நம் பெருங் களத்தூர் பாபாவுக்கு
நன்றி செலுத்தி, காணிக்கையாக 2500
ரூபாய் செலுத்துவதாக வேண்டிக் கொண்டேன்.
மே எட்டாம் தேதி, அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் கண்களைப்
பரிசோதித்து ஒரே முறை அறுவை சிகிச்சை செய்தால் போதும் என்றார். நான் சாயியின்
பெயரை இரவு பகலாக உச்சரித்துக் கொண்டிருந்தேன். அவரது போட்டோ மற்றும் என் குல
தெய்வம் கொண்டேஸ்வரி அம்மன் போட்டோ ஆகியவற்றை மட்டும் வைத்திருந்தேன்.
பெருங்களத்தூர் பாபா கோயிலில்
பெற்ற உதியை நெற்றியில் இட்டுக்கொண்டு தண்ணீரில் குழைத்து குடித்தேன். அதன் பிறகு
அறுவை சிகிச்சை நடந்தது. சிகிச்சை நன்றாக முடிந்தது. அறுவைக்குப் பிறகு வலியே
ஏற்படவில்லை.
பாபாவை எங்களுக்கு நிரம்பப்
பிடிக்கும். எப்பொழுதும் அவர் பெயரை உச்சரிப்பேன். பாபா என் கோரிக்கைக்கு செவி
சாய்த்தார் என எண்ணும் போது என் மனம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.
காணிக்கையை செலுத்த நேராகக்
கோயிலுக்கு வந்து காணிக்கையைச் செலுத்தினேன். பாபா ஒரு சர்வ வியாபி என்பதையும்,
உதியே மருந்து என்பதையும் உண்மை என்று
உணர்ந்து கொண்டேன். இன்னும் என் இரு கோரிக்கைகளை பாபா முன் வைத்துள்ளேன். அதனை
விரைவில் முடித்துத் தர வேண்டிக் காத்திருக்கிறேன்.
தென்னரசு,
அனந்தபுரம்,
விழுப்புரம் மாவட்டம்
No comments:
Post a Comment