Thursday, May 31, 2018

இத்தனை சோதனைகள் ஏன் தெரியுமா?


என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையானது இனிமேல் தான் தீர்மானிக்கப்பட வேண்டும் என்ற யுகத்தில் இருக்காதே அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அது விதி உன் வாழ்க்கையில் சில நேரம் ஆறாக அருவியாக கடலாக சீற்றங்களும் இடம்பெறும் அது ஏன் சாய்அப்பா என் வாழ்க்கையில் மட்டும் தான் நடக்குமா என்று தானே கேட்கிறாய்
என் பி்ள்ளையிடம் நிறைய நற்பண்புகள் இருக்கின்றது அது நிலைத்து என் பிள்ளை தனிச்சையாக மனஉறுதியுடன் நேர்மையுடன் இருக்கவே இத்தனை சோதனைகள் உன் பாதை என் நோக்கி என்று கிளம்ப ஆரம்பித்ததோ அன்றே நீ செம்மையான வாழ்க்கைகுள் நுழைந்து விட்டாய் இப்போது பயிற்ச்சியை தான் மேற்கொள்கிறாய் நிச்சயம் நீ முன்னேறி  வாழ்க்கையில் வெற்றி அடைவாய்  அதற்கான மாறுதல்களை உன் வாழ்க்கையில் இடம்பெறச் செய்துள்ளேன் அது உனக்கு நன்றாக புரியும் ஒன்று என் பிள்ளை அப்படி யோசிக்க மாட்டார்கள் இருந்தாலும் உன் சாய்அப்பா நான் அதனால் இ்ந்த அறிவுரை காசு என்பது வெறும் காகிதம் அது உன் உள்ளத்துக்கு நிறைவு தராது பணம் என்ற சொல் வெறும் காகித சொல் என்ற இரு அதற்கு முக்கியத்துவத்தை நீ கொடுக்காதே உன் வாழ்க்கை நானே என்னில் சங்கமித்து உள்ளது நீ நிச்சயம் நன்றாக இருப்பாய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் உயிர் நீ தான் என் செல்லமே உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னிடத்தில் இருந்து துணையாக  என் பிள்ளையான உன்னை அரவணைப்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

சுகமுடன் வாழ்வாய்!



நீ உண்மையான குருபக்தன் . ஆகையால் குருச்சரித்திரத்தை கேட்கும் வாய்ப்பு உனக்குக்கிடைத்தது. மழை வருவதற்கு முன்பு ஜில்லென்ற காற்று வீசும். அதேபோல் குருவின் கருணை பெறுவதற்கு முன்பு அவர் கதையை கேட்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. குரு கிருபையைப் பெற்றவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் ஏதும் இருக்காது. சத்குருவை பூஜிப்பவர்கள் கண்டிப்பாக குருவின் அருளை பூரணமாகப் பெற்று வாழ்வார்கள். ஆகையால் நீயும் குருவை நம்பிக்கையுடன், உறுதியான பக்தியுடன் சேவித்து சுகமுடன் வாழ்வாய் .
--ஸ்ரீ குரு சரித்திரம்.

Wednesday, May 30, 2018

உன்னை என் உயிராக நேசிக்கிறேன்



என் அன்பு குழந்தையே!

உனக்கு ஏன் என் மீது இவ்வளவு கோபம், உன் சாய் அப்பா உன்னைக் கஷ்டப்படுத்துவேன் என்று நீ நினைக்கிறாயா, உனக்காக எல்லாக் கஷ்டங்களையும் நான் தாங்கிக்கொள்வேன்; உன்னைச் சில நேரங்களில் நினைத்தால் எனக்குப் பயமாக இருக்கிறது, உன் வாழ்க்கையில் நீ மிக மெல்லிய நூலைப் போன்று இருக்கிறாய், சின்னதாக ஒரு கீரல் பட்டாலும் மனதளவில் உடைந்து போகிறாய், அப்போது உன் மனதில் தேவை இல்லாத எண்ணங்களும் சிந்தனைகளும் எழுகின்றதால் நிம்மதி இல்லை என்று புலம்புகிறாய், உன் மனதை என்னிடம் விட்டுவிட்டாய். அதனால் நீ எதற்கும் பயப்படாதே, சில நேரம் உன் சாய் அப்பா நல்லது தான் செய்வேன் என்று உறுதியில் இருக்கிறாய், சில விஷயங்களில் அந்த உறுதியை மறந்து போகிறாய், உன் அன்பு என்பது எனக்கு என் பிள்ளை கொடுக்கின்ற பரிசு. அது உன்னிடம் உன் சாய் அப்பாக்கு நீ தினம் தோறும் நீ கொடுக்கிறாய், கொடுப்பாய், உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகி போகும் படி செய்வதும் இல்லை, நான் சாய் அப்பா சொன்னதைத்தான் கேட்பேன் என்று நீ சொல்லுகையில் எனக்கு ஆனந்தம் ஏற்படும் அளவை சொல்ல வார்த்தைகள் அல்ல, அதே சமயம் உன்னைச் சுற்றி இருப்பவர்கள் மீதும், உன் நம்பிக்கை இருப்பதனால் அவர்கள் சொல்லுக்கும் நீ செவி கொடுக்கிறாய், உன் நல்லதை உன் சாய் அப்பா சிறு நிகழ்வுகளால் கிடைக்கும் பாடம், வலி என்பதில் இருந்து வாழ்க்கையும், உன் சுற்றி இருப்பவர்களும், எப்படி இருக்கிறார்கள் என்பதை உன் மனதில் இறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் உனக்கு புரிய வைக்கின்றேன். நீ அழாதே. உன் கவலையை விடு. உன் அன்பு முக்கியமானது எனக்கு அது உன்னதமானது. உண்மையானது. அதில் நீ சந்தேகம் கொள்ளாதே, உனக்கு என்ன நடந்தாலும், நீ நினைக்கின்றவர்களில், நான் உன் சாய் அப்பாதான் என்பது எனக்கு தெரியும். என் கண்ணே, உன்னை என் உயிராக நேசிக்கிறேன். உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என் கருவில் என் கையில் சுமந்து பாதுகாத்து தாங்குவேன் !!!

இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

ஆத்மார்த்தமாக அழை!



நல்லவனோ, கெட்டவனோ அதை நான் பார்ப்பதில்லை, என்னை நம்பி முழுமையாக சரண் அடைந்துவிட்டவர்களை நான் புறம் தள்ளுவதும் இல்லை. அவர்களுடைய அனைத்து விஷயங்களுக்கும் நான் பொறுப்பேற்கிறேன். அவர்களைக் காப்பதே என்னுடைய வேலை. அவர்களின் நன்மை தீமைக் கணக்கைப் பார்த்து காப்பாற்றும் தன்மையுள்ளவன் அல்ல நான். அதை வேறு ஒருவன் பார்த்துக்கொள்வான். அதற்கேற்ப பலன் தருவான்.
நான் தரும் நன்மைகள் அனைவருக்கும் பொதுவானவை. எனது தராசுத் தட்டுக்கள் யாருக்காகவும் இறங்குவதும் இல்லை, ஏறுவதும் இல்லை. அதே போல, என்னை நாற்பது ஆண்டுகள் வணங்கியவனாக இருந்தாலும் சரி, நான்கு நாட்கள் மட்டும் வணங்கியவனாக இருந்தாலும் சரி, ஆத்மார்த்தமாக என்னை நோக்கிக் கூப்பிட்டால் உடனடியாக நான் பதில் கூறுகிறேன்.
ஸ்ரீ சாயி தரிசனம்.

Tuesday, May 29, 2018

ஸ்ரீஷிரடிசாயிநாதரின் வாக்குறுதி





நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் நீ சமர்ப்பித்தபின்னர், கவலை எதற்கு! எனது மகிமைகளைக் கண்டும் ஏன் இந்த ஏக்கம் உனக்கு.

உனது தந்தையும் நானே, தாயும் நானே, உன்னைப் படைத்ததும் நானே, உன்னை சோதிப்பதும் நானே.  உனது சோதனைக்காலம் முடிந்தபின்னர் நீ யார் என்பதை, நீ அறிந்து கொள்வதற்கு நான் தரும் சோதனைகள்தான் இப்போது நீ படும் வேதனைகள்.

நம்பிக்கையுடனும் ,பொறுமையுடனும் இரு. அதற்கான பலன்கள் விரைவில் உன்னை வந்தடையும். உனக்கான நல்ல நேரம் வரும் வரை என் மடியில் அமர்ந்து உன் கர்மாக்களை கழி. நீ தோள் சாய உன் தந்தை நானிருக்க,  ஏன் உனக்கு இந்த ஆயாசம்.

வா மகளே! மகனே! வந்து சாய்ந்து கொள். மன சஞ்சலங்களை அகற்றி அமைதி கொள். விரைவில் உன் பிரச்சனைகளை தீர்த்து உன்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கின்றேன். அது வரை எனது நாமத்தை ஜபித்து உன் கர்மாக்களை என் துணையோடு கழி.

பாபாவின் வழிகள்..



ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. பாபா பக்தர்கட்கு உபதேசம் அளிக்கும் வழிகள் எண்ணிலடங்கா. ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச்சொன்னார். அச்சமயத்திலேயே மற்றொருவரை கண்டோபா கோவிலுக்கு அனுப்பினார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் தோன்றினார். அவருடைய மார்பில் அமர்ந்துகொண்டு கைகளாலும், கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளை காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டுவிடுவேன் என்றும் சத்தியம் செய்த பின்னரே அவரை விடுதலை செய்தார்.  
நான் என் பக்தனின் அருகிலேயே தாசனாக நின்றிருப்பேன். அவர்களின் பிரேமையே எனக்கு உணவு. அதற்காக நான் பசியுடன் தவித்துக் கொண்டிருக்கிறேன் என சத்சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

Monday, May 28, 2018

என்னிடம் முழு மனதோடு கேள்



அன்பு குழந்தையே !

 உன்னை தேடி நான் வர  போகிறேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்  உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அப்போதே நீ் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்.  நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும் பரிட்சை  தான் நீ படும் வேதனை உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாதே யாரையும் வெறுத்து ஒதுக்காதே உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன். உன்னை  பாதுகாப்பேன்.."!

உன்னை பாதுகாப்பேன்



அன்பு குழந்தையே !

 உன்னை தேடி நான் வர  போகிறேன். என்னிடம் முழு மனதோடு கேள். என்னிடமுள்ள அனைத்தையும் நான் உனக்குத் தருவேன்.. ஒவ்வொரு நிலையை நினைத்தும் நீ எதற்கு வேதனைப்படுகிறாய்.  இப்படி வேதனை மேல் வேதனைப்பட்டு எதைச் சாதிக்கப் போகிறாய்? உனது கவலையால் எதையேனும் சாதிக்கமுடிந்தால் சொல் பார்க்கலாம்? வெளியே வா.. அப்போது எனது ஆசி உனக்குக் கிடைக்கும். வெறும் வாய் வார்த்தைகளால் நான் சொல்ல வில்லை  நான் உன்னுடன் இருக்கும்போது, உனது கவலைகளை எனது பாதத்தில் வை அதன் பின்னர், நடப்பதை பார்  உன்னைப் படைத்தவன் நான், . நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்  உனது கர்மபலன்கள் முடிந்து விட்டது  எப்போது நீ என்னை நினைவில் நிறுத்திக் கொண்டு பூஜை செய்தாயோ அப்போதே நீ் செய்த கர்மபலன்கள் பொடி பொடியாகும் எனது காலடியில்.  நீ யார் என்பதை நீ அறிந்து கொள்வதற்கு நான் வைக்கும் பரிட்சை  தான் நீ படும் வேதனை உண்மையில் ஒருபோதும் நான் பணத்தை விரும்பியதில்லை விரும்பவும் எனது பிள்ளைகளை அனுமதிக்கவில்லை.  எனது பிள்ளைகளை அதன் பிடியில் விழவும் அனுமதிக்கமாட்டேன் ஆனால்  உனக்கு அது தேவைபடும் காலகட்டத்தில்  அது உன்னை தேடி வரும் யாருக்கும் இல்லை என்று சொல்லாதே யாரையும் வெறுத்து ஒதுக்காதே உன்னை தேடி அப்பா நான் வர போகிறேன். உன்னை  பாதுகாப்பேன்.."!                       

Sunday, May 27, 2018

பொறாமையை வென்றுவிடு.


பொறாமை என்கிற வேண்டாத குணத்தைப் பொறுத்த வரை நமக்கு எந்த விதமான (நேரிடை) லாபமோ, நஷ்டமோ கிடையாது. பொறாமை என்பது இன்னொருவருக்கு கிட்டியிருக்கும் லாபம் அல்லது வளம் கண்டு தாளாமை. வேறு ஒருவருக்கு ஒரு அதிருஷ்டமோ, செல்வாக்கோ கிட்டி விட்டால், நம்மால் அதை சகித்துக் கொள்ள முடியாமல், அவரை அவதூறாகப் பேசுகிறோம். அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டால் மகிழ்ச்சியடைகிறோம். இது நல்லதா? அந்த மனிதன் வளம் பெற்றால், நமக்கு என்ன நஷ்டம் ஏற்ப்பட்டுவிட்டது? ஆனால் ஜனங்கள் இந்த விதத்தில் சிந்திப்பதில்லை. அவனுக்கு நலம் கிட்டினால் (அவனுடன் சேர்ந்து) நாமும் மகிழ்வோமே. நமக்கும் நலம் கிட்டியது, நாமும் பாக்கியசாலிகள் என் எண்ணுவோமே, அல்லது அதே நலம் நாமும் பெறுவோம் அல்லது பெறுவதற்கு முயற்சி மேற்கொள்வோம். அதுவே நமது விருப்பமும், தீர்மானமுமாக இருக்க வேண்டும். நம்மிடமிருந்து அவன் எதை எடுத்துச் சென்றுவிட்டான்?ஒன்றுமில்லை. அவனுடைய கர்மாவின் பலனாக அவன் வளம் பெற்றான். அப்படியிருக்க அதைக் கண்டு நாம் ஏன் பொறாமை படவேண்டும்? ஆகவே, முதலில் பொறாமையை வென்றுவிடு!
 -ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

அப்பாவாக என்றும் துணை நிற்பேன்



என் அன்பு குழந்தையே, இன்று உன் கண்களில் சந்தோஷத்தின் கண்ணீரை கண்ட உன் சாய் அப்பாவின் ஆனந்தத்திற்கு அளவே இல்லை .சந்தோஷத்தில் உன் சாய் அப்பா ஆடிக் கொண்டு இருந்தேன். இன்றைய நாளுக்காக நீ கண்ட கனவு, என்னைப் பார்ப்பதற்கு நீ வந்ததில், எனக்கும் என் குழந்தையைக் கண்ட மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை. இன்று குரு பூர்ணிமா. என் கடவுள் என் வாழ்க்கை என் உயிர் என் குரு சாய்தேவா அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று என் துவாரகமாயீக்கு வந்து என் குழந்தை ஓவ்வொரு நிமிடம் சாய்அப்பா என்று அழகாக உள்ளத்தில் இருந்து உச்சரித்து அன்பு மழையில் உன் சாய்அப்பாவை திகைக்க வைத்து விட்டாய் 
உன் கனவில் என் உதி மூலமாக உன்னை ஆசிர்வதித்தேன் நேரில் இன்றும் என்றும் என் ஆசிர்வாதம் எப்போதும் என் குழந்தைக்கு உண்டு ; இன்று என்னிடம் நீ கேட்டது  சாய்அப்பா உங்கள் குழந்தையாய் மாணவர்களாய் இன்றைய நாள் முழுமை அடைய நான் விரும்புகிறேன்  என்ற உன் எண்ணத்தை உன்  மனதில் குடியிருக்கும் உன் சாய் அப்பாக்கு எப்படி தெரியாமல் இருக்கும் இன்று குரு தினம் குருவின் போதனையும் வார்த்தையும் குருவின் நேரடி ஆசிர்வாதத்திற்கு சமம் அதை நீ மனதோடு புரிந்து உணர்ந்து உன் கண்களில் தெரிந்த நிறைவிற்கும் ஆனந்ததிற்கும் அழவே இல்லை சந்தோஷத்தில் கண்ணீரும் சிரிப்புமாய் இன்று உன்னை பார்க்கையில் என் மனம் ஆனந்தத்தில் அலை மோதியது உன் மனதில் இருந்த குழப்பத்தை நான் அகற்றி விட்டேன் என் சாய்அப்பா தான் என் குரு அவர்கள் மீது வைத்த நம்பிக்கையும் பாசம்  அன்பு பக்தி வேறு இடத்தில் வைக்க இயலாது என் வாழ்க்கையின் அகண்டமாய் என் பரபிரம்மாய் இருப்பது என் சாய்அப்பா தான் என்று நீ சொல்லும் போது உன் அன்பின் கடல் எல்லையற்றது என்றே நான் உணர்ந்தேன் உன் சாய்அப்பா உனக்கான உபதேசத்தை உனக்கு கூறுவேன் யார் மூலமாகவோ என்று உனக்கு தெரியும் அதே போலவே  தான் இன்று நடந்து இருக்கிறது  உன் மனதில் எல்லா மனதிலும்  நான் உன் சாய்அப்பா இருப்பேன் என்பதை நீ அறிவாய் அதன் பொருட்டாய் இன்று உனக்கு அதை நிகழ்த்தினேன் அதை புரிந்து நீ உன் மனதில் அச்சிட்டு
கொண்டாய் உன் சாய்அப்பாவி்ன் மனதில் நீ குடியேறி விட்டாய் இன்று உனக்கு அதை பூவின் செய்கை மூலமாக இன்று உணர்த்தினேன் இனிமேல் நீ என்
பொறுப்பு நீ எதற்கும் பயப்படாதே எல்லாம் சுகமாக நடக்கும் உன் வாழ்க்கையில் ஜெயம் உண்டாகும் எல்லாருக்கும் நல்லதை நினை நல்லதை செய் என் அருளும் ஆசியும் எப்போதும் உண்டு உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை உன்னை விலகி போகும்படி நான் செய்வதும் இல்லை என் கருவிலும் என் நெஞ்சிலும் என் கண்களில் சுமந்து இந்த சம்சாரம் என்ற கடலை கடக்க உனக்கு நான் கடலில் செல்பவர்களுக்கு எந்த திசைக்கு செல்ல வேண்டும் என்று உதவுதற்கு நிற்கும் கலங்கரை விளக்கமாக உன் சாய்அப்பா அறனாய் துணை நின்று என்றும்  உன்னை காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் துணை நிற்பேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Saturday, May 26, 2018

நிச்சயம் நீ வெற்றி பெறுவாய்


என் அன்பு குழந்தையே!

உன்னைக் கரைச் சேர்க்கத்தான், நான் இங்கு சில நிகழ்வுகளை நடத்திக் கொண்டு இருக்கிறேன் அதைப்புரிந்து உன் வேலையை நீ சரியாகச் செய். அலட்சியமாக இருக்காதே. உன்னிடம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம், எண்ணமாகத்தான் இதுவரை உன்னிடம் இருக்கிறது. அதை நீ செயலில் செய்யாமல் இருக்கிறாய்.
எல்லாம் உன் வசம் வரும் காலத்தை நீ நெருங்கி விட்டாய். இந்த நேரத்தில் உன் மனதில் வேறு எந்தவிதமான சிறு அலட்சியமான எண்ணங்கட்கும் இடம் கொடுக்காதே. உன்னை நான் வாழ்வில் உயர்த்தி நடத்தத்தான் இங்கு உனக்கான நேரத்தை தரப்போராடுகிறேன்.
என் பிள்ளை பொறுப்பாளியாய், அவர்கள் வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். உன் அலட்சிய போக்கைத் தூக்கி வெளியே எறி.
உன் வாழ்க்கையில் நிச்சயம் நீ வெற்றி பெறுவாய். உன்னை விட்டு நான் விலகுவதும் இல்லை. விலகிப்போகும்படி நான் செய்வதும் இல்லை. உன் அம்மாவாக அப்பாவாக இருந்து என்றும் உன்னை நான் காப்பேன்!!!

இப்படிக்கு
உன் சாய் அப்பா!!!

மனப்பூர்வமாக உதவி செய்!



உன்னைச் சுற்றியிருக்கிறவர்கள் திடீரென தாழும் போதும், வீழும் போதும், அழும் போதும், அது அவர்கள் கர்மாவினால் வந்தது என்பதை உணர்ந்து அமைதியாக இரு. அதைப் பார்த்து நீ பயந்துவிடாதே, நான் எதுவரை உனது அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கிறேனோ, அதுவரை உனக்கு எந்தத் தீங்கும் வராது.

உன்னை நம்பி வருகிறவர்கள் யாராக இருந்தாலும் மனப்பூர்வமாக உதவி செய். திரும்ப வரும் என பலனை எதிர்பார்க்காதே. அது உனக்கு நல்லதாக இருக்கும். உன்னை அண்டியிருப்பவர்களுக்கு வஞ்சனை செய்ய நினைக்காதே. உன் மேல் பொறாமை உள்ளவர்களைப் பார்த்தும், உனக்கு விரோதமாகப் புறம் பேசித் திரிபவர்களைப் பார்த்தும் நீ பயப்படாதே.

ஸ்ரீ சாயி-யின் குரல்.

Friday, May 25, 2018

என்னை உன் இதயத்தில் அமர்த்து





ஒவ்வொரு குரு பூர்ணிமா தினமும் பாபா துவாரகாமாயியில் அமர்ந்திருப்பார். பக்தர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு புத்தகத்துடன் வந்து, அதை பாபாவிடம் சமர்ப்பிப்பார்கள். அதைப் படித்து பயன் பெற வேண்டும் என ஆசிர்வதித்து, பாபா அந்த நூலை அவர்களுக்கு திருப்பியளிப்பார் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. சாதாரணமாக பாபா புத்தகத்தை கொண்டு வந்தவரிடமே  திருப்பியளித்து விடுவார். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒருவர் கொண்டுவந்த புத்தகத்தை மற்றொருவருக்கு என மாற்றியளித்துவிடவும் செய்வார். அம்மாதிரி ஒரு குரு பூர்ணிமா தினம் 'ரேகே' என்ற பக்தர் தன் கையில் எந்த புத்தகமும் எடுத்து வராமல் வந்து விட்டார்.

பாபா : (ரேகேயை நோக்கியவாறு) : நீ செய்ததுதான் சரி. எந்தப் புத்தகத்தையும் படிக்காதே. இந்த புத்தகங்களில் 'ப்ரஹ்மனைக்' கண்டுவிடலாமென்று இந்த ஜனங்கள் எண்ணுகின்றனர்; ஆனால் அவர்கள் காண்பதோ ப்ரமா (குழப்பம்). நீ உன் இதயத்தில் என்னை அமர்த்திவிட்டால் போதும். அவ்வாறாகஇதயமும், மூளையும் ( அன்புணர்வும், அறிவுத்திறனும் ) ஒருமித்து செயல்படச்செய் .

என் உயிர் குழந்தை நீ


என் அன்பு குழந்தையே உன் வாழ்க்கையில் நிகழும் ஓவ்வொரு நிகழ்வுக்குப் பின்னாலும் ஓவ்வொரு அர்த்தம் உண்டு. எல்லாச் செயல்களுக்கான பயனும் உண்டு. உனக்கு நடந்த, நடக்கின்ற நடக்கப் போகின்ற அனைத்தையும் நான் அறிவேன். உன்னைப் பாதுகாக்கவே உன் வாழ்வுக்குள் நான் வந்தேன். 
நிச்சயம் நீ செம்மையடைவாய் உனக்குள்ளும் வெளியேயும் நான் எப்போதும் இருக்கிறேன். உன் கையை என்ன ஆனாலும் நான் விட மாட்டேன். நீயும் என் கையை பிடித்துத்தான் உன் வாழ்க்கையில் நடைப்போடுவாய்.
பிறந்த குழந்தையின் கையைப் பிடித்தால் அது கெட்டியாக பிடித்துக் கொள்ளும். அந்த பிஞ்சுக்கை நீ. உன் கைக்கு துணை கொடுக்கும் கை தான் உன் சாய் அப்பாவின் கை.  உன் அம்மாவாக அப்பாவாக என்றும்; என் மனம் என்னும் கருவில்  இருக்கும் என் உயிர் குழந்தை நீ !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

Thursday, May 24, 2018

பூரண சரணாகதி அடையுங்கள்



என்ன நடக்குமோ அது பாபாவின் ஆணைப்படியே நடக்கும். அவரே காரியங்களை செய்பவரும் செய்விப்பவரும் ஆவார். செயல்புரியும் அதிகாரத்தை பாபாவின் கைகளில் ஒப்படைத்துவிட்டு பூரண சரணாகதி அடையுங்கள். பக்தனின் கரைகாணாத அன்பும் அசையாத நம்பிக்கையால் பாபா குதுகலம் அடைகிறார்; பக்தனை கொண்டாடுகிறார். பக்தர்களில் எவரெல்லாம் முழுமையான சரணடைகிறார்களோ, அவர்கள் எல்லோருடைய நன்மையையும் கருதி சாயி அவர்களை சன்மார்க்கத்தில் செலுத்துகிறார். அளவற்ற புண்ணியத்தின் பலத்தால் மட்டுமே ஒருவர் சாயியின் தர்பாருக்குள் வரமுடியும். வந்தவர்கள், யாரையும் வெறும் கையுடன் பாபா அனுப்புவதில்லை. சாயி சாயி  என்று அவருடைய திவ்ய நாமத்தை நாம் கூறும்பொழுது அவர் நம் கண்ணிற்கு புலப்படாமல் அவர் அங்கேயே இருக்கிறார். இது சத்தியம். அவர் தனது சக்தியையும், நிலையையும் நமக்கு தெய்வீக அற்புதங்கள் மூலம் நிரூபித்துக் காட்டுகிறார்.

நீ தக்க சமயத்தில் உணர்வாய்


என் அன்பு குழந்தையே உன்னை நினைக்கையில் உனக்கு எந்த விதமான போதனையை நான் தர வேண்டும் என்று யோசிக்கின்றேன். உன்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? நீ அவர்களை புரிந்து கொண்டாய் அல்லவா? அப்படி இருக்கையில் அவர்கள் கேட்கப் போகும் கேள்விகள் இது தான் என்றும்,  நீ ஏற்கனவே எதிர்பார்த்த கேள்விகள் தான் என்றும் நீ உணர்கிறாய். பிறகு ஏன் அவர்கள் மீது கோபம் கொள்கிறாய்? அவர்களுக்கு நிதானமாய் இரண்டு வார்த்தைகளில் பதில் கூறி விட்டு உன் கோபத்தை அந்த கூறிய வார்த்தைகளிலேயே மறந்து விடு. அப்படி இருக்கையில் நீ ஏமாந்து போகமாட்டாய்.
உனக்கு கோபமும் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்ற ஏமாற்ற நிலையும் அவர்கள் மீது வெறுப்பும் வாழ்க்கையில் ஓர் வெற்று இடத்தையும் உணர மாட்டாய். உன்னை நான் என் வசம் இழுக்கக் காரணம், நீ மனித நேய உள்ளம் கொண்டவர் என்பதால்தான்.
நான் செய்யும் லீலைகளை நீ தக்க சமயத்தில் உணர்வாய். உன்னுள் எழும் தேவை இல்லாத கெட்ட எண்ணங்களை நினைத்து நமக்கு இவ்வளவு கெட்ட எண்ணங்களா என்று உன்னை குழப்பிக்கொள்ளாதே. அந்த எண்ணங்களின் தோற்றத்திற்கு காரணம் நல்ல எண்ணங்களின் உயர்வு தன்மை உணர்த்தவே.
உன் வாழ்க்கையில் நீ நிதானத்தை பொறுமையை நம்பிக்கையை கடைப்பிடி ஏனென்றால் சோதனை முடியும் காலகட்டத்தில் நீ நிற்கிறாய் அது உன்னை சீண்டிப் பார்க்கும் பொறுமை நிதானம் இவை சோதிக்கும் படி நடக்கும் நம்பிக்கையை கெட்டியாக பிடித்துக் கொள். என் பிள்ளை விழும் தருவாயில் இருந்தாலும், என் கரங்கள் மேலொங்கி உன்னை தாங்கி, வெற்றியுடன் கூடிய நிம்மதியான சிம்மாசனத்தில் உன் வாழ்க்கை என்னும் அரச சபையில் உன்னை ஏளனமாக பார்த்து நகைத்து, உன்னை காயப்படுத்தியவர்கள் முன்னிலையில் அரசனாக அரசியாக அமர வைத்து அழகு பார்ப்பேன்.
என் உயிருக்கு மேலாய் நான் என் நெஞ்சில் உயிராய் சுமக்கும் என் கருவின் சிசு நீ. உன்னை என் கண்ணில் வைத்து காப்பேன் உன் அம்மாவாக அப்பாவாக என்றும் உன்னை அரவணைத்து துணையாய் இருந்து அன்பு புரிவேன் !!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

எது வந்தாலும் நீ கலங்காதே



"அன்புக் குழந்தையே!. சோதனைக் காலம் வரும்போது நீ பயப்படாதே, கலங்காதே. தந்தை தன் பிள்ளைகளை கண்டித்து நடத்துவதைப் போல இறைவனான நானும் நான் நேசிக்கிறவர்களைக் கடிந்து  நடத்துகிறேன். இதைப் புரிந்து கொண்டு நீ நடக்கும்போது நான் உன்னை பொறுப்பு எடுத்துக்கொள்வேன். எதற்கும் நீ பயப்படாதிருப்பாய். எப்போதும், எல்லாவற்றுக்காகவும் சந்தோஷமாக இரு! நான் உன்னோடு இருப்பதால் நீ அனைத்தையும் ஜெயிக்கப்போகிறாய். நான் உனக்கு ஜெயம் தருவேன் கஷ்டம் வந்தால் துவண்டு போகாதே அது உன் பூர்வ ஜென்ம கர்மா இன்பத்தை எவ்வாறு சந்தோசமாக ஏற்கின்றாயோ அதே போல் கஷ்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்று என் மீது போட்டு விடு நான் பார்த்து கொள்கிறேன் கவலைப்படாதே  நான் உன்னோடு இருக்கிறேன். பயப்பாடதிரு. பலம் கொண்டு திடமான மனதோடு இரு .  உன்னை ஒரு போதும் நான் கை விடவே மாட்டேன் . உன்னை விட்டு விலகுவதும் இல்லை கை விடுவதும் இல்லை. நீ கலங்காதே எது வந்தாலும் நீ கலங்காதே, சோதனையைத் தருகிற நான் அதை தாங்கும் சக்தியையும் தருவேன் தப்பிக்கிற வழிகள் பலவற்றையும் உருவாக்கி அளிப்பேன். உனக்கு பின் இருப்பது நான். உன்னை கைவிட மாட்டேன்.."!

Wednesday, May 23, 2018

நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து?





பாபாவின் மற்றொரு அடியவரான காகா மஹாஜனி என்பவர் ஒருமுறை வயிற்றுப்போக்கால் அவதியுற்றார்.  பாபாவுக்குத் தனது சேவை தடைப்படாமல் இருக்க, ஒரு மூலையில் பானையில் தண்ணீரை வைத்துவிட்டு, பாபா கூப்பிடும்போதெல்லாம் செல்வார்.  சாயிபாபா அனைத்தையும் அறிந்தவராயிருப்பதால் தனது வியாதியையும் அவர் சீக்கிரம் குணப்படுத்துவார் என்று எண்ணிய காகா அதைப்பற்றி எதையுமே பாபாவிடம் தெரிவிக்கவில்லை.  மசூதிக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கும் தாழ்வாரத்தின் வேலை, பாபாவால் அனுமதியளிக்கப்பட்டுவிட்டது.  ஆனால் உண்மையில் வேலை தொடங்கியவுடன் பாபா கொந்தளிப்புற்று பலமாகக் கூச்சலிடத் தொடங்கினார்.  எல்லோரும் ஓடினார்கள்.  காகாவும் ஓடினார்.  பாபா அவரைப் பிடித்து அங்கேயே உட்கார வைத்தார். 

பின்னர் நேரிட்ட குழப்பத்தில் யாரோ ஒருவர் ஒரு சிறிய நிலக்கடலைப் பையை விட்டு ஓடியிருந்தார்.  பாபா கைநிறையக் கடலைப் பருப்புக்களை எடுத்து தமது கைகளால் அவற்றைத் தேய்த்து, தோலை ஊதி சுத்தமான கடலைப் பருப்புக்களை காகாவிடம் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்.  திட்டுவது, கடலையைச் சுத்தம் செய்வது, காகாவைச் சாப்பிடச் சொன்னது என்பன சமகாலத்தில் நடைபெற்றன.  பாபா தாமே சிலவற்றைச் சாப்பிட்டார்.  பையில் உள்ளவை தீர்ந்ததும், பாபா அவரைத் தாம் தாகமாய் இருப்பதால் தண்ணீர் கொணரச் சொன்னார்.  பின்னர் பாபா சிறிது தண்ணீர் அருந்திவிட்டு, காகாவைத் தண்ணீர் குடிக்கும்படி கூறினார்.  பாபா அப்போது, "உனது வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது.  நீ இனிமேல் தாழ்வாரத்தின் வேலையைக் கவனிக்கலாம்" என்று கூறினார்.

இதற்கு இடையில் ஓடிப்போனவர்கள் எல்லாம் திரும்பிவந்தனர்.  தனது வயிற்றுப்போக்கு நின்றுபோன காகாவும் திரும்பி வந்து வேலையில் கலந்துகொண்டார்.  நிலக்கடலையா வயிற்றுப்போக்கு மருந்து?  நிகழ்கால மருத்துவப்படி நிலக்கடலை வயிற்றுப்போக்கை அதிகரிக்கும்.  அதைக் குணப்படுத்தாது.  பாபாவின் மொழிகளே இவ்விஷயத்திலும், மற்ற விஷயங்களிலும் உள்ள உண்மையான சிகிச்சையாகும்-சாயி சத்சரிதம் அத்தியாயம்-13🌷🙏🏻

எனது சிறப்பியல்பு


கர்மம், ஞானம், யோகம், பக்தி என்ற நான்கு வழிகள் நம்மைத் தனித்தனியே கடவுளிடம் இட்டுச்செல்கின்றன.  இவைகளில் பக்திவழி முட்கள், பள்ளங்கள், படுகுழிகள் நிறைந்ததாயும்,  கடப்பதற்கு மிகவும் கடினமாயும் இருக்கிறது.  ஆனால் நீங்கள் சாயியையே சார்ந்து, குழிகளையும், முட்களையும் விலக்கி நேராக நடப்பீர்களானால், அது உங்கள் குறிக்கோளிடத்தில் (கடவுளிடத்தில்) அழைத்துச்செல்கிறது.  இவ்வாறாக சாயிபாபா நிச்சயம் கூறுகிறார்.  அந்தர்யாமியாய் இருக்கிற பிரம்மத்தைப் பற்றியும், இவ்வுலகைப் படைத்த அவரின் சக்தியைப் பற்றியும் (மாயை) அவ்வாறு உண்டாக்கப்பட்ட உலகத்தைப் பற்றியும் தத்துவம் பேசி, இவை மூன்றும் முடிவில் ஒன்றே என்றும் எடுத்துரைத்த பின்னர் பக்தர்களின் நலனுக்காக உத்திரவாதம் அளிக்கும் கீழ்கண்ட சாயிபாபாவின் மொழிகளை ஆசிரியர் கூறுகிறார். 

"உணவு, உடை இவற்றைப் பொறுத்தமட்டில் வறுமையோ, இல்லாமையோ எனது அடியவர்களின்  வீட்டில் இருக்காது.  தங்கள் மனதை எப்போதும் என்மீது ஸ்திரப்படுத்தியவர்களாய் என்னையே முழு இதயத்துடன் வழிபாடு செய்யும் அடியவர்களின் நலன்களை எப்போதும் கவனிப்பதே, எனது சிறப்பியல்பு.-சாயி சத்சரிதம்

Tuesday, May 22, 2018

என்னுடைய ஆசிர்வாதங்கள் உன்னுடன் எப்போதும் இருக்கும்.



சதா சர்வகாலமும் என்னையே நினைத்து, என் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாலும்உன் மனதில் ஆழமாக புதைந்துக்கிடக்கும் கவலைகளில் இருந்து, உன்னால் வெளியில் வர இயலாமல் தவிக்கும் நிலையைப் பார்த்து என் நெஞ்சம் பதறுகிறது. நீயும் நான் கூறும் அறிவுரைகளின்படித்தான் நடக்கின்றாய். அதில் குறையில்லை. ஆனால் நடந்து முடிந்தவைகளை உன்னால் மறக்க முடியாமல், நித்தமும் நீ கண்ணீர் விடுவதைப்பார்க்க எனக்கு சக்தியில்லை. 

நடக்கக்கூடாததெல்லாம் நடந்துவிட்டது. துன்பங்களை எல்லாம் சந்தித்து முடித்துவிட்டாய். நீ வாழவே கூடாதுஎன்று நினைத்தவர்களுக்கு எதிரில் தைரியமாக நின்று சாதிக்கும் நீ, தனிமையில் கோழையைப் போன்று அழுகின்றாய். அழாதே! தைரியமாக இரு.

உன்னை இந்த நிலைக்கு உட்படுத்தியவர்கள் தன் நிலை உணரும் காலத்தை உருவாக்குவேன். நீ இழந்ததையெல்லாம் வேறு வடிவில் உன்னை வந்தடைய வழிவகை செய்வேன். அத்தனைக் கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டு சாயியே துணை! சாயியே சாஸ்வதம்இன்னும் என் நிலை இறங்கினாலும் சாயி இருக்கிறார் என்று இருக்கிறாயே, உன்னை நான் எப்படி கைவிடுவேன். நீ பார்த்துக் கொண்டே இரு. உனக்குக் கஷ்டங்களை உருவாக்கியவர்கள் கண் பார்க்க உன்னைக்கோபுரத்தின் உச்சியில் அமர வைக்கின்றேன்.

உன் குழந்தைகளால் உன்னை மேன்மையடையச் செய்கிறேன். என்னை நம்பு. இது என் சத்தியவாக்கு. எல்லாவற்றையும் மனதிற்கு அடியில் புதைத்து வைராக்கியத்துடன் வலம் வா. நீ சாயியின் குழந்தை. உன்னை அசைத்துப் பார்க்கிறவர்களை சாயி அசைத்துப் பார்ப்பார் என்ற நம்பிக்கையுடன் இரு. நீ நிச்சயம் நல்ல நிலைமைக்கு வருவாய். என்னுடைய ஆசிர்வாதங்கள் உன்னுடன் எப்போதும் இருக்கும்.
  
"சாயியின் முன்னால் எவன் சாஷ்டாங்க சரணம் செய்து, தனது இதயத்தையும் உயிரையும் அவரிடம் சமர்ப்பிகிறானோ, அவன் வாழ்க்கையின் நான்கு முக்கிய குறிக்கோளாகிய அறம்(தருமம்), பொருள்(செல்வம்), இன்பம்(ஆசை), வீடு(முக்தி) இவைகளை எளிதில் அடைகிறான்".

குரு தேவையா?



இக்கேள்விக்கு பாபாவின்_பதில்
ஹேமத்பந்த், பாபா இவ்விஷயத்தைப்பற்றி என்ன சொன்னார் என்று எவ்விதக் குறிப்பும் விட்டு வைக்கவில்லை.  ஆனால் காகா சாஹேப் தீஷித் இவ்விஷயத்தைத் தனது குறிப்புகளில் பதிப்பித்துள்ளார்.   ஹேமத்பந்த், சாயிபாபா சந்திப்பின் அடுத்த நாளில், பாபாவிடம் காகா சாஹேப் தீஷித் சென்று, 
”நான் ஷீர்டியை விட்டுப்போக வேண்டுமா ?” எனக்கேட்டார்.  
பாபா "ஆம்" என்றார்.  
பிறகு "எங்கே போவது" என கேட்டார்.  
பாபா "உயர... மேலே...!" என்று கூறினார். 
"வழி எப்படிப்பட்டது" என பாபாவிடம் வினவினார்.  
பாபா கூறினார்,  "அங்கே போவதற்குப் பல வழிகள் உள்ளன.  இங்கிருந்தும் (ஷீர்டியிலிருந்தும்) ஒரு வழி உள்ளது.  பாதை கடினமானது.  புலிகளும், ஓநாய்களும் வழியிலுள்ள காடுகளில் உள்ளன".  நான் (காகா சாஹேப் தீஷித்) கேட்டேன், "ஒரு வழிகாட்டியை நாம் அழைத்துச் சென்றால் என்ன?"  அதற்குப் பாபா கூறினார், "அப்போது கடினம் இல்லை.  புலி, ஓநாய், படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்கி, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அழைத்துச் செல்வார்.  வழிகாட்டி இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது."

இந்நிகழ்ச்சியின்போது தாபோல்கரும் அறை அருகே இருந்தார்.  இதுவே குரு அவசியமா என்னும் விவாதத்திற்கு பாபாவின் பதில் என்று எண்ணினார்.

சாயிசத்சரிதம் அத்:2

Monday, May 21, 2018

சாய் சத்சரித்திரம் பயன்படுத்த ஒன்பது சிறந்த வழிகள்



எப்படி சாயி பக்தர்கள் ஸ்ரீ சாயி சத்சரித்த்தினை பயன்படுத்த வேண்டும் என்பதில் உள்ள சிறந்த ஒன்பது வழிகளை இங்கே பார்க்கலாம்:
1. சாயி சத்சரித்திரம் புத்தகத்தில் (அது என்ன மொழி புத்தகமாக இருந்தாலும் பரவாயில்லை), அதனை ஒரு  அழகான துணியினால் மடித்து, பாபா  புகைப்படம் அல்லது சிலை அருகே (வீட்டில் என்ன வைத்து வழிபடுகிறோமோ அதன் முன்னர்) மிகப் புனிதமாக கருதி வைத்து வழிபட வேண்டும் .
2. வீட்டிலோ அல்லது வேறு எங்கு இருந்தாலும், தினசரி இரவு எப்போதும் தூங்க செல்லும் முன்,  ஒவ்வொரு இரவும் சாயி சத்சரித புத்தகத்தின் ஒரு சில பக்கங்களை படிக்க வேண்டும் . ஒவ்வொரு பக்தரும் தூங்கச் செல்லும் முன் கடைசியாக சிந்தனை என பாபாவினை மனதில்  வைக்க முயற்சிக்க வேண்டும் .
3. ஏதேனும் சங்கடம் ஏற்படின், ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது போல், ஒரு வாரம் தீவிரமாக வாசிக்க வேண்டும் முடிந்தவரை வாசிப்பு ஒரு வியாழக்கிழமை அல்லது வேறு சில சிறப்பு நாட்களில் தொடங்க வேண்டும்.  சிறப்பு நாட்கள் என்றால் ராமநவமி , தசரா , குருபூர்ணிமா , ஜன்மாஷ்டமி , மஹாசிவராத்திரி , நவராத்திரி , முதலியன ஆகும். தொடர்ந்து படித்து முடித்த ஏழாவது நாளில்  , ஒரு  ஏழை அல்லது ஆதரவற்ற ஒருவருக்கு உணவளிக்க வேண்டும்.  .
4. ஏதாவது ஒரு கோயிலில்,   தனிமைப்படுத்தப்பட்ட மூலையில் அல்லது பாபா சிலை அல்லது புகைப்படம் / ஓவியம் முன்னால் உட்கார்ந்து படிக்க வேண்டும் . மற்ற மக்கள் இருந்தால்,  குழு வாசிப்பு முறையில்  எப்போதும் அவற்றை படிக்கவும் ஊக்குவிக்க வேண்டும் .
5. எப்போதேல்லாம் அல்லது எங்கெங்கெல்லாம் சாத்தியப்படுகிறதோ அந்த கோவில்களில் விசேட நாட்களில் சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை தொடர்ந்து படிக்க வேண்டும்.  அங்கு வரும் பக்தர்களை ஒவ்வொருவராக ஒவ்வொரு பக்கத்தினை படிக்கச்செய்யலாம். நாம ஜெபம் செய்ய ஊக்குவிக்கலாம். கோவிலுக்கு வரும் குழந்தைகளை சாயி சத்சரித்திர  புத்தகத்தை படிக்க வைக்க ஏற்பாடு செய்யலாம். ஸ்ரீ சாயி சத்சரித்திரத்தினை  அடிப்படையாக வைத்து கேள்வி பதில் போட்டிகள் கோவில்களில் ஏற்பாடு செய்து நடத்தலாம்.

6. வயதானவர்கள், உடல் நலிவு அடைந்தவர்கள் மற்றும் முதுமையால் மரணத்தினை நெருங்குபவர்கள் அருகமர்ந்து சாயி சத்சரித்திரத்தினை வாசிக்க அவர்கள் அனைவருக்கும் மன அமைதி கிடைக்கும்.
7. ஸ்ரீ சாய் சத்சரித்திரம் புத்தகம் எளிய  நியாயமான விலையில் பல் மொழிகளிலும் ஷீரடியில் எளிதாக கிடைக்கும் . எனவே , ஷீரடி சென்று வரும் பக்தர்கள்,  இலவசமாக மக்கள் மத்தியில் விநியோகிக்க அவருடன் சில பிரதிகளை வாங்கி கொண்டு வர வேண்டும்
8. மன வேதனை மற்றும் பிரச்சனைகளில் உள்ள ஒருவர் மனத்தூய்மையுடன் சாயி சத்சரித்திரத்தினை படிக்கும் போது அவரது பிரச்சனைகட்கு உண்டான பதில்கள் மட்டுமல்ல,  மிகப்பெரிய மன ஆறுதலும் அவருக்கு கிடைக்கும்.  மேலும் , அவருக்கு  பாபா மேல் உள்ள  நம்பிக்கை மேன்மேலும் வளரும்.
9. சாயி சத்சரித்தினை எழுதிய ஹேமாட்பந்து எப்படி சாயிபாபாவினால் ஈர்க்கப்பட்டு பாபாவின் அருளுக்கு பாத்திரமானாரோ , அதே போன்று சாயி சத்சரித்திரம் படிக்கும் ஒவ்வொருவருக்கும் பாபா அவர்களின்  தெய்வீக அனுபவம் கிடைக்கும் மற்றும் பாபா அவர்களின் அருளுக்கும் பாத்திரமாவோம்.  .

ஸ்ரீ சாயி சத்சரித்திரம் சாயி பக்தர்களால்  கீதை மற்றும் பைபிள் போன்று கருதப்படுகிறது.

நாம் பாபாவை நம்ப வேண்டும்




நமக்கு எது சிறந்ததென்று பாபாவிற்குத் தெரியும். எனவே சந்தேகமோ, கேள்வியோ இல்லாமல் நாம் அவரை நம்ப வேண்டும். பாபாவைச் சந்தித்ததும் அவரது குரு செய்த முதல் செயல், மிகுந்த சவாலான, சோதனையான நிலையில் அவரை வைத்ததுதான். பொதுவாக பாபா பக்தர்களின் அனுபவங்களை எடுத்துக்கொண்டால், பாபா நம் வாழ்வுக்குள் வரும்போது, நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்காக நம்மைப் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார். அவரால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய தகுதி நம்மிடம் உள்ளதை நாம் நிரூபிக்கவேண்டும். நமது நம்பிக்கையும் நமது தகுதியும், கடினமான சோதனைகளாலும் கொந்தளிப்பான புயல்களாலும் பரிசோதிக்கப்படுகின்றன. நமது இருப்பையே தலைகீழாக அசைத்துவிடுகிறார். பரிசோதனைகளைத் தாங்க இயலாதவர்கள், பாபாவை விட்டு விலகி, வீசும் காற்றைத் தாக்குப்பிடிக்க இயலாத பலவீனமான இலைகளைப்போல் வாடிப்போய் வீழ்ந்துவிடுகிறார்கள். ஆனால், தீவிர நம்பிக்கையுடனும் கேள்வி கேட்காத சரணாகதியுடனும் பற்றிக்கொள்பவர்கள், துன்பமான காலங்களைக் கூட புன்னகையுடனும், பாபாவிடம் தளராத நம்பிக்கையுடனும் எதிர்கொள்பவர்கள், அவரது அன்பையும் ஆதரவையும் நிரந்தரமாகப் பெறுவார்கள்.

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...