Thursday, May 17, 2018

பாபாவின் அன்பு



*நமது குரு பாபாவின் அன்பு நம்மை உணர்ச்சி வசப்பட வைக்கும் அன்பு. சமுத்திரத்தில் முங்கி எழுந்து அதன் புனித நீரில் கலந்துவிட்ட அனைத்து நதிகளின் ஆசிர்வாதங்களையும் நாம் பெறுவதைப் போன்றது அது. அவரது இதமான வெப்பத்தின் வெளிச்சத்தில் குளிப்பதைப் போன்றது. அவரது பாச மழையில் நனைவதைப் போன்றது. அனைத்தும் ஒரே சமயத்தில் நிகழ்வதற்கு ஒப்பானது.

*அவரது அன்பு நாம் வாழ்வைப் பார்க்கும் பார்வையை மாற்றுகிறது. நமது உள் மனதின் மையத்தை மாற்றுகிறது. மேம்பட்ட மனிதர்களாக நம்மை ஆக்குகிறது. அக்கரை, பகிர்தல், இரக்கம் நிறைந்தவர்களாக ஆக்குகிறது. வலி தனது குத்தலை இழக்கிறது .

* எவ்வளவு கொந்தளிப்பு உள்ளதாக இருந்தாலும், எந்தப் புயலும் நம்மையோநமது வாழ்வையோநமது உலகையோ பாதிப்பதில்லை. ஏரியைப்போல நமது இதயத்தை அமைதியாகவும் நமது வாழ்வை ஆசிர்வாதமும் நிம்மதியும் நிரம்பியதாகவும் ஆக்குகிறது பாபாவின் அன்பு.

*பாபாவின் அன்பு தனித்தன்மை வாய்ந்தது. விவேகத்தை அளித்து அன்பைப் பகிரும் அவரது விழிகளும் இப்படிப்பட்டதுதான். நமக்கு உதவி செய்து நம்மை வழிநடத்தசில சமயங்களில் செய்திகளையும், குறிப்புகளையும் கொடுப்பார்.

*நமது கேள்விகளுக்கான பதில்களை தனது சத்சரிதத்தின் மூலமாக சில சமயங்களில் அளிப்பார். ஒரு முதியவர் போல் நம்மைக் காண அவர் வருவதும் உண்டு. இதர சமயங்களில் எந்த வடிவத்திலும் வருவார். சில அழகான சந்தர்ப்பங்களில் நம்மை ஆசிர்வதிக்கவோ முக்கியமான உபதேசங்களைப் பகிர்ந்துகொள்ளவோ,  நமது கனவில் தோன்றுவார்.

*அவரது வழிகள் புரிந்து கொள்ள முடியாதவை. அவரது அணுகுமுறைகள் ஏராளமானவை. ஆனால் இலக்கு ஒன்றுதான். நல்லதுகெட்டது இரண்டிலும், இரவிலும்பகலிலும், இன்பத்திலும்துன்பத்திலும் எப்போதும் நம்முடன் இருப்பது  மட்டும்தான் .

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...