கோயமுத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நான் ஆசிரியையாகப் பணியாற்றுகிறேன்.
சீரடி செல்ல வேண்டும் என்ற விருப்பத்தால், பயணத்திற்கு புக் செய்திருந்தேன். துவக்க நள் முதல் என் மகன் இதற்கு தடை
சொல்ல ஆரம்பித்துவிட்டான்.
புக் செய்த நாள் முதல்
கோதுமையால் செய்த உணவை சாப்பிடுவதை விட்டுவிட்டேன். தினமும் காலை மாலை இருவேளையும்
108 தடவை ஓம சாய் எழுத
ஆரம்பித்தேன். இதெல்லாம் எதற்காக என்றால், எவ்விதமான சிக்கலும் இல்லாமல் பயணம் அமையவேண்டும் என்பத்றகாகவும், குறிப்படpட்ட நாளில் நங்கள் சீரடி சென்று சாயி அப்பாவை தரிசனம்
செய்யவேண்டும் என்பதற்காக.
கர்ம வினை அதிகம்
இருந்ததுபோலும். என் மகன் விடுப்பு கிடைக்கவில்லை, இன்னொரு முறை செல்லலாம என்று கூறிவிட்டான். இதனால் வேறு
வழியின்றி புக்கிங் அலுவலகத்தில் கேன்சல் செய்யச் சொன்னேன்.
ஆனால் எனக்கு சீரடி செல்லவேண்டும
எனற உத்வேகமும், ஆவலும்
அதிகரித்தது. குறிப்பிட்ட நாளில் சீரடியில் என் அப்பாவை தரிசனம் செய்தே ஆவேன். அதுவரை
மீண்டும் தயிர் சாதத்தில் உப்பு சேர்க்கமாட்டேன், வேறு எதையும் சேர்க்கமாட்டேன் என வேண்டிக் கொண்டேன்.
சாயி அப்பா கருணையால் சீரடி விஜயம்
சிறப்பாக திருப்தியாக இருந்தது. ஆனால் எங்கள் வாழ்க்கையில் மீண்டும் ஒரு சோதனையை
சந்திக்க வேண்டிய தருணம் வந்தது. அது என் மகன் தனது உயிருக்குப் போராட வேண்டிய சூழ்நிலை.
அப்போது நான் சாயி அப்பாவிடம் வேண்டிக்கொண்டது எல்லாம், உன்னை நம்பிய எங்கள் குடும்பத்தை வாழ வையுங்கள் அப்பா,
எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும் உன் பாதங்களை
இறுக்கமாகப் பிடித்துக் கொள்வேன். விடவே மாட்டேன் எனப் பிரார்த்தித்தேன்.
என் மகனைக் காப்பாற்றிக் கொடு.
நான் உயிருள்ளவரை நன்றி உள்ளவளாகவும், உண்மை உள்ளவளாகவும் இருப்பேன் என்று உறுதி கூறினேன்.
ஒரு சாயி அன்பர் என்னிடம்,
48 நாட்கள் சங்கல்பம் எடுத்துக்கொள்ளுங்கள்
என்று கூறினார். அதன் படியே எனக்குப் பிடித்த தயிரையும், தயிர் சாதத்தையும் 48 நாட்கள் தொடமாட்டேன் என சங்கல்பம் செய்துகொண்டேன்.
என் மகன் மெதுமெதுவாக உயிர்
பிழைத்து, குணம் அடைந்தான். இன்று
நன்றாக இருக்கிறான். மருத்துவமனையில் இருந்தபோது பாபா பல விதத்தில் எங்களுக்கு
அறிவுரைகளைக் கூறி தெளிய வைத்தார். அவர் மீது நான் வைத்த நம்பிக்கை மற்றும் பக்தியாலும்,
சாயி அன்பர்களின் பிரார்த்தனையாலும் என்
மகனை பாபா உயிரோடு என்னிடம் திருப்பித் தந்தார். இதற்காக நான் என்றென்றும் பாபாவுக்குக்
கடன் பட்டவளாக இருக்கிறேன்.
ஜெய்சாய்ராம்.
சாயி கண்மணி, பொள்ளாச்சி
No comments:
Post a Comment