அன்பான சாயி பந்துக்களே!
அவசர
காலம், அவசர கோலம் என வாழ்ந்துக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் எதையும் யோசிக்கவே
நேரம் கிடைப்பதில்லை. என்ன செய்யலாம் என நினைப்பதற்குள் ஏதேனும் ஒரு பிரச்சினை
வந்து நம்மை கவிழ்த்து விடுகிறது. இதிலிருந்து தப்பிக்கவே முடியாதா என்ற பயம்
நம்மை சூழும்போது நாம் திகைக்க ஆரம்பித்துவிடுகிறோம்.
நீங்கள் உண்மையான சாயி பக்தராக இருந்தால்
இனி அப்படி திகைக்காதீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் அது அவரால் நடத்தப்படுகிறது
என்பதை ஆணித்தரமாக உணர்ந்துகொள்ளுங்கள்.
தாயின் கருவறையில் நுழையும்
முன்பு அறுபது மில்லியன் பேருடன் போட்டியிட்டு ஜெயித்துத்தான் கருமுட்டைக்குள்
நாம் புகுந்து கருவாகி உருவாகி இன்று மனிதராக நடமாடி வருகிறோம். அந்த நிலையில்
நமக்கு கையும் இல்லை, காலுமில்லை,
புத்தியுமில்லை. அந்த நிலையிலேயே நம்மை
ஜெயிக்க வைத்த நமது சாயி, இப்போது
அனைத்தும் உடையவர்களாக இருக்கிற போது நம்மை கைவிட்டு விடுவாரா என்ன? கைவிடமாட்டார்.
நீங்கள் எதிலும் ஜெயிக்கப் போவது உறுதி. அதை உறுதி செய்து கொள்ள வேண்டுமானால் உங்கள்
பிரச்சினை, பாரம் எதுவாக
இருந்தாலும் அவற்றை யோசிக்காமல் அவர் மீது வைத்து விட்டு ரிலாக்ஸாக இருங்கள். சாயி
உங்களை எப்படி ஜெயிக்கவைக்கிறார் எனப் பாருங்கள்.
அன்புடன் சாயி வரதராஜன்
No comments:
Post a Comment