‘‘மக்கள் தாம் எவ்வளவு வஞ்சனை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாதங்களில்
விழுகிறார்க்ள, தட்சணை அளிக்கிறார்கள்.
ஆனால், அந்தரங்கமாக, காணாத இடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதமாக
இல்லையா?’’
சத் சரித்திரம் 21
எல்லாக் காலத்திலும் மக்கள்
முன்னே முகஸ்துதி செய்து அனுப்பிவிட்டு, பின்னே புறங்கூறித் திட்டும் வழக்கம் இருக்கிறது என்பதற்காகவே, புறங்கூறாமை என்ற தலைப்பில் பத்து குறள்களைக்
கொடுத்தார் வள்ளுவர்.
அப்படிப்பட்டவர்களை பாபா பலமுறை
கண்டித்து இருக்கிறார். ஒருவரை பன்றியைப் போன்ற சுபாவம் உள்ளவர் என்று சொன்னார். இன்னொருவர்
தன்னைப் பார்க்க வந்தபோது, அவரை
முன் வைத்துக்கொண்டு, ‘‘மக்கள்
தாம் எவ்வளவு வஞ்சனை உள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாதங்களில் விழுகிறார்க்ள,
தட்சணை அளிக்கிறார்கள். ஆனால், அந்தரங்கமாக, காணாத இடத்தில் திட்டுகிறார்கள். இது அற்புதமாக இல்லையா?’’ என்று கேட்டார்.
அந்த ஒருவர் பண்டரிபுரத்து
வக்கீல். நூல்கர் என்ற சாயி பக்தர், பண்டரிபுரத்து சப்ஜட்ஜ் பதவி வகித்தபோது, தனது உடல்நிலையை முன்னிட்டு சீரடிக்கு வந்து பாபாவிடம்
வேண்டுதல் வைத்தார். அவர் இல்லாத நேரத்தில் கோர்ட்டின் பார் அறையில் வக்கீல்கள்
ஒன்று கூடியிருந்தபோது, ‘‘நூல்கர்
போலப் படித்தவர்களே இப்படி முட்டாள் தனமாக, தனது உடல் நலம் பெறவேண்டும் என்பதற்காக, பாபாவின் பின்னால் ஓடுகிறார்கள். இப்படி
ஓடுவதால் மட்டும் அவர்கள் நோய்கள் என்ன பாபாவால் குணமாகிவிடுமா? என்ன? சிறிதேனும் பகுத்தறிவு வேண்டாவா?’’
என்பன போன்ற வசைச்சொற்களால் விவாதித்துக் கொண்டார்கள்.
அந்த விவாதம் செய்தவர்களில்
ஒருவரான இந்த நபர், விதி வசத்தால்,
சாயி தரிசனம் செய்ய சீரடி வந்தபோது,
பாபாவால் இப்படி கூறப்பட்டார். சீரடியிலிருந்து
முன்னூறு மைல் தொலைவில் உள்ள ஓர் அறைக்குள் பேசிய விக்ஷயம் கூட பாபாவுக்குத்
தெரிகிறது என்பதை உணர்ந்த அந்த வக்கீல், தான் கனவிலும், மறந்தும்
பிறரைக் குறைகூறக்கூடாது என்பதை உணர்ந்துகொண்டார்.
இன்றைக்கும் பலர் பண்டரிபுரத்து
வக்கீலைப் போல தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்துகிறார்கள். அது ஆன்மீக விக்ஷயத்தில்
பாபாவிடம் செல்லாது என்பது அவர்களுக்குப் புரிவதில்லை. அவர்கள் விஞ்ஞான அறிவைப்
பயன்படுத்தி, அனைத்துக்கும் மேலான
மெய்ஞ்ஞான அறிவுடைய இறைவனின் அற்புதங்களை அலட்சியம் செய்துவிடுகிறார்கள்.
சாயி பாபா எதைக் கேட்டாலும்
தருவார் என்ற நம்பிக்கையோடு பிரார்த்தனைக்கு வருகிறவர்கள் யாராக இருந்தாலும்
அவர்களது பிரார்த்தனை
கேட்கப் படுகிறது. இரவு பகலாக அவரை நினைத்து, பக்தி செலுத்தி நம்பிக்கையோடு யார் வேண்டிக்கொள்கிறார்களோ, அவர்கள் பின்னால் பாபா திடமாக நிற்கிறார்
என்பது மறுக்கமுடியாத சத்தியம். நீங்கள் பாபாவிடமிருந்து அற்புதத்தை
எதிர்பார்த்தால் அவர் மீது முழுமையான பக்தி செலுத்துங்கள், வக்கீல் போல நடக்காதீர்கள்.
கந்தல் துணியைத் திருடுவது
என்பாரே பாபா, அப்படி யாரிடமும்
அவர் அற்புதம் செய்வாரா? நடக்குமா? என்றெல்லாம் கேட்காதீர்கள். உங்கள் பக்திக்கும்
நம்பிக்கைக்கும் ஏற்ப நிச்சயம் உனக்கு அற்புதம் நடக்கும்.
No comments:
Post a Comment