Sunday, May 13, 2018

ஏறு தழுவுதல்



என் அன்பு குழந்தையே!
உன் மனதில் ஓடும் எண்ணங்களை நான் அறிவேன் உன்னை கர்மா என்னும் பந்து அடித்துக் காயப்படுத்தி வாழ்வில் இருக்கும் நிம்மதியை பறித்துக் கொண்டது. அதனால் நீ படும் அவஸ்தைகள் என்னால் காண முடியவில்லை. நாளுக்கு நாள் உன் நிம்மதி துளைந்து போவதை பார்த்து, நான் வேதனை அடைகிறேன்.
ஏறு தழுவுதல் என்னும் விளையாட்டை நீ அறிந்து இருப்பாய். அதில் முன்னேறிப் போனாலும் மீண்டும் மீண்டும் றுக்கி விடும். என்னால் முடியாது என்று சொல்பவன், அந்த விளையாட்டில் இருக்கும் கருத்தை உணரும் வாய்ப்பைத் தவற விடுகிறான்.
விளையாட்டில் இருக்கும் விடா முயற்சியில்தான் அவனுடைய தன்னம்பிக்கையும், அவன் வாழ்வில் முன்னேறி முன்னால் போகும் போக்கும் உடையவனா என்று தெரியும். அதனால் விடாமுயற்சி செய். நிறைய தடைகள் வரும். அதை அடித்து நொறுக்கி புத்துணர்வுடன் நிமிர்ந்து நில். உன் வாழ்க்கையில் நிச்சயம், நான் உனக்கு வெற்றியையும் நிம்மதியும் அளிப்பேன். உன் வாழ்க்கையில் உன் அம்மாவாக அப்பாவாக என்று துணை நிற்பேன்!!!
இப்படிக்கு
உன் சாய்அப்பா!!!

No comments:

Post a Comment

குரு நம்பிக்கை

 ' குருவை நம்பு. ஆறுவித சாஸ்திரங்கள் அவசியம் இல்லை ' என்றார் பாபா. அவ்விதமாகத்தான் தாம் பரிபூரணமடைந்ததாக பாபா கூறினார். எனவே சாய்பா...