நாம் சந்தோஷமாக இருக்கும்போது தலை கால் புரியாமல் ஆடுகிறோம், பாடுகிறோம். கொண்டாடுகிறோம். யாரையும்
மதிப்புமில்லை, அன்பாகப்
பேசுவதுமில்லை. இப்படி இருப்பதால் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்கிறோம் என்ற எண்ணமும்
எழுவதில்லை. அப்படியே தோன்றினாலும் மனம் அவற்றை ஏற்க மறுத்து மாறுபட்ட கருத்தை
மற்றவர்கள் மீது திணிக்க வைக்கிறது.
ஆனால் அதுவே கஷ்டம் என்று
வரும்போது? நிலைமை தலை கீழ். நான்
மனமறிந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்யவில்லையே. அப்படியிருக்க எனக்கு ஏன் இந்தக் கஷ்டம் வந்தது?
என்று
அங்கலாய்க்கிறோம்.
அந்த நிலையில் கடவுளை நிந்திக்கிறோம்.
எனக்கு ஏன் இந்த சோதனை? நான்
அப்படியென்ன பாவம் செய்தேன். எந்தப்பாவமும் செய்யாதவனாயிற்றே? எனக்கு ஏன் இந்த தண்டனை எனப் புலம்புகிறோம்.
முற்பிறவியில் செய்ததன் பலன்தான்
இன்ப துன்பங்கள். நம் முன்னோர் குடும்பத்திலிருந்து செய்தவற்றை சந்ததியினர்
அனுபவித்துதான் ஆக வேண்டும். அதுதான் கர்மா. கர்ம வினை. இவற்றிலிருந்து நாம் தப்ப
இயலாது. தப்பிக்கவும் இயலாது. அதனால் மனமானது சந்தோசம் வரும் போது, அது அவனால் உருவானது என்றும் கஷ்டம் என்று
வரும்போது அது பிறரால், கடவுளால்
கொடுக்கப்பட்டது என்றும் எண்ணும்.
அப்படியானால், கஷ்டம் நிஜம் என ஆன பிறகு கடவுளை வணங்குவானேன்!
அதை அனுபவித்து விட்டுப் போகலாம் என்றால், கஷ்டத்தைத் தாங்கக்கூடிய சக்தி நமக்கில்லை. அதனால்தான் கடவுளே என்னைக்
காப்பாற்று என மண்டியிடுகிறோம். முறையிடுகிறோம்.
கோயில் பக்கம் தலை வைத்து படுக்காதவர்கள் கூட, கோயிலே கதியெனக் கிடக்கிறோம்.
கஷ்டம் என வரும்போது மரண பயம்
தொற்றிக்கொள்கிறது. குடும்பம், குழந்தைகள்
அனாதையாகி விடுவார்களே என கவலை கொள்கிறது. சொத்து நிரம்பியோர் சொத்தைப் பற்றிய
கவலை ஆட்கொள்ள அலைக்கழிகிறார்கள். இந்த சமயத்தில் நாம் கடவுளை துணைக்கு
அழைக்கலாம். எப்படி என்கிறீர்களா?
நீல கண்ட தீட்சிதர், அன்னை
மீனாட்சியை அழைத்த மாதிரி! ஆனந்த ஸாகர ஸ்தவம் என்ற நூலில், “அம்மா,
மீனாட்சி!
உன்னிடம் எதையும் சொல்லவேண்டாம், சகலமும்
தெரிந்தவள் நீ. ஆனாலும் கஷ்டங்களை வாய்
விட்டுச்சொல்லாவிட்டால் மனம் புண்ணாகிறது” என்கிறார்.
வாய்விட்டுச் சொல்லிவிட்டாலே
தற்காலிகமாக ஒரு ஆறுதலாக, தெம்பாக
இருக்கிறது. அதனாலேயே உனக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் நான் என் கஷ்டங்களைச்
சொல்கிறேன் என்றும் கூறுகிறார். இதையேதான் நமது சத்சரிதமும் கூறுகிறது.
நமது சாயி நாதன், நீ இப்பிறவியில் எந்தப்பாவமும் செய்யவில்லை என்றாலும்முற்பிறவியில்
செய்ததன் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அது போன்று முன்னோர்களின் செய்கையின் பலனையும்
அனுபவித்தே ஆகவேண்டும். ஆனாலும்
என்னிடத்தில் நீ வந்து விட்டதால் அதன் வீரியத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும் என்று
திடமாக நம்பு.
தாய் ஆமை தன் கண்ணாலேயே
இக்கரையில் இருந்து அக்கரையிலுள்ள குட்டிகளை கண்காணித்து காப்பாற்றும்போது நான்
அந்த வகையில் உனக்கு இருப்பேன். நீ என் உபதேசத்திற்காகவும், உதவிக்காகவும் என்னை தஞசமடைந்தால் அவைகளை உடனுக்குடன்
உனக்குக் கொடுப்பேன் என்கிறார் சாயி நாதன்.
இதனால்தான் அவரது தாரக
மந்திரமான சிரத்தாசபூரி அதாவது பொறுமை, நம்பிக்கையோடு என்னிடம் இருந்தால் என்னிடம் இருந்தால் எல்லாவற்றையும்
பார்த்துக் கொள்வேன் என்கிறார். எனவே,
இன்பத்தையும் துன்பத்தையும்
ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வரவேண்டும் எனில், நம்பிக்கை பொறுமையோடு சாயிநாதனை மனதில் நிறுத்தி
வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால் கஷ்டம் தானாக விலகிவிடும்.
- சாயி கலியன்
No comments:
Post a Comment