Wednesday, February 19, 2014

எனக்குத் தருவது எதுவும் இழப்பல்ல

       ஒருமுறை பாலகிருஷ்ண உபாசினி சாஸ்திரி பாபாவை தரிசிக்க வந்தார். அவரிடம் தட்சணை கேட்டார் பாபா. என்னிடம் பணமில்லை என்றார் சாஸ்திரி..
             பாக்கெட்டில் என்ன இருக்கிறது? எனக்கேட்டார் பாபா. ஒரு வெள்ளிக் கடிகாரம் இருக்கிறது என்றார்
                சாஸ்திரி. அதைக் கொடு என வாங்கிக்கொண்ட பாபா, அதை வேறு ஒருவருக்கு பரிசளித்துவிட்டார்.
          சாஸ்திரியிடம், ‘கடிகாரத்தை கொடுப்பதால் எதையேனும் இழந்து விட்டதாக நினைக்காதே! எனக் கூறினார்.
                “உங்களுக்குத் தருகிற எதுவும் இழப்பல்ல பாபா என்றார் சாஸ்திரி.

                சாஸ்திரி பூனாவுக்குச் சென்றிருந்த போது, அவரது நண்பர் ஒருவர், சாஸ்திரி பாபாவுக்கு ஒரு வெள்ளிக்கடிகாரத்தை தட்சணையாகத் தந்தார் எனக் கேள்விப்பட்டார். அவருக்கு தங்கக் கடிகாரம் வாங்கி பரிசளித்தார். எனக்குத் தருவது எதுவும் இழப்பல்ல என பாபா சொன்னது நினைவுக்கு வந்தது.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...