சாய்பாபாவின் தரிசனம் எனக்கு கிடைக்குமா ? மேலும், என் அன்பிற்குரிய பாபாவுடன்
நான் இரண்டறக் கலப்பது எப்போது ? இது
பக்தர்கள் பலருக்கும் மனதுள் எழும் கேள்வியாகும்.
ஒரு சத்குருவை உடல் உருவில்
தரிசிப்பது என்பது, அவர் பூதஉடலில்
இருக்கும்போது மட்டுமே சாத்தியம். அதன்பின்பு, ஆழ்ந்த தியானத்தின் மூலம்
தமக்குள்ளேயே அந்தர்முகமாக மட்டுமே அவரின் தரிசனத்தை ஒருவர் காண முடியும். ஸ்ரீ சாயியிடம் அவருடைய 'ஸ்வரூப தரிசனம்' தந்து உங்களுக்கு ஆசிகள்
வழங்கும்படி எப்பொழுதும் வேண்டிக்கொள்ளுங்கள்.
பாபா அதி சூட்சுமமான வடிவில் இருக்கிறார். பிரபஞ்சம்
முழுமையும் சக்தி வடிவமாய் எங்கும் பரவி நிறைந்து நிற்கிறார். கணக்கில்லாப்
பிறவிகளின் மூலம் ஏற்படும் முன்னேற்றத்தால் ஒரு மனிதன் தன் ஸ்தூலத்திலிருந்து
விடுபட்டு உடலற்ற சக்தி ரூபமான ஒரு நிலையை, தானே அடைந்து பாபாவுடன்
இரண்டறக் கலக்க முடியும். இப்பரிணாம வளர்ச்சி முழுமையடைய நெடுங்காலம் கூட ஆகலாம்.
No comments:
Post a Comment