Saturday, February 15, 2014

இறைவனிடம் பேரம் பேசாதீர்கள்.

சாயி பக்தர் தாமு அண்ணா, பாபாவிடம் ஆசி வாங்கினால், தனது புதிய பருத்தி பிஸினஸ் பல மடங்காகப் பெருகும் என நினைத்து,தொழிலில் இறங்கலாமா? எனக் கேட்டு பாபாவுக்கு கடிதம் எழுதினார். பாபா ஒப்புக்கொள்ளாதது தெரிந்ததும், நேரடியாக ஷீர்டி வந்து பாபாவைப் பணிந்து கேட்டால் நடக்கும் என நினைத்து வந்தார்.
     லாபத்தில் உங்களுக்கு ஒரு பர்சன்ட் தந்து விடுகிறேன் என மனதிற்குள் சொல்லியபடி பாபாவின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டிருந்தார்.
     “என்னை இதிலெல்லாம் இழுக்காதே..என்றார் பாபா.
     “தானிய வியாபாரம் செய்ய அனுமதி கேட்கலாமா? என நினைத்தார்.
     “ரூபாய்க்கு ஐந்து சேர் அரிசி, பருப்பு, கோதுமை என தானியம் வாங்கி அதை ஏழு சேர் வீதம் விற்பீர்! என்றார் பாபா.
     தாமு முடிவை கைவிட்டார். இதைக் கேள்விப்பட்ட அவரது பங்குதாரர்கள், எவ்வளவு அருமையான வியாபாரத்தை, வீடு வீடாகப் பிச்சையெடுக்கும் ஒரு பக்கிரி பேச்சைக்கேட்டு விட்டு விட்டீர். உமக்கு லாபம் கிடைக்கவேண்டும் என்று விதியே இல்லை போலும்! என ஏளனம் பேசினார்கள்.
     அவர்களுக்குப் பெருத்த நட்டம் ஏற்பட்டது. பக்கிரியின் பேச்சைக் கேட்காமல் போனோமே என எல்லோரும் வருத்தப்பட்டார்கள்.
     தாமு மட்டும், பாபாவின் பேச்சைக் கேட்டதால் தப்பித்தோம் என கண்ணீர் மல்க, அவரது பாதத்தில் அமர்ந்தார். பல நன்மைகளைப் பெற்றார்.

     இறைவனிடம் பேரம் பேசாதீர்கள். அவருடைய உள்ளக் கருத்தை அறிந்து கொள்ள வேண்டுதலோடு கோரிக்கை வைத்தால், சரியான வழி பிறக்கும். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். பாபா கைவிடமாட்டார். வேறு ஏதோ ஒரு பெரிய பொறுப்பு உங்களுக்காக காத்திருக்கிறது என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...