Wednesday, May 16, 2018

பாபாவின் லீலைகள்



பாபாவின் லீலைகள் கலியுகத்தில் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளது. பாபாவின் வார்த்தைகளின்படி அவர் "இவ்வுலகை விட்ட பிறகும் சர்வ சக்தியுடன் செயல்படுகிறார்" எங்ஙனம் ,அவர் பூத உடலுடன் இருந்தபோது, உதியினால் நோயைத் தீர்த்தாரோ, அதேபோல் இன்றும் நோயைத் தீர்த்து வருகிறார். ஒருமுறை, ஒரு பக்தர் தனது வேலைகளையெல்லாம் முடித்து இரவில் உறங்கச் செல்லும்போது, உடலில் சிறிது அரிப்பு ஏற்பட்டது. நேரம் ஆக ஆக அவரது உடலில் அதிகம் அரிப்பும், வீக்கமும் ஏற்பட்டு உடல், கை, கால்கள், முகம் என அனைத்தும் நன்கு வீங்கி விட்டது. அவரின் தாய்,தந்தை, உறவினர்களோ மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றனர். ஆனால் அவரோ என் பாபாவின் மீது கொண்ட, "நம்பிக்கை" என்னைக் காப்பாற்றும் என்று கூறி," உதி" யினை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு படுத்துவிட்டார். காலையில் எழுந்த அம்மனிதர் ஆச்சரியமடைந்தார். அவரது உறவினர்களும் அவ்வாறே ஆச்சர்யடைந்தனர். காரணம்! அவரின் உடலில் எங்குமே வீக்கம் இல்லை .நோயுற்ற எந்த அறிகுறியும் இல்லை. இதிலே அவரயக் காப்பாற்றியது சாயியின் மீது வர் கொண்ட "நம்பிக்கையே" என்பது நிரூபணமானது ஒரு பக்தர் பாபாவை முழுமையாக நம்பினால் அவரை பாபா தாங்குகிறார்.அதுமட்டுமல்ல அவரது வேண்டுதல்கள், தேவைகள்போன்றவை சாயிநாதனால் நிரைவேற்றப் படுகின்றது.ஜாதகம் யாது சொல்லினும் அதை சாதகம் செய்பவர்,நம் சாயி பாபா.இந்நிகழ்வுகள் அவர் வாழ்ந்த காலத்தில் மட்டுமன்றி, இன்றளவும நடைபெற்று வருகின்றது. ஓம் சாய்ராம்.

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...