கடந்த 12 ஆண்டு கால சாய்
பக்தை நான். குடும்பத்தில் எல்லோருமே சாயியிடம் உத்தரவு பெறாமல் எதுவும் செய்ய
மாட்டோம். சென்ற ஜூன் 16 ம் தேதி
இரவு தமிழ் நாடு எக்ஸ்பிரஸ்சில் டெல்லி சென்று அங்கிருந்து பணிக்கர் டிராவல்சில்
பத்ரிநாத், கேதார்நாத், அரித்துவார், ரிக்ஷpகேஷ் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தோம்.
நானும் என் கணவரும் 17 ம் தேதி இரவு நாக்பூர் அருகில் வரும்போது டூர்
கேன்சல் ஆகி விட்டதாகப் போன் செய்தார்கள். நல்ல மழை பெய்து பாதையே அடைபட்டு
அறுபதாயிரம் மக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிப்படுவதாகவும் செய்தி வ்நதது.
நியாயமாகப் பார்த்தால் நாங்கள் 12,13 தேதிகளில் டூர் செல்ல நினத்திருந்தோம். ஆனால்
பேருந்தில் கடைசி சீட்தான் உள்ளது எனக் கூறியதால் நாங்கள் பத்தொன்பதாம் தேதி புக்
செய்தோம். என் இஷ்ட தெய்வம், என்
குலதெய்வம் பாபாதான் பெரும் ஆபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றினார் என்பது பிறகுதான்
புரிந்தது.
மேலும் நான்கு நாடக்ள் கழித்து
ரிஷிகேஷ், அரித்துவார், சிம்லா,
சண்டிகர், குரு ஷேத்திரம் போன்ற இடங்களுக்குச் சென்று வந்தோம்.
இவ்வாறு நான் ஏமாற்றமடையாமல்
இருக்க டெல்லியைச் சுற்றியுள்ள இடங்களுக்குச் சென்று பார்த்து வநதோம். பாபாவை
சரணடைந்தால் ஆபத்திலிருந்து காப்பாற்றப்படுவோம் என்பதையும், மன மகிழ்ச்சி சிறிதும் குறையாது என்பதையும் உணர்ந்துகொண்டோம்.
- மங்களம் கண்ணன்,
பொழிச்சலூர்
No comments:
Post a Comment