Sunday, February 16, 2014

பாபா செய்த அற்புதம்

நான் ஜெகத் ஜோதி அம்மா வீட்டின் பின்புறத்தில் உள்ள என் வீட்டில் வசிக்கிறேன். என் பிள்ளைகள் அனைவரும் ஜெகத் ஜோதி அம்மாவின் மாணவர்கள். அவர்கள் தான் அடிக்கடி பாபாவைப்பற்றி சொல்வார்கள். ஆனால் அப்போதெல்லாம் அவர் மீது எனக்கு பக்தி ஏற்பட்டது கிடையாது. எனது மகள் ப்ரீத்தி பாபா மீது பைத்தியம் போன்ற பக்தி செலுத்துவாள். அடிக்கடி கோயிலுக்குப்போவாள். ஆனால், வணிக வரித் துறையில் வேலை பார்த்த என்னால், இவ்வாறு செல்லமுடியவில்லை. தவிர, பக்தியிருந்தால் நிச்சயமாகப்போயிருப்பேன்.
     எனக்கு இரு மகன்கள். இருவரும் இரட்டைப்பிறவிகள். ப்ரதாப் குமார்,ப்ரவீன் குமார் என்று பெயர். கடந்த ஆண்டுக்கு முன் பத்தாம் வகுப்புத் தேர்வில் தலா 422, 421 என மதிப்பெண்களைப் பெற்று இருந்தார்கள். மேனிலை வகுப்பில் அவர்களை சேர்த்திருந்தேன்.
     ஒரு முறை எனது அண்ணன் மற்றும் சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தோம். என் அருகிலிருந்த இரண்டாவது மகன் ப்ரவீன் குமார் திடீரென பின்பக்கமாக நகர்ந்து சென்று தடாலென விழுந்தான். சற்று நேரத்தில் வலிப்பு வந்தவனைப் போல இழுத்துக் கொண்டிருந்தான். விளையாட்டுக்காக இப்படி செய்கிறான் என நினைத்து, அவனை அதட்டிப் பார்த்தேன். அதன் பிறகு தான் தெரிந்தது அவன் உண்மையிலேயே வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பது.  மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றோம்.
     அவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இந்த அறுவை சிகிச்சை செய்ய கபாலத்தைத் திறக்க வேண்டும் என்றார்கள். நான் பயந்து போனேன். பாபாவிடம் வேண்டினேன். வேறு மருத்துவரைப் பார்த்தபோது, அறுவை சிகிச்சை தேவையில்லை, மருந்திலேயே சரி செய்யலாம் என்றார்கள். புகழ் பெற்ற மருத்துவர்களைக் கூடப் பார்த்து ஒப்பீனியன் பெற்றேன்.
     இப்போது என் மகன் நன்றாக இருக்கிறான். நன்றி செலுத்தி விட்டுப் போவதற்காக சீரடி வந்தேன்.

ராஜேஸ்வரி,
பாப்பம்பட்டிப் பிரிவு,

கோவை

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...