Tuesday, February 4, 2014

சுகம் கிடைக்க சுலப வழி!



நீ தூசு என்பதை உணர்ந்தாலே பணிவு தானாக வந்துவிடும். பணிவு பொய்யானதாக இல்லாமல் பார்த்துக்கொள். எவர் மீதும் கோபம் இல்லாமல் யோசிக்கப் பழகு. அப்போது உனது எந்தச் செயலிலும் நோக்கம் இருக்காது. நோக்கம் என்பது பலன் எதிர்பார்த்தல். பலன் எதிர்பார்த்தால் பிரச்சினை நிச்சயம். சிறு கல் தடுத்தாலும் மனிதனுக்கு மரணம் ஏற்படும். தடுக்காமல் காப்பது எது? தடுக்க வைப்பது எது? விசாரி.

தொன்னையில் பாயசம் இருக்கிறது. தொன்னை அழகாக இருக்கிறது என்று சொல்பவன் மூடன்.  தொன்னைக்கு மரியாதையே பாயசத்தால்தான். பாயசம் அற்ற தொன்னை குப்பை. பாயசத்தைத் தாங்கி நிற்பதே அதற்குப் பெருமை.

ஜீவாத்மாவைத் தாங்கி நிற்பது உடல். ஜீவன் இல்லாமல் இருந்தால் அது ஒரு குப்பை. ஜீவாத்மாவை தாங்கி நிற்பதே அதன் பெருமை. இந்தா என்று ஒரு தொன்னை பாயசத்தைக் கொடுத்தால், நான் தொன்னையைத் தருகிறேன் என்றா அர்த்தம்?  பாயசம் ரொம்ப ருசியாக இருக்கிறது. ஆனால் தொன்னை அப்படியா இருக்கிறது? ஆத்மா நன்றாக இருந்தால் உடல் நலமாக இருக்கும். தொண்டு செய், சேவை செய். நல்ல செயல்களைச் செய்.

தான தர்மங்களை பலன் எதிர்பார்க்காமல் செய். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கப்படு. அன்பாய் இரு.. உன் உடலும்நலமாய் இருக்கும். உள்ளமும் நன்றாய் இருக்கும். ஆத்மா உன் வசப்படும்.

உண்மை உணர்வாய். உயர்வு அடைவாய்.  குருவை நாடு. வழி பிறக்கும். சும்மா இரு.. சுகம்  கிடைக்கும்.



- பாபா மாஸ்டர்

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...